முதல் வரிசை
முதல் வரிசை ஆதித்தன் ஆட்சி செய்ய வந்து இரண்டுமணி நேரம் ஆகியும் வீட்டில் எந்த அரவமும் இல்லை. மூலையில் முடங்கி கிடந்த மான்சி ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை கண்ணைத் திறந்து அம்மாவைப் பார்த்தாள். அம்மா இப்போதைக்கு எழும்புவதாகத் தெரியவில்லை. மெதுவாக 'அம்மா 'என்று கூப்பிட்டுப் பார்த்தாள். அம்மாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அக்காவின் சத்தத்தைக் கேட்டதும் அம்மாவின் அருகில் படுத்திருந்த தம்பி மெதுவாக திரும்பி அம்மாவைப் பார்த்தான். "அம்மா...அம்மா.".மெதுவாக உலுக்கினான். ' படு....'மெதுவாக தட்டிக் கொடுத்தார் அம்மா. "அம்மா..விடிஞ்சு ரொம்ப நேரம் ஆயிட்டு" "பேசாம தூங்கு...அப்பா...