Posts

Showing posts from July, 2022

எற்றென் றிரங்குவ செய்யற்க.....

Image
எற்றென் றிரங்குவ செய்யற்க.... "எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று "             குறள் :655 எற்று -  என்ன செய்தோம் என்று- என்பதாக  இரங்குவ- வருந்தும்படியான செய்யற்க- செய்யாதிருப்பீராக செய்வானேல்- செய்யானேயால் மற்று -மறுபடியும் அன்ன - அத்தன்மையதான செயல்கள் செய்யாமை- செய்யாதிருத்தல் நன்று- நல்லது   இப்படி தவறு செய்துவிட்டேனே என்று பின்னர்  எண்ணி வருந்தும் படியான செயல்களைச் செய்யக்கூடாது. அப்படியே ஒருவேளை செய்துவிட்டாலும்  மீண்டும் அப்படிப்பட்ட செயலைச் செய்யாதிருத்தல் நன்று. விளக்கம் : சில நேரங்களில் நாம் ஏதாவது தவறு செய்துவிடுவோம். செய்து முடித்த பின்னர்தான் அது  தவறு என்று நமக்கே புரியும். இப்படி செய்து விட்டேனே என்று எண்ணி எண்ணி   வருத்தப்பட்டிருப்போம். இது இயல்பாகவே அனைவர் வாழ்விலும் நிகழ்ந்திருக்கக்கூடிய நிகழ்வுதான். போகட்டும் விட்டுவிடுங்கள். தவறு என்பதை உணர்ந்து  விட்டீர்களல்லவா? மறுபடியும் அதையே நினைத்து வருந்துவதால் எந்த நன்மையும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. மறுபடியும் அதுப...

ஆணவம்

 ஆணவம் மகராசி பெயருக்கு ஏற்றபடி  நல்ல   முகராசியானப் பொண்ணு.  பார்க்கிறவர்களைத் திரும்பிப்   பார்க்க வைக்கிற அழகு.  எப்போதும் துருதுருவென்று வருவாள்.         படிப்பிலும் கெட்டிக்காரி என்று பெயர் எடுத்து  வைத்திருந்தாள்.எந்தக் கேள்வி கேட்டாலும் முதலாளாய் பதில்  சொல்வாள்.  வகுப்பிற்குள் ஆசிரியர்  நுழைந்ததும் ஆசிரியரின் கண்கள்  மகராசியைத்தான் தேடும்.   அன்று முதலாவது பாடவேளை. தமிழ்ப் பாட வகுப்பு. தமிழாசிரியர் தான் பள்ளி தலைமையாசிரியர். வகுப்பிற்குள் ஆசிரியர் நுழைந்ததும் மாணவ மாணவிகள் அனைவரும் எழும்பி நின்று காலை வணக்கம் ஐயா என்றனர்.‌ வணக்கம். உட்காருங்கள் என்ற ஆசிரியரின் கண்கள் தானாக மகராசியைத் தேடின. மகராசி இருக்கும் இடத்தில் மகராசியைக் காணவில்லை. ஒரு வேளை தாமதமாக வருவாளோ...? என்று கண்கள் வாசலுக்கு நகர்ந்தன. அங்கே மகராசியின் தோழி புவனேஸ்வரி உள்ளே வரலாமா என்று கேட்கவா....வேண்டாமா என்பதுபோல தயங்கி தயங்கி வாசலில் நின்று கொண்டிருந்தாள். ஆசிரியர் பார்ப்பதைத் பார்த்ததும் "எங்க அம்ம தண்ணீ எடுக்க  அனுப்...

சாரியை என்றால் என்ன?

