அத்துமீறல்
அத்துமீறல் படுக்கையில் படுத்திருந்த நளினியின் முகத்தில் யாரோ டார்ச் அடித்தது போல் இருந்தது. தூக்கத்தில் இருக்கும் போது யார் இப்படி மூஞ்சியில் டார்ச் அடிப்பது? பொசுக்கென்று வந்த கோபத்தில் கண்களைத் திறக்காமலேயே கத்தினாள் சுமதி. பதில் வராமல் போகவே கண்களைக் கசக்கியபடி விழித்துப் பார்த்தாள்.யாருமில்லை ....மறுபடியும் திரும்பிப் படுத்துக் கொண்டாள். ஆனால் யாராக இருக்கும் என்ற நினைப்பில் தூக்கம் வர மறுத்தது. பொழுதாகி விட்டது .இன்னும் எழும்பாமல் தூங்குகிறா பாரு...பொட்டப் பிள்ளையா இவ ...என்ற அம்மாவின் அர்ச்சனைக்குப் பிறகு தான் நாள்தோறும் பொழுது விடியும். இது என்ன ஒருநாளும் இல்லாத திருநாளாக இன்று டார்ச் அடித்து எழுப்புறாங்க. இருக்கட்டும் இருக்கட்டும்...இது எல்லாம் அந்த சங்கரு...