தாயுமானாள்
தாயுமானாள் வெகு நேரமாகியும் ஆட்டுக்குட்டியைக் காணவில்லை. டேய்... குட்டி எங்கடா...கேட்டாள் செல்லம்மா. செல்லம்மாவின் கேள்வியைப் புரிந்துகொண்ட ஆடுகள் ஒட்டு மொத்தமாக வந்த வழியை திரும்பிப் பார்த்தன. பக்கத்து ஒடங்காட்டு வரைதான் போகும். எங்கே சுத்திச்சுத்தி வந்தாலும் நாலுமணி ஆனா போதும் டாண்ணு செல்லம்மா முன்னால் வந்து நிற்கும். இன்று என்னாயிற்று.... நாலரை ஆகப் போகுது. அந்த ஒத்த குட்டிய காணலியே.... எங்கேயும் நிற்காத..... ஏதும் காட்டு விலங்கு வந்து இழுத்துட்டு போயிற்றோ?.... ஏதோ ஒரு இனம்புரியாத கவலை வந்து அப்பிக் கொண்டது. ஒரு பரபரப்போடு அங்கேயும் இங்கேயும் பார்த்தாள். எல்லா ஆடுகளும் செல்லம்மா உட்கார்ந்திருந்த புளியமரத்துக்குக் கீழ வந்து வரிசை கட்டி நின்றன. வீட்டுக்குப் போகணுமே சின்னக்குட்டியைக் காணலியே என்று ஏக்கத்தோடு குரல் கொடுத்துப் பார்த்தன. எந்த அனக்கமும் இல்லை. "குட்டிய எங்களா காணோம். உன்கூடதான வந்தது" தாய் ஆட்டிடம் மறுபடியும் கோபமாகக் கேட்டாள் செல்லம்மா. புரிந்தது போல...மே...என்று குரல் கொடுத்தபட...