Posts

Showing posts with the label நன்றி ஒருவருக்கு செய்தக்கால்-மூதுரை பாடல் 1

நன்றி ஒருவர்க்கு செய்தக்கால்

நன்றி ஒருவருக்கு செய்தக்கால்  உதவி கேட்டு வந்தாலே ஓடி ஒளிந்து கொள்ளும் காலம் இது. அப்படியே ஒருவர்க்கு உதவி செய்தோம் என்றால் அவர் திரும்ப நமக்கு என்ன செய்வார்  என்று கணக்குப் போட்டுப் பார்த்த பின்னர்தான் முன்கை நீளும். இது மனித இயல்பு. காரணம்  எல்லாவற்றையும் கொடுத்துவிட்டால் நாளைக்கு நமக்கு வேண்டுமே என்ற அச்சமாகக் கூட இருக்கலாம். ஆனால் உதவி என்றால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்  செய்யப்பட வேண்டும். சொல்வது எளிது.  நாம் செய்த உதவிக்குப் பதிலாக நமக்கு எதுவும்  திருப்பி கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சாமானியர்களிடம் இருக்கத்தான் செய்யும். கவலையை விடுங்கள் . என்றாவது ஒருநாள் நாம் செய்த உதவிக்கான பலன் நம்மை வந்து சேரும். நம்பலாமா  என்ற கேள்வி எழலாம். ஏன் நம்பக்கூடாது? என்றோ தென்னை மரத்தின் வேரில் நாம் ஊற்றிய நீர் ஆண்டுகள் பல கடந்தும் நமக்கு இளநீராக கிடைக்கிறதல்லவா? இந்த உதவியை நாம் எதிர்பார்த்தோமா? ஆனாலும் தென்னைமரம் நாம் செய்த உதவியை மறக்காமல் இருந்து பலன் தருகிறதல்லவா? இதுதான் உதவிக்கான பலன். இனி யாருக்கும் நான் செய்த உதவிக்கான பலன்  கிடைக்கும...