Posts

Showing posts with the label நல்வழி- கடவுள் வாழ்த்து விளக்கம்

நல்வழி

நல்வழி- கடவுள் வாழ்த்து நல்வழி ஔவையாரால் பாடப்பட்ட  நீதி நூல். மக்களை நல்வழிப்படுத்த அக்கால புலவர்கள் மெனக்கெட்டிருக்கின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும். ஏதோ நமக்குப் பாட வருகிறது பாடிவிட்டுப் போவோமே என்று கடமைக்காக ஏனோதானோவென்று எழுதப்பட்டவை அல்ல. பார்த்துப் பார்த்து  செதுக்கி வடிவமைக்கப்பட்டவை. மனங்களைப் பண்படுத்த உலக எதார்த்தத்தைச் சொல்லித் தர விழிப்புணர்வு ஏற்படுத்த எச்சரிக்கை செய்து கவனமாக இருக்க வைக்க நம் புலவர்களைத் தவிர கரிசனம் மிக்க இன்னொருவர் உலகில் இருக்கிறாரா என்றால் இல்லை என்றுதான் சொல்லுவேன். ஒருவரா இருவரா அனைத்துப் புலவர்கள் எழுதிய பாடல்களும் ஏதோ ஒரு வகையில் நம் மனதிற்கு நெருக்கமாக அமைந்துவிடுகிறது. நம்மை நல்வழிப் படுத்துவதாகவே அமைந்துவிடுகிறது. அருமையான நூல்களைப் படைத்த புலவர்கள் பலருண்டு. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஔவையார் என்றால் மிகையாகாது. ஔவை எழுதிய ஆத்திசூடியைப் படிக்காமல் யாரும் அரிச்சுவடு கற்றிருக்க முடியாது. அதுபோல ஔவையார் நீதிநூல்களைக் கற்றிடாமல் கடந்திட முடியுமா? கற்றவர் என்று சொல்லிடத்தான் முடியுமா?  உங்களுக்காக ஔவையின் நல்வழி பாடல்களிலிருந்து ...