சாரியை என்றால் என்ன? ஒரு சொல்லைப் பிரித்து எழுதும்போது தனியாக எந்தப் பொருளையும்   உணர்த்தாமல் பெயர்ச்சொல்லையோ   வினைச்சொல்லையோ  சார்ந்து வரும் இடைச்சொல்லை  சாரியை என்கிறோம். பகுபத உறுப்புகள் பிரிக்கும்போது நம்மைத் தடுமாற வைப்பது இடைநிலையும் சாரியையும்தான். எது இடைநிலை? எது சாரியை? என்ற குழப்பம் எப்போதும் ஏற்படுவதுண்டு. அந்தக் குழப்பத்தைத் தீர்ப்பது எப்படி? சாரியை என்றால் என்ன? இடைநிலை என்றால் என்ன? விகுதி என்றால் என்ன? இந்தக் கேள்விகளுக்குத் தனித்தனியாக விடை தெரிந்தால்  மட்டுமே அவற்றை நாம் எளிமையாக அறிந்து கொள்ள முடியும். முதலாவது சாரியை பற்றித்  தெரிந்து கொள்வோம். சாரியை இரண்டு வகைப்படும். 1. எழுத்துச் சாரியை 2. பொதுச் சாரியை எழுத்துச் சாரியை: கரம்,காரம்,கான் ஆகிய மூன்று சொற்களும் எழுத்துச் சாரியைகளாகப்  பயன்படுத்தப்படுகின்றன. அதாவது உயிர் எழுத்துகள் பன்னிரண்டையும் அறிமுகப்படுத்தும்போது இந்த மூன்று சொற்களும் சாரியைகளாக வரும். " அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு" என்ற முதல் குறளிலேயே வள்ளுவர் அகரம் என்று கரம் சாரியையை அறிமுகப்படுத்த...

பகல் கருதிப் பற்றா செயினும்.....

பகல் கருதிப் பற்றா செயினும்.... பகல் கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை"                   குறள் :  852 பகல் - வேறுபாடு கருதி - எண்ணி பற்றா - வெறுப்பன செயினும் -செய்தானாயினும் இகல் - மாறுபாடு கருதி - குறித்து இன்னா - தீங்கு செய்யாமை - செய்யாதிருத்தல் தலை- சிறப்பு. நம்மோடு மனம் வேறுபட்டு ஒருவன் விரும்பத்தகாத செயலைச் செய்தாலும் நாம் அவனோடு  மாறுபாடு கொள்ளாது அவனுக்கு எதிராக தீமை செய்யாதிருத்தலே சிறப்பு. விளக்கம் : ஒருவன் செய்கிற செயலில்  நமக்கு உடன்பாடு இல்லாது இருக்கலாம். அவனுக்கு நம்மீது நல்லெண்ணம் இல்லாதபோது வேறுபாடு கருதியே  அவன் நமக்கு எதிரான ஒரு செயலைச் செய்கிறான். அதற்காக நாமும் அவன் செய்ததுபோலவே அவனுக்கு எதிரான தீமையான செயல்களைச் செய்துவிட்டால் என்ன நிகழும்? பழிதான் வந்து சேரும். அவன் மனம் ஒத்துப் போகாத காரணத்தால் எனக்கும் அவனோடு  மாறுபாடு உண்டு .நானும் அவனுக்கு எதிராக தீங்கு செய்து விடுவேன் என்ற நினைப்பு ஏற்படுவது தவறு. அந்த நினைப்பு நம்மைப் பழிக்குப்பழி செய்ய வைக்கும். அப்படி தீங்கு செய்துவிட்...

