Posts

Showing posts from June, 2021

சவாலே சமாளி

      சவாலே சமாளி "இருட்டு வீட்டுல குருட்டு எருமை   என்ன செய்யுது?"   குரல் கொடுத்தபடியே அடுப்பங்கறைக்குள்   வந்தாள் புவனா.   "ஒண்ணுமில்லையே....."உதட்டைப் பிதுக்கி கையை விரித்தாள் மாலதி "என் அப்பன் குதுலுக்குள்ள இல்ல என்கிற மாதிரி இல்ல இருக்கு... நம்ப முடியலிய.... ஏதோ ஒண்ணு இருக்கு .... வாயைக் காட்டு....வாயைக்காட்டு...." விடாமல் கேள்வி கேட்டாள் தங்கை  புவனா. "காவோலையில என்னதோ ஓடுன மாதிரி சடசடன்னு பேசிகிட்டே  இருக்க ....பூ மலர்ந்து கெட்டது. வாய் விரிஞ்சு கெட்டது ஞாபகம் வச்சுக்கோ... என் வாயில ஒண்ணும் இல்லை. பாரு...பாரு...நல்ல பாத்துக்க தாயி......." "வாய்க்குள்ள ஏதோ இருக்கு அதுதான் வாயைத் திறக்க மாட்டேங்கிற... ஒண்ணுமில்லன்னா வாயை நல்லா திறக்க வேண்டியதுதானே," "இன்னா பாரு...ஆ...ஆ ... முதலை மாதிரி  திறக்கட்டுமா.... நல்லா பார்த்துட்டியா?...பார்த்துட்டியா?" வாயைப் பிளந்தாள் மாலதி. " வாயை மூடு....சகிக்கல... நீ விழுங்கிட்ட....ஏதோ தப்பு செஞ்ச மாதிரிதான் தெரியுது....ம் கண்டு பிடிக்கிறேன்." "இவ பெரிய...

மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி

  மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி " வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோநோக்கி வாழும் குடி " என்கிறார் வள்ளுவர். வானம் வழங்கும் மழையை நம்பித்தான் உலக உயிர்கள் வாழ்கின்றன. மன்னவனின் செங்கோலை நம்பித்தான் குடிமக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். " தாயைப் போல பிள்ளை; நூலைப் போல சேலை " என்பார்கள். பிள்ளைகள் தன் தாய் எத்தகைய குணநலன்களைப் பெற்றிருந்தாரோ அதனைப் போன்ற குணநலன்களையே பெற்றிருப்பர். அதுபோல நூல் இருக்கும் தரத்திற்கு ஏற்பவே சேலையின் தரம் இருக்கும். இது நாம் அனைவரும் அறிந்த ஒரு பழமொழி. "மன்னன் எவ்வழி : மக்கள் அவ்வழி " என்றும் ஒரு பழமொழி உண்டு. மன்னன் நல்லவனாக இருந்தால் மக்களும் நல்லவர்களாக இருப்பர். மன்னன் கெட்டவனாக இருந்தால் மக்களும் கெட்டவர்களாகத்தான் இருப்பர். இதுதான் இதற்கான பொருளாக இருக்க முடியும். மன்னன் செங்கோல் தவறாது ஆட்சி புரிந்தால் நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருப்பர். அதனால் களவு, கொலை , கொள்ளை போன்ற எந்தவிதமான தீய செயல்களும் நடைபெற வாய்ப்பு இருக்காது.மன்னன் நம்மை பாதுகாத்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில்தான் மக்...

முரண் தொடை என்றால் என்ன ?

