கண்டாங்கி
கண்டாங்கி...கண்டாங்கி கண்டாங்கி கண்டாங்கி என்னைக் கட்டி இழுத்த என்றன் அம்மா கண்டாங்கி தொட்டில் கட்டி துயில வைக்க துணைக்கு வந்த கண்டாங்கி. தொட்டுப் பிடித்து விளையாடும் போது திரைச்சீலையான கண்டாங்கி கண்ணீர் சிந்தும் வேளையில் கண்கள் தழுவி கனிவு தந்த கண்டாங்கி தூரல் மழையில் நனைந்த போது தலையைத் துடைத்து விட்ட கண்டாங்கி அப்பாவிடம் தூது போக பின்னணி பேசும் அன்பு அம்மா கண்டாங்கி வெற்றுத்தரையில் படுத்த போது பட்டு மெத்தைப் படுக்கையான கண்டாங்கி விட்டம...