ஒழுங்கு
ஒழுங்கு அனைவருக்கும் ஒழுங்கின்மீது அலாதி பிரியம் உண்டு. ஒழுங்காக வைப்பதில்தான் சிக்கல். யாராவது ஒழுங்கு படுத்தித் தரமாட்டார்களா என்று நினைப்போம். வீட்டிற்கு யாராவது வந்தால் கண்கள் முதன் முதலாக வீட்டில் எல்லாம் சரியாக வைக்கப்பட்டிருக்கிறதா என்றுதான் பார்க்கும். பொருட்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடந்தால் முதன் முதலாக அவற்றை சரிபடுத்திவிட்டுதான் கதவையே திறப்போம். இதற்குக் காரணம் பிறர் நம்மைப்பற்றித் தப்பாக நினைத்துவிடக்கூடாதே என்ற பயம். ஆமாங்க...நம்மைப் பற்றிய நல்லெண்ணம் ஏற்படுவதற்குக் காரணம் நாம் வீட்டை வைத்திருக்கும் நேர்த்தியில்தான் கணிக்கப்படும். அழகின் மறுபெயர் ஒழுங்கு. நெல்சன் ஒரு நல்ல எழுத்தாளர்.அழகை ஆராதிக்கிறவர். தாம் இருக்கும் இடம் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார். அவருடைய அறையில் புத்தகங்கள் யாவும் அதனதன் இடத்தில் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருக்கும். " ஒழுங்கு மனம...