முரண் தொடை என்றால் என்ன ? எழுத்தை அசையாக்கி சீரமைத்து தளையால்  கட்டி அடிதொறும் தொடையால் அணி செய்து படைப்பது சிறந்த செய்யுளாகிறது. இப்படிப்பட்ட பாடல்கள்  படிப்போரைக் கட்டி இழுக்கும். மறுபடி மறுபடி  எனைப்படி என்று என்று அழைக்கும். தூக்கத்திலும் அசைபோட வைக்கும். எழுத்து அசை  சீர் தளை அடி  தொடை  ஆகிய ஆறு உறுப்புகளால் செய்யுள் கட்டப்படுகிறது. இவற்றுள் தொடை என்ற உறுப்பின்கீழ் வரும் முரண் தொடை பற்றி காண்போம். அடிகளிலோ சீர்களிலோ  சொல்லோ பொருளோ  மாறுபட்டு அமைவது முரண் தொடை எனப்படும். எடுத்துக்காட்டாக  "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்." என்ற தொடரை எடுத்துக் கொள்வோமானால் முற்பகல் , பிற்பகல் என்று இரண்டு முரண்பட்ட சொற்கள் வந்துள்ளன. இவ்வாறு மாறுபட்ட பொருள்தரும் சொற்கள் அமைவதை முரண் தொடை என்கிறோம். நன்மை - தீமை இரவு  - பகல் காலை - மாலை இருள் - ஒளி மேடு _ பள்ளம் வாழ்வு - தாழ்வு இகழ்ச்சி - புகழ்ச்சி இன்னா - இனிய இன்பம் - துன்பம் கருமை - வெண்மை இப்படி பொருள் மாறுபட்டு வருவதை பொருள் முரண் என்கிறோம். சொல்லும் பொருளும் முரணுதல் ஐந்து வகைகளில் அமைதல் உண...

மோனை வகைகள்

    மோனை வகைகள் "அடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனை " என்கிறது தொல்காப்பியம். அதாவது முதல் எழுத்து ஒன்றிவர  தொடுப்பது மோனை எனப்படும். இன எழுத்துக்கள் ஒன்றுக்கொன்று மோனையாக வருதலும் உண்டு. இன எழுத்துகளில் உயிர் எழுத்துக்களுக்கு மூன்று இனங்களும் மெய் எழுத்துக்களுக்கு மூன்று இனங்களும் உண்டு. உயிரெழுத்து இனங்களாவன: 1.  அ , ஆ , ஐ , ஔ 2. இ , ஈ , எ , ஏ ,யா 3  . உ , ஊ , ஒ , ஓ  மெய்யெழுத்து இனங்களாவன :  1  . ஞ் , ந்  2 .  ம்  , வ்  3 . த் , ச்  இனி மோனை வகைகளைப் பார்ப்போம். மோனை இரண்டு வகைப்படும். 1 . அடி மோனை 2. சீர் மோனை  அடிமோனை :  பாடலின் முதல் அடியின் முதல் எழுத்து அடுத்த அடிகளின் முதல் எழுத்தாக  வருவது அடிமோனை எனப்படும். " த ன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்   த ன்னெஞ்சே தன்னைச் சுடும் " இக்குறளில் உள்ள இரண்டு அடிகளிலும் முதல் எழுத்து ' த 'என ஒன்றுபோல் வந்திருப்பதால் இது அடிமோனையாகும். சீர்மோனை :  ஓர் அடியிலுள்ள சீர்களின் முதல்  எழுத்து அனைத்தும் ஒன்றி வருவது  சீர் மோனை எனப்படும். " க ற்க ...

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்....

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து "                    குறள் :667 உருவு - வடிவம் கண்டு - நோக்கி, பார்த்து எள்ளாமை - இகழாதிருத்தல் வேண்டும் -வேண்டும் உருள் - உருளுகின்ற பெரு - பெரிய தேர்க்கு - வண்டிக்கு அச்சாணி - அச்சு, இரும்பு முளை அன்னார் - ஒத்தவர் உடைத்து -உடையது உருவத்தைக் கண்டு தாழ்வாக எவரையும் நினைக்க  வேண்டாம். உருண்டு ஓடும் பெரிய தேருக்கு  சிறிய அச்சாணி உதவுவது போன்று மன உறுதி உடையவர்கள் செயலால் உயர்ந்த செயல்களைச் செய்யக் கூடும். விளக்கம் :  செயல் உயர்வானதாக இருக்காக உருவம் காரணமாக இருக்காது. சிறிய அச்சாணிதான் அதனைக் கழற்றி விட்டு விட்டோமானால் தேர் குடை சாய்ந்து விடும். எவ்வளவு உயரமான தேராக இருந்தாலும் அதனை நிலை கொள்ளச்செய்து நிறுத்த உதவுவது தேரில் இருக்கும் சிறிய அச்சாணிதான். அதுபோலதான் யாரையும் இவர் எளியவர், இவர் சிறியவர், இவர் குள்ளமானவர், பார்க்க அழகில்லாதவர் என்று தகுதியற்றவர் என்று  குறைவாக எடைபோட்டுவிட வேண்டாம். சிறியவர்களாலேயும் பெரிய சாதனைகளைச் செய்ய முடியும். சிறி...

