தீபத் திருநாள்
தீபத் திருநாள் தீபாவளி என்றாலே தீபத் திருநாள் என்பது யாவரும் அறிந்த ஒன்று. அது கொண்டாடப்படுவதின் வரலாற்றைச் சற்று திரும்பிப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். கொண்டாட்டங்கள் மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பவையாக இருக்கும். ஏதோ ஒரு துன்பத்திலிருந்து விடுபட்டுவிட்டோம். மனது குதுகலிக்கிறது. அப்பாடா...என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சு வெளிவருகிறது. யாரிடமாவது சொல்லி மகிழ வேண்டும் என்று கண்கள் யார் யாரை எல்லாமோ தேடுகிறது. அந்த மகிழ்ச்சிப் பரிமாற்றத்திற்கான வடிகால் தான் விழாக்களும் கொண்டாட்டங்களும். ஓடி ...ஓடி ஓயாது உழைத்த உடம்பு சற்று ஓய்வு கேட்கிறது. ஓய்வு என்றால் அப்படியே ஓய்ந்து கிடப்பதற்கல்ல... உறவுகளோடு நட்புகளோடு கூடி குதுகலிப்பதற்கு... அந்த குதுகலத்தைக் கொண்டாடும் நாள் திருவிழாக்கள். அந்த திருவிழாக்களின் பின்னணியில் ஏதோ ஒரு வரலாறு புதைந்திருக்கும். அவை நெகிழ்ச்சியான உண்மை சம்பவங்களை கொண்டனவாக இருக்கும். கதைகள் என்பதால் நடந்திருக்குமோ நடந்திருக்காதோ என்ற ஐயப்பாடு எழலாம். எல்லா கதைகளிலும் நம்பும்படியான ஒரு நிகழ்வு சொல்லப்படுவதால் அதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்...