தொல்காப்பியர் பார்வையில் புல்
தொல்காப்பியர் பார்வையில் புல் புல் என்றதுமே அறுகம்புல் ,கோரைப்புல் என்று வயலோரமாகவும் ஆற்றோரமாகவும் நீர்நிலைகள் அருகிலும் குத்துக் குத்தாக வளர்ந்திருக்கும் சிறிய செடிகள்தான் நினைவுக்கு வரும். இவைதான் புற்கள் என்பது நமக்குத் தெரியும். தென்னைமரமும் பனைமரமும் புல் என்றால் மனம் ஒத்துக்கொள்ள மறுக்கும். ஆனால் தென்னை மரமும் பனைமரமும் புல் என்கிறார் தொல்காப்பியர். யாரு தொல்காப்பியரா? தொல்காப்பியர் சொன்னால் உண்மை இருக்கத்தான் செய்யும் என்பீர்கள். தொல்காப்பியர் தென்னை பனை எல்லாம் புல் என்பதற்கு அவர்கூறும் காரணம் நம்மை அசர வைக்கிறது ஆச்சரியப்பட வைக்கிறது. தொல்காப்பியரின் தாவரவியல் புலமையை எண்ணி வியக்க வைக்கிறது அப்படி என்ன ஆச்சரியப்படும்படி சொல்லிவிட்டார் என்கிறீர்களா? மரத்தின் தண்டுப்பகுதி இருக்கிறதல்லவா? அது கூடுபோல சத்து இல்லாமல் இருக்கும் மரங்களைப் பார்த்திருப்பீர்கள். தென்னை, பனை மரங்களை வெட்டும்போது உள்ளே சோறு போன்ற பகுதி இருக்கும் . அப்படிப்பட்ட மரங்கள் எல்லாம் புல் வகையைச் சார்ந்தனவாம். அப்படியானால் தென்னை ,பனை மரங்கள் எல்லாம் புல்லா ?என்று கேட்பீர்கள். நான்சொல்வதைவிட தொல...