செல்லதாயி

                செல்லதாயி "ராசா...ராசா ராசா வந்திருக்காரா?  " வருகை பதிவேட்டிலிருந்து கண்களை எடுக்காமலே கேட்டார் சூப்ரவைசர் செல்வி.   "இதோ இருக்கேம்மா."   தட்டுத் தடுமாறி எழும்பினார் ராசா.     "வாங்க  வந்து கையெழுத்துப் போடுங்க"     அவசரப்படுத்தினார் செல்வி.      "வாங்க ...வாங்க.  எல்லோரும்    வரிசையாக வந்து கையெழுத்துப் போடுங்க."      செல்வி சொல்லியதுதான் தாமதம்      அனைவரும் வரிசையாக வந்து நின்றனர்.      ஒருவர் கையெழுத்துப் போடுவதும்   இன்னொருவர் கைரேகை பதிவு செய்வதும்   என்று முண்டியடித்து வேலை விறுவிறுப்பாக    நடந்ததுகொண்டிருந்தது.    " எல்லாரும் கையெழுத்துப் போட்டாச்சா? யாரும் பாக்கி இருக்கா ?" கேட்டபடியே பதிவேட்டை ஆய்வு செய்தார் செல்வி.   " செல்லதாயி....செல்லதாயி    செல்லதாயி வரலியா?"     கூட்டத்தில் செல்லதாயியைத் ...

தந்தையைக் கொண்டாடுங்கள்

                    தந்தையைக் கொண்டாடுங்கள் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை. உலக தந்தையர் தினம். "மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்" .மகன் தந்தைக்குச் செய்யத்தக்க உதவி யாதெனில் இவன் தந்தை  இவனை மகனாகப் பெறுவதற்கு என்ன தவம் செய்தாரோ?  என்று உலகம் புகழ்ந்து பேச வேண்டும். அந்தப் பெருமையை ஒரு மகன் பெற்றோருக்கு வாங்கித் தர வேண்டும் என்கிறார் வள்ளுவர்.  முந்நூறு நாள் சுமந்து முழு உலகை கண்முன் காட்டி முட்டி வரும் சொல்லுக்கு  முழு வடிவம் கற்பித்து, எட்ட நிற்கும் நிலவினையும் கட்டி இழுத்து வந்து கட்டிலில் கட்டி வைத்து , கதைகள் பல பேசி,  காதோடு உறவு கூறி, கன்னம் உரசி  கன்னல் மொழியாம் தாய்மொழியை அறிமுகம் செய்து ,  உயிராய் உணர்வாய் உலகமாய்  இருப்பவர் அம்மா.   நமக்கும் அப்பாவுக்குமான உறவு யார் இவர் என்பதுபோல புருவம் உயர்த்திப் பார்ப்பதிலேயேதான்  தொடங்கும். அப்பாவை அறிமுகம் செய்து வைத்தவர் அம்மா. அதன் பின்னர் நம் உலகம் அப்பாவைச் சுற்றிச் சுற்றியே  இருந்திருக்கும்...

இனிய உளவாக இன்னாத கூறல்....

    இனிய உளவாக இன்னாத கூறல்.... " இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று "                                         குறள் : 100 இனிய- இனிமை தருகின்ற உளவாக - இருக்கின்றபோது இன்னாத - தீமை தருபவை கூறல் - சொல்லுதல் கனி- பழம் இருப்ப - இருக்கும்போது காய் - பழுக்காத காய் கவர்ந்து -கொள்வது, உண்பது அற்று - அத்தன்மையது இனிமையான சொற்கள் இருக்கும்போது  அவற்றை விட்டுவிட்டு கடுமையான  சொற்களைப் பேசுதல் கனிகள் இருக்கும்போது அவற்றை உண்ணாது காய்களை உண்பற்கு ஒப்பானதாகும். விளக்கம் :  இனிமையான சொற்கள் ஏராளமாக உண்டு. அவற்றைத் தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆனால் சிலர் வாயிலிருந்து எப்போதும் கடுமையான சொற்கள் மட்டுமே வெளிவரும். எதெற்கெடுத்தாலும் கடுகடுப்பும் சிடுசிடுப்பும் மட்டுமே வெளிப்படும். என்ன சொன்னாலும் ஏறுக்குமாறாக இடக்குமடக்காக பேசுவர். பிறர் மனதைப் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு வார்த்தைகளைத் தேடித்தேடி குத்தி எடுப்பர். அவர்கள் எண்ணம் பிறரைக் காயப்படுத்த வேண்டும் எ...

