நாலு கோடி
நாலு கோடி மன்னர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைதான் சாசனம். மன்னன் பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது. மன்னர்களால் வாழ்ந்தவர்களும் உண்டு. வீழ்ந்தவர்களும் உண்டு. வாய் தவறி வந்த வார்த்தைகள்கூட ஆணையாகி சில நேரங்களில் ஆபத்துக்களைத் தந்துண்டு. இங்கே சோழ மன்னர் ஒருவருக்கு திடீரென்று ஒரு ஆசை. நாளை காலைக்குள் நாலு கோடிப் பாடல்கள் எழுதி வர வேண்டும் என்று தன் அவையிலுள்ள புலவர்களுக்கு ஆணை பிறப்பித்து விடுகிறார். நாளை காலைக்குள் நாலு கோடி பாடலா? அதிர்ந்து போகின்றனர் புலவர்கள். நான் எங்கே போவேன்....எங்கே போவேன்... யாரிடம் போய் கேட்பேன்....ஐயோ...எனக்கு வேணும்...எனக்கு வேணும்... ஆளாளுக்கு புலம்ப ஆரம்பித்துவிட்டனர். அப்போது அங்கே ஔவை...