இரட்டையர்களின் சிலேடை பாடல்
இரட்டையர்களின் சிலேடை பாடல் சொல்விளையாட்டு வெறுமனே விளையாடிவிட்டுப் போவதற்கு அல்ல. அடுத்தது என்ன...?அடுத்தது என்ன ? என்ற ஒரு கேள்வியைத் கேட்க வைக்கும். அதற்கான விடையைத் தேட வைக்கும். திருத்தமுறச் சொல்ல வேண்டும் என்று சொற்களைச் சொல்லிப் பார்க்க வைக்கும். தொடர்புடைய சொற்கள், குழப்பம் ஏற்படுத்த வைக்கும் சொற்கள் எவை என்று தமிழ்ச் சொற்கள் அத்தனையையும் அலசி ஆராய வைக்கும். இது விளையாடும்போது புரியாது. விளையாடி முடித்த பின்னர் எத்தனை புதிய சொற்கள் படித்திருக்கிறோம் என்று வியக்க வைக்கும். ஒரே சொல்லுக்கு வேறுவேறு பொருள் உள்ள சொற்களையெல்லாம் தேட வைக்கும். அவற்றைச் சொற்றொடர்களில் அமைத்து சொற்றொடர்கள் எழுதும் பயிற்சி களமாக இருக்கும். சாதாரண சொல் விளையாட்டில் இத்தனை நன்மைகள் இருப்பதை அறியாமலேயே விளையாடியிருப்போம். சிலேடை என்று புரியாமலேயே இலக்கணம் படித்திருக்கிறோம். புலமையை வளர்த்திருக்கிறோம். இந்தப் புலமை தாய்மொழியில்தான் அதிகம் இருக்கும் . கேள்வியும் பதிலுமாக அமைந்தப் பாடல்கள் ஏராளமாகப் பாடி விளையாடியிருப்போம். இத்தகையப் பாடல்கள் வெறும் விளையாட்டுக்காக மட்டும் பாடப்பட்...