வாங்க பழகலாம்

        வாங்க பழகலாம் கருவறையிலிருந்து எட்டிப்  பார்த்த பிஞ்சு குழந்தை சற்றே உடம்பு  சிலிர்த்துவிட வாங்க பழகலாம் ....வாங்க பழகலாம் வரவேற்பு பத்திரம் வாசித்தது             காற்று  நடக்க முனைந்த குழந்தை நடை  தடுமாறி விழ சற்றும் தயங்காது தாங்கி நின்று விழுந்து பழகு ...விழுந்து பழகு   பயிற்சிக் களம் அமைத்துத் தந்தது                  நிலம்  படித்த பாடம்   மனதில் பதியாமல்  மருட்சி கொண்டு விழித்தபோது   முயன்று பார்  ....முயன்று பார்  முதுகில் தட்டி எழுப்பியது             ஆசிரியரின் கரம்!  கற்ற கல்விக்கு  உற்ற வேலை கிடைக்காது  உள்ளம் வெந்து நொந்தபோது   வென்று வா....வென்று வா   விடாது துணை நின்றது                     அம்மாவின் குரல்!  சோதனை வந்து  சோர்ந்து வீழ்ந்தபோது  தோளோடு தோள் கொடுத்து   எழும்பி நில்...எழும...

பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து நறுமுகையோ குறுநகையோ தண்டலையோ தளிர் வனமோ வண்டலை மதிமுகமோ அன்றலர் தாமரையோ என்றன் ஐயம் தீருமுன்னே அகவை ஐம்பதென கைபேசி  மகவுனக்கு வாழ்துரைக்க... நெடுவரையன்ன  நெடியபுகழ் கண்டு நெடுநாள் வாழ்கவென காற்றைத்  தூதனுப்பி காதோடு கவி பாடுகிறேன் வாழ்க பல்லாண்டு...பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு... என்றென்றும் இன்றுபோல் இளநகை கொண்டு! பிறந்தநாள் வாழ்த்து நட்பா ...?.நல்லுறவா....? நவில இயலாதொரு பிணைப்பு நெஞ்சம் நிறைய உம் நினைப்பு எப்படி இப்படி என்றறியா வியப்பு நேரப்படி வந்ததிந்த பிறப்பு நேர்த்தியாய்த் தந்ததொரு வாய்ப்பு நிலனன்ன வளங்களைச் சுமந்து நீரன்ன உயிரொடு கலந்து நெடுவரையன்ன நெடியபுகழ் கண்டு வானன்ன வாழ்த்தும் வரம் கொண்டு வாழ்க ! பல்லாண்டு...பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு எம்  இதயங்களில் குடியிருந்து !

பிறந்தநாள் வாழ்த்து

    பிறந்தநாள் வாழ்த்து மொழியாய் வாழ்கின்ற முத்தமிழே! பொழியும் மழையாய் பொதிகைத் தென்றலாய் எங்கும் ஒளியாய் எவர்க்கும் நட்பாய்  இனிக்கும் கரும்பாய் சுவைக்கும் விருந்தோம்பல் தந்தாய்! சுற்றிவரும் சிற்றெறும்பாய்  உம் நினைவில்  சுற்றிட வைத்தாய்! எழுத்துக்கலையைக் கற்றிட வைத்தாய்! தமக்கையாய் தக்க துணை நின்றாய்! நினைக்கையில் நெஞ்சம் இனித்தாய் இன்றுபோல் என்றும் உவக்க நாளெல்லாம் நல்லவை நடக்க கடவுள் அருள் பொழிய மன்னுக பெரும நீயென மலர் தந்து மலர்க்கரம் கூப்பி  வாழ்த்துகிறேன்... வாழ்க பல்லாண்டு !