உம்மைத் தொகை எண்ணும்மை வேறுபாடு

உம்மைத்தொகை எண்ணும்மை வேறுபாடு உம்மைத் தொகை ,எண்ணும்மை இவை இரண்டிற்குமான வேறுபாடு என்ன? இரணடும் ஒன்றுபோல் தானே இருக்கின்றன. அவற்றை எப்படி கண்டுபிடிப்பது? என்ற குழப்பம் பள்ளிப் பருவத்தில் பலருக்கும்  ஏற்படுதல் உண்டு. அதனால் நாலைந்து எண்ணும்மை சொற்களையும் உம்மைத்தொகையையும் அப்படியே மனப்பாடம் செய்து வைத்து விட்டுத் தேர்வு எழுதச் செல்வோம். அங்கே நாம் படித்ததை விட்டுவிட்டு வேறு ஒரு சொல் வந்திருக்கும். இப்போதுதான் என்ன பதில் எழுதுவது ?என்ற ஓர் ஐயம் ஏற்பட்டு ஏதாவது ஒன்றை எழுதி வைத்துவிட்டு வந்துவிடுவோம். இதற்கு நீங்களும் நானும் விதிவிலக்கல்ல. சற்று புரிந்து படித்திருந்தால் ஐயம் எழுவதற்கான வாய்ப்பே வந்திருக்காது. தொகை என்றாலே தொக்கி நிற்பது அதாவது மறைந்து நிற்பது என்று பொருள். உம்மைத் தொகை என்றால் உம் என்ற சொல் மறைந்து நிற்கும் சொல் என்று பொருள். எடுத்துக்காட்டாக தாய்தந்தை தாய் தந்தை - உம்மைத்தொகை. தாயும் தந்தையும் என்று சொல்லும்போது இதில் உம்  வெளிப்படையாகத் தெரிகிறது. இவ்வாறு உம் வெளிப்படையாக தெரியும்படி எழுதியிருந்தால் அது எண்ணும்மை எனப்படும். தா...

சாதி இரண்டொழிய வேறில்லை

சாதி இரண்டொழிய வேறில்லை.... " பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா  செய்தொழில் வேற்றுமையான்" என்றார் வள்ளுவர். பிறப்பால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டும் திறனுக்கு ஏற்ப வேறுபாடுகள் கண்டறிய முடியுமே  தவிர பிறப்பால் வேறுபாடு இல்லை. பிறப்பில் வேறுபாடு இல்லை எனில் இடையில் எங்கிருந்து நுழைந்தது இந்தப் சாதியப் பாகுபாடு.? உயர்ந்தவர் தாழ்ந்தவர் மேலோர் கீழோர் என்ற பகுப்பு எதனால் ஏற்பட்டது.? பணத்தால் எழுந்திருக்கலாம். செய்யும் தொழிலில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் அது எப்படி ஒரு குறிப்பிட்ட  தொழில் செய்யும் பிரிவினர் தீண்டத்தகாதவர்  என்று ஒதுக்குவதற்கு காரணமாக இருக்க முடியும்?  தொழில் என்று பார்க்க வேண்டுமே தவிர  இது உயர்ந்த வேலை இது தாழ்ந்த  வேலை என்று சொல்ல முடியாது. ஒரு தொழிலில் தேர்ச்சி பெற்றவர் எல்லா தொழிலிலும் தேர்ச்சி பெற்றிருக்க மாட்டார். அவரவர் தொழிலில் அவரவர் பெரிய  ஆளாக இருப்பார்.  சாதாரண கொத்தனார் வேலைதானே என்று   சொல்லுவோம்.  செய்து பாருங்களேன். அதிலுள்ள நுட்பம்  தெரியாமல் விழிபிதுங்கிப் போவோம்.  சமைய...

வாழ்த்தி வரவேற்கிறேன்

வாழ்த்தி வரவேற்கிறேன்  மகுடம் சூட்டிய நாள்முதலாக மணிமுடியில் வைரக்கற்களென நாளொரு திட்டம் தந்து மக்கள் நல்வாழ்வுக்கு உறுதி செய்கின்றீர்! தங்கள் திட்டங்கள் அத்தனையும் படைத்து வருகிறது புதிய வரலாறு அதனால் பெற்றுவிட்டீர் மதிப்பெண் நூற்றுக்கு நூறு! புகுந்த வீட்டில் மகிழ்வாக வாழ்ந்தாலும் பிறந்தவீட்டுப் பெருமை பேசும் சராசரி பெண்ணாக  தமிழகம் என் தாய்வீடு என்பதில் எனக்குப் பெருமிதம் உண்டு தாயை இழந்தபின்  தாய்வீட்டுப் பெருமை பேசுவதில் ஏது மதிப்பு? ஏதிலியான மனநிலைதான் எம்மிடம் எப்போதும் உண்டு! தாயின் மடிமீது அமர்ந்திருந்து நிலாச்சோறு உண்டிருக்கும் குழந்தையை ஏக்கத்தோடு பார்த்து நிற்கும் அண்டை வீட்டுக் குழந்தை போல ஏக்கத்தோடு தமிழகத்தைப் பார்த்து நின்றேன்! "புலம் பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் "என்ற  ஒற்றை அறிவிப்பைத் தந்து உலகத் தமிழரின் உள்ளங்களைக் கற்றையாய் அள்ளிக் கொண்டீர்! "வா..தாய்வீட்டு அரவணைப்பும் பாதுகாப்பும் உனக்கும் உண்டு" என்றுரைத்த உம் கரிசனத்தை என்னவென்பேன்?  ஏது சொல்லி பாராட்டுவேன்? நன்றி என்ற மூன்றெழுத்தைச் சொல்லி அந்நியப்பட்டு நிற்க மனமில்லை உணர்வாய...

கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலம் கொங்கு தமிழ் என்பது கோயம்புத்தூர் வட்டார மக்கள் பேசும் வட்டார வழக்கு  மொழி. . ஏனுங்கோ .... வாங்கோ என்ற வீட்டுல சாப்புட்டுபுட்டு போங்கோ என்று மரியாதையாகப் பேசுவார்கள்.   அப்பச்சி என்று தாய்வழித் தாத்தாவை அழைப்பதும் அப்பத்தாள் என்று அப்பாவழி பாட்டியை அழைப்பதும் இவர்கள் வட்டார வழக்கு. கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு,  நாமக்கல் , சேலம், தர்மபுரி, நீலகிரி, கரூர், கிருஷ் ணகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. மொத்தம் 61 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.10 நாடாளுமன்ற தொகுதிகள் உண்டு. சோழர் ஆட்சியில்தான் இது கொங்கு மண்டலம் என்று அழைக்கப்பட்டது. " சோழநாடு சோறுடைத்து " என்று சொல்வார்கள். மலையும் மலைசார்ந்த குறிஞ்சியும் காடும் காடு சார்ந்த முல்லையும் வயலும் வயல் சார்ந்த மருதமும் விரவிக் கிடக்கும் அருமையான வளமான நிலப் பகுதி அமைந்திருப்பது சோழ மண்டலத்தின் வளமைக்குக் இயற்கை தந்த கொடை என்றே சொல்ல வேண்டும். வேறு எந்தப் பகுதியிலும் இத்தனை வளங்கள் ஒருங்கே அமைத்திருக்கிறதா  என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல முடியும்.. ஆனால் கொங்கு மண்டலம் தான் எல்லா வள...

மருத்துவ மொழிகள்

மருத்துவ மொழிகள்  உணவே மருந்து என்று சொல்வார்கள். நாம் உண்ணும் உணவுதான் நோய் வரவும் காரணமாக இருக்கும். நோய் வராமலும் தடுக்கும். அதற்காக உணவில் சற்று கரிசனம் எடுத்துக் கொண்டால் எளிதில் எந்த நோயும் அண்டாது. அப்படியே நோய் ஏற்பட்டாலும் அதற்கும் நமது உணவிலேயே மருந்து இருக்கிறது. "தீதும் நன்றும் பிறர் தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோரன்ன" என்று சொல்லியிருப்பார் கணியன் பூங்குன்றனார். அதாவது நன்மை நடைபெறுவதற்கும் தீமை நடைபெறுவதற்கும் நாம்தான் காரணமாம். அதுபோல ஒரு நோய் ஏற்படுவதற்கும் நாம்தான் காரணமாம். நோயைக் குணப்படுத்தும் திறனும் நம் கையில்தான் உள்ளதாம். இதைத்தான் மருத்துவ மொழிகள் நமக்குச் சொல்லித் தருகின்றன. பழமொழிகள் முன்னோர்களின் அனுபவமொழிகள். அவற்றை வாசிக்கும்போது ஏதோ எதுகை மோனைக்காக சொல்லி வைத்தது போல் இருக்கும். ஆனால் அவற்றிற்கான மருத்துவ  குணங்களை அறிந்து பின்னரே இப்படிப்பட்ட பழமொழிகளை சொல்லி  வைத்துள்ளனர் என்பதை நம்மாலும் ஓரளவுக்கு உணர முடிகிறது. கேள்விப்பட்டதுமட்டுமல்ல  அனுபவப்பூர்வமாக சிலவற்றை உண்டு அறிந்து கொண்டிருப்போம். அப்போதுதான் அடேங்கப்பா நமது முன்னோர்கள் பொ...

