ஈஸ்டர் முட்டை
ஈஸ்டர் முட்டை கிறிஸ்துமஸ் என்றால் கேக் . பொங்கல் என்றால் கரும்பு. தீபாவளி என்றால் விளக்கு. ஹோலி என்றால் வண்ணம். இப்படி சில அடையாளங்களைக் கொடுத்துப் பண்டிகைகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஈஸ்டர் என்றதும் நினைவுக்கு வருவது எது என்றால் கிறிஸ்து கல்லறையில் இருந்து உயிர்த்தெழுதல் என்று சட்டென்று சொல்லி விடுவோம். கிறிஸ்துமஸ் கேக் போலவே ஈஸ்டருக்கும் ஏதாவது ஒரு பொருள் சிறப்பானதாக இல்லாமலா இருந்திருக்கும்? அந்தத் தேடலில் கையில் வந்து அகப்பட்டது ஒரு முட்டை. ஆஹா....அழகியதொரு முட்டை அந்த முட்டையைக் கையில் எடுத்தபடி ஈஸ்டர் நாட்களை நோக்கிப் பயணித்தேன். இந்த வருடம் ஈஸ்டர் கொண்டாட்டம் முட்டையோடு தொடங்கட்டும் என்று மனக்கணக்குப் போட்டு வைத்தேன். இந்த வருடம் என்ன எல்லா வருடமும் ஈஸ்டர் என்றால் முட்டைதான் நினைவுக்கு வரும். வர வேண்டும் . கிறிஸ்துமஸ் நாட்களில் எப்படி கேக் முக்கியத்துவம் பெறுகிறதோ அதுபோல ஈடஸ்டர் நாளில் முட்டை சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. அதற்கான வரலாற்றுத் தேடல...