தமிழ்ச்சாமி

    தமிழ்ச்சாமி ரயில் நிலையத்துப் படிக்கட்டுகளில் சுமதி இறங்கிக் கொண்டிருக்கும்போதே ரயில் நிலையத்திற்குள் ரயில் நுழைவது தெரிந்தது. ரயிலைக் கண்டதும் கால்கள் தானாக வேகமெடுத்தன. எப்படியாவது பெண்கள் பெட்டியில்போய் ஏறிவிட வேண்டும்  என்று ஓட்டமெடுத்தாள். கூட்டம் அதிகமாக இருந்ததால் பெண்கள் அனைவரும் முண்டியடித்துக்கொண்டு ஏறிக்கொண்டிருந்தனர். இதோ ...கைக்கெட்டிய தூரம்தான். வண்டியில் ஏறிவிடலாம். அதற்குள் வண்டி மெதுவாக நகரத் தொடங்கியது. எப்படியோ கம்பியை எட்டிப்பிடித்து வண்டிக்குள் ஏறிவிட்டாள். ஏறிய வேகத்தில்  ஓடிப்போய் ஒரு இருக்கையில் உட்காரப்  போகும்போது தடுமாறி அங்கே உட்கார்ந்திருந்த பெண் தோள்மீது சாய்ந்து விட்டாள். அவ்வளவுதான்.... தன் தோளால் சுமதியை வேகமாக இடித்துத் தள்ளிய அந்தப் பெண் அத்தோடு நில்லாமல் "குத்தி..சல்...சல்..(நாயே...போ...போ...)" என்று கையில் வைத்திருந்த கைபேசியை நீட்டி நீட்டி அதட்டினார். ஒரு விதமான அச்சத்தோடு குரலுக்குரிய நபரை நிமிர்ந்து பார்த்த சுமதி அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனாள். நடுங்கியபடி சற்று விலகி அம...

கற்றதனால் ஆய பயனென்கொல்....

        கற்றதனால் ஆய பயனென்கொல்..... " கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் "                               குறள் : 2 கற்றதனால் - கல்வி பெற்றதனால் ஆய - ஆகிய பயன் - நன்மை என்கொல் - என்னவோ வாலறிவன் - தூய அறிவுடையவன் நற்றாள் - நல்ல அடி, நற்பாதம் தொழாஅர் - தொழாதிருந்தார் எனின் - என்றால் தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவன் திருவடிகளை வணங்காது இருப்பாரானால் அவர் கற்ற கல்வியினால் ஆகக்கூடிய பயன் என்ன இருக்கப் போகிறது? விளக்கம் :  ஒருவன் எவ்வளவுதான் கல்வி அறிவில் சிறந்து விளங்கினாலும் அவனிடம் இறை நம்பிக்கை இல்லை என்றால் கற்ற கல்வியால் ஒரு பயனும்  இருக்கப் போவதில்லை. வாலறிவு என்பது முழுமையான அறிவு. முழுமையான அறிவுடையவன் என்பவன் யார் ?  இறைவன் ஒருவனாக மட்டுமே இருக்க முடியும். எவ்வளவு கல்வி கற்றிருந்தாலும் நாம் கற்ற கல்விக்கு மேலான அறிவுடைய ஒருமெய்ப் பொருள் உண்டு. அந்த மெய்ப்பொருளைப்  பற்றிய தேடல் நமக்குள் இருந்து கொண்டே  இருக்க வேண்டும். கல்வியும் அறிவும் கடவுள் அ...

தாத்தா உண்டியல்

        தாத்தா உண்டியல் தாத்தாவுக்கு நாலு நாளா காய்ச்சல். நாக்கெல்லாம் கசந்து கொண்டு ஒரு மாதிரியாக இருந்தது. கொஞ்சம்போல சுடு கஞ்சி யாராவது வச்சித் தந்தால் தேவலாம் போல இருந்தது. யார் வச்சித் தருவார்கள்.? யாரிடம்  போய் கேட்பது?  முந்தைய மாதிரி இருந்திருந்தால்.... கண்களை உருட்டி  ஓங்கி குரல் கொடுத்து மொத்த வீட்டையும் கூட்டியிருப்பார். இப்போதெல்லாம் கொஞ்சம் உரத்த குரலுல கூப்பிட்டால் போதும். "அங்கே என்ன...கிழம் கிடந்து கூவுது "என்ற எதிர் குரல் வந்து வழி மறைக்கும். பேரன் பாலன் பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கிறான். அவன் வந்த  பின்னர்தான் தண்ணீர் என்றாலும் கேட்க முடியும். அவன் மட்டும்தான் கூப்பிட்டதும் "என்ன வேணும் தாத்தா "என்று ஓடி வருவான். கண்கள் வாசலை நோக்கி பேரனைத் தேடிக் கொண்டிருந்தன. எல்லாம் அவர்செய்த பாவம்தான். ராசக்கிளிக்கு கொஞ்சநஞ்ச பாவமா செய்துருக்காரு ...? அதுக்குதான் கடவுள்   இப்படி கட்டிலோட முடக்கி போட்டுருக்காரு .... மனசாட்சி அப்பப்போ வந்து குரல் கொடுத்து கிண்டலடித்துச் செல்லும்.  ஒரு காலத்துல ஓடக்கரக்காரரு வாரார்  என்று ச...