பழிக்கக் கூடாதவை மூன்று

பழிக்கக் கூடாதவை மூன்று தாயைப் பழிக்கக் கூடாது. மதத்தைப் பழிக்கக் கூடாது. உடலமைப்பைப் பழிக்கக் கூடாது. இந்த  மூன்று விழுமியங்களையும் கடைபிடித்து வந்தால் தனிப்பட்ட வாழ்விலும் பொதுவாழ்விலும் எந்தவிதச் சிக்கலும் ஏற்படாது. முதலாவது தாயை ஏன் பழிக்கக்கூடாது என்று சொல்கிறேன். தாயைப் பழித்தால்... என்ன நடக்கும் என்பதை நீங்கள் பள்ளிப்பருவத்திலிருந்தே கண்டு வந்திருப்பீர்கள். இரண்டு மாணவர்கள் சண்டைப் போடுகிறார்கள். கூப்பிட்டு விசாரித்தால் அம்மாவைப் பழித்தும் பேசிவிட்டான். அதனால்தான் அடித்தேன் என்பான். பெரும்பான்மையான நேரங்களில் சாதாரணமாகத் தொடங்கிய சண்டை உக்கிரமாவதற்குக் காரணம் அம்மாவைப் பழித்தும் பேசியதாலேயே இருக்கும். அவரவர்க்கு அவரவர் அம்மா பெரிது. அதனால் தன் தாயை யாரும் பழித்துப் பேச அனுமதிக்க மாட்டார்கள். இந்த உலகத்திலேயே ஒருவரால் அதிகம் நேசிக்கப்படும் ஒரு நபர் ஒருவர் உண்டு என்றால் அவர் அம்மாதான். அம்மாவை எதற்காகவும் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்க மனம் வராது. இந்தப் பாசம் தாயை யாராவது பழித்து விட்டால் பொங்கி எழும். புலம்பித் தள்ளும். அடிதடியில் இறங்கும்...

வாங்க பழகலாம்

  வாங்க பழகலாம் கருவறையிலிருந்து எட்டிப்  பார்த்த பிஞ்சு குழந்தை சற்றே உடம்பு  சிலிர்த்துவிட வாங்க பழகலாம் ....வாங்க பழகலாம் வரவேற்பு பத்திரம் வாசித்தது             காற்று  நடக்க முனைந்த குழந்தை நடை  தடுமாறி விழ சற்றும் தயங்காது தாங்கி நின்று  எழும்பு..... எழும்பு  ஊக்கம் தந்து நின்றது                  நிலம்  படித்த பாடம்   மனதில் பதியாமல்  மருண்டு விழித்தபோது  முடியும் ....முடியும்  முதுகில் தட்டி எழுப்பியது             ஆசிரியரின் கரம்!  கற்ற கல்விக்கு  உற்ற வேலை கிடைக்காது  உள்ளம் வெந்து நொந்தபோது  வெல்வாய் ...வெல்வாய்  விடாது துணை வந்தது                     அம்மாவின் குரல்!  சோதனை வந்து  சோர்ந்து வீழ்ந்தபோது  தோளோடு தோள் கொடுத்து  பரவாயில்லை...பரவாயில்லை  பார்த்துக்கலாம் ஊக்கம் தந்தது          ...

