அச்சம் தவிர்
"அறஞ்செய விரும்பு "என்று தனது ஆத்திசூடியை அறத்தோடு தொடங்கினார் ஔவை. பாரதியார் தனது புதிய ஆத்திசூடியை "அச்சம் தவிர் "என்று தன்னம்பிக்கையூட்டித் தொடங்கியிருக்கிறார். அத்தோடு விட்டு விட்டாரா? அடுத்த வரி "ஆண்மை தவறேல்" அதாவது மன வலிமையை இழக்காதே! நம்பிக்கை தரும் வரி இல்லையா? அதைத்தொடர்ந்து மூன்றாவதாக "இளைத்தல் இகழ்ச்சி" என்கிறார். அதாவது சோர்ந்துபோய் பின்தங்கிவிடக் கூடாது.அது இகழ்வடைய காரணமாக அமைந்துவிடும். என்று தட்டி எழுப்பிக் கொண்டே வருகிறார். இதுதான் பாரதியின் பாடல்களில் இருக்கும் மந்திரமும் தந்திரமும். பாரதியின் பாடல்கள் என்றாலே ஒரு இளமையின் துள்ளலும் உயிரோட்டமான உணர்வும் உணர்ச்சியூட்டலும் கொண்டதாகவே இருக்கும். எதற்கும் அஞ்சா துணிச்சலை வளர்த்தெடுக்க உரமூட்டும் கருத்துக்கள் அதற்குள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும். நம்மைத் தட்டி எழுப்புவதாக இருக்கும். இலக்கண வரம்புக்கு உட்படாமல் புதுக்கவிதைக்குப் பாதை அமைத்துத் தந்தவராயிற்றே! யாருக்கு அஞ்ச வேண்டும்? எதற்கு அஞ்ச வேண்டும்? என்று துணிச்சலோடு சொல்ல வந்த கருத்தினை அள்ளி வீசியவர் பாரதி. "அச்சம...