சாதி இரண்டொழிய வேறில்லை....
சாதி இரண்டொழிய வேறில்லை.... வீதிக்கொரு சாதி பெயர். ஊருக்கொரு சாதி சங்கம். பெயருக்குப் பின்னால் சாதி பெயர். இப்படியாக சமீப காலமாக சாதியைப் பற்றிய பிரச்சாரங்களும் முன்னிறுத்தல்களும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. காரணம் என்ன? என்ற ஆய்வு தேவை இல்லை. ஆராய்ந்து எந்தப் பயனுமில்லை. ஆனால் நல்ல கருத்துக்கள் நாளும் விதைக்கப்பட வேண்டும். பயிற்றுவிக்கப்பட வேண்டும். அப்போதுதான் சாதிய வன்மங்களை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். " பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்றார் வள்ளுவர். " சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" என்றார் பாரதி. " உலகினில் சாதிகள் இல்லை -என் உள்ளத்தில் வேற்றுமை இல்லை கலகத்தைச் செய்கின்ற சாதி- என் கைகளைப் பற்றி இழுப்பதும் உண்டோ?" என்று கேட்டவர் பாரதிதாசன். " தர்மத்தின் கூர்மையோடே எவனோ செய்தான் சாதியை" என்று அறச்சீற்றம் கொள்வார் பாவலரேறு பெருஞ்சித்திரனார். இப்படி சாதி என்பது தேவையில்லாத ஒன்று என்பது ஆன்றோர் கருத்து. அறிந்தோர் கருத்து. அறம்சார் நன்மக்கள் கருத்து. இவர்கள் எல்லாம் சாதி இல்லை...இல்லை என்று பேசியிருக்கும்ப...