காணும் பொங்கல்

      காணும் பொங்கல்  தை மாதம் மூன்றாம் நாள்  காணும் பொங்கல். இந்த நாளில் தங்கள் உற்றார் உறவினரைச் சந்தித்து தங்கள் அன்பையும் தாங்கள் செய்த  பண்டங்களையும் தங்கள்  பரிமாறிக்கொள்ளும் நாளாக இருக்கும். இது கணுப் பொங்கல் அல்லது கன்னிப் பொங்கல் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இந்த நாளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். உறியடித்தல்,கயிறு இழுத்தல், கபடிப்போட்டி,வழுக்கு மரம் ஏறுதல் என்று பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் இந்த நாளில்  நடைபெறும். வீரவிளையாட்டுக்கான நாள் என்றுதான் சொல்ல வேண்டும். காணும் பொங்கலின் சிறப்பே அன்று கொண்டு சென்று உண்ணும் உணவுதாங்க.... அப்பப்பா...என்ன ருசி... என்ன ருசி.... நல்லா சாப்பிட்டீங்களோ.... என்கிறீர்களா? இல்லைங்க....அப்பப்போ  மற்றவர்களோடு சிறுபிள்ளையாக இருந்தபோது தின்றிருக்கிறேன்.... அதுவும் காணாமல்தான்..... முன்பு பொங்கல் இந்துக்கள் மட்டும் கொண்டாடும் பண்டிகையாக இருந்தது. இப்போது அது தமிழர் திருநாளாக மாறிப் போனதில் எம் போன்றோருக்குப் பெருமை உண்டு. அப்படி இல்லை என்றால் இன்றுவரை திருட்டுத்தனமாக யாரிடமாவது பொங்கல் வாங்கிக் தின...

விடுவியுங்கள் பார்க்கலாம்

விடுவியுங்கள் பார்க்கலாம்             1. அதிகாலை வெண்மூட்டம்     ஆதவனைக் கண்டதும்      எடுக்கும் ஓட்டம்.          அது என்ன?   2.கொம்பை ஆட்டி      வம்பை இழுப்பான்.     அவன் யார்? 3.தாவி ஓடும் தம்பிக்கு     மேனியில் உண்டு முக்கோடு.     அவன்யார்?  4.பட்டு வண்ண உடம்புக்காரன்     பஞ்சு வண்ண நிறத்துக்காரன்     முயலாமல் தோற்ற குறும்புக்காரன்.    அவன் யார்? 5.கரைந்து அழைத்து     பகிர்ந்து உண்ணுவான்.    அவன் யார்?  6.நாளும் உழைத்து நலிந்து போனவன்     நடக்க முடியாமல் ஒதுங்கிக் கிடக்கிறான்.     அவன்யார்?  7.ஊரெல்லாம் தூது போகிறவன்      உடம்பைக் காட்ட மறுக்கிறான்.      அவன் யார்?  8.காலை வந்த மாமனுக்கு      மாலைக்கு மேல் தங்க மனம் இல்லை.     அவர் யார்?  9.ஆளில்லா வீட்டிற்கு  ...

பணி நிறைவுப் பாராட்டு மடல்

 பாராட்டு மடல்  திருமதி  :    ஹெலன் மீராபாய் ,                                  ஆசிரியை                                   நாவில் தேனூறும் நல்லமணம் தூதாகும் ஆம்பூர்நகர் இணையர் ஜேசுதாஸ் ரெபேக்கா ஆசைமலர்க் கொடியாள் ஹெலன் மீராபாய் உக்கிரன்கோட்டை ஐயா லயனலின்                                              வயலினானார்! ஐயா லயனலுக்குக் கட்டித்தேன் அமுதத்தேன் மகளிரிருவர் வாய்த்த நல் வசந்தத்தேன் பெய்தேன் குழைஇல்லறம் இசைத்தேன் கண்டேன் மெய்த்தேன் இதுவென உவந்தேன்!  நார்த்விக் மேனிலைப்  பள்ளி துளிர்த்தேன்  செயினட்மேரி நேசனல் கல்லூரி அருந்தேன் மும்பைத் தமிழ்ப்பள்ளி தனித்தேன் தளிர்த்தேன் இன்பத்தேன்  மாணவர் விருப்பும் கூட்டுத்தேன்! சொற்தேன் தோய்த்த கல்வி சுவைத்தேன் மதித்தேன் மத...