கரடி பொம்மை தினம்
கரடி பொம்மை தினம் " ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்" என்பார்கள். ஆனைக்கும் பூனைக்கும் வரும் காலம் கரடிக்கு வராமலா போய்விடும்.? இதோ வந்துவிட்டது. இன்று கரடிக்கான தினம். அதாவது பிப்