Posts

Showing posts with the label நினைவுகளின் மிச்சம் -கவிதை

நினைவுகளின் மிச்சம்

நினைவுகளின் மிச்சம்  வானிலா ஒளி வரப்பின்மீது விழ கையில் லாந்தர் ஒளி காலுக்கு வழிகாட்ட கால்கடுக்கக் கடைமடைப் பயணம் ஓடையில் ஓடும்  சிறுமீன் கண்கள்  சிதறும் நிலவொளியில் மின்னிடும் தாரகையாய் மிரட்டி அழகூட்ட வரப்பில் தாண்டி ஓடும் தவளை கால்கள் மேல் துள்ளிக் குதிக்க அச்சத்தில் நான் கால்கள் இடறி  கால்வாயில்  விழுந்த அந்தநாள் நினைவுகள் மெல்ல வந்து சிரிக்க நாணத்தால் முகம் கவிழ்ந்தேன் அவைதான் எத்துணை இனிய நாட்கள் சிள்வண்டு சுற்றி  கண்கள் காணா இடத்திலிருந்து உள்ளேன் ஐயா என்று ஒலி எழுப்ப ஒற்றைப் பறவையின் சிறகடிப்பு  தன் இருப்பை அறிவித்து மெல்ல அச்சமூட்டிச் சிலிர்க்க வைக்க .. யாருல அங்கே என் மடையை அடைத்தது என்ற பக்கத்துத் தோட்டத்து மாமாவின் குரல் அப்பப்போ வந்து ஆள் அனக்கம் இருக்கிறது அச்சம் தவிர்  என்று  தைரியம் கொடுத்துக் காதுக்குக் கதை சொல்ல அந்த நாள் நினைவுகள் கடைமடைக்கு அழைத்துச் சென்று கண் சிமிட்டிக்  கவி பாட வைத்தது முதல்மடை திறந்து மொத்த தண்ணீரையும் வரப்பு மவுழ பெருக்கி மகிழும் முன்னர் மொத்தமாய் முழுநீரும் நின்று போக யாரங்கே என் மடையை அடைத்தது ...