Posts

Showing posts with the label கர்மவீரர் காமராசர் -கவிதை

கர்மவீரர் காமராசர்

Image

கர்மவீரர் காமராசர்

Image
கர்மவீரர் காமராசர் வறுமையின் வலியை  வாழ்வினில் கண்டவர் வாடிய விழிகளுக்கு  விடியலைத் தந்தவர் பசியெனும் பகையைப்  பாசத்தால் வென்றவர் பள்ளியின் வாசலைப் பிள்ளைகட்குத் திறந்தவர் கல்வியே செல்வமெனக்  கற்பவர்க்குச் சொன்னவர்  கல்லாத உள்ளங்களைக்  கல்விச்சாலை அழைத்தவர் சீருடை திட்டம்  சீர்பட வழங்கி சிறார்கள் வாழ்வைச் சிகரமாய் உயர்த்தியவர் தொழிற்சாலைகள் அமைத்து  தொழில் வளர்த்து தொழில்களின் மிகுதியால்  நாட்டை உயர்த்தியவர் பதவிப் பொருளெனப்  பற்றில்லா பண்பாளர் பணிவையே உயர்வெனப் போற்றிப் புரந்தவர் வாய்மையின் மொழியால் வாழ்நாளை நெய்தவர் வஞ்சக நிழலுக்கே  வழியின்றிச் செய்தவர் கரங்கள் காலியானாலும்  கருணை மிக்கவர் இதயம் எளிமையானாலும் இமயமென  உயர்ந்து நிற்பவர்  மண்ணுக்கு மகனாய்  மக்களுக்குத் தந்தையாய் மறையாத புகழுடை மாமணி காமராசர்  சூரியன் மறைந்தாலும் சுடரொளி மறையுமோ? சான்றோர் மறைந்தாலும்  சாதனை அழியுமோ? காமராசர் என்றொரு காவியம் இருந்ததைக் காலங்கள் தோறும் தமிழ்மனம் உரைக்கும்! காலுக்குச் செருப்பின்றிக்  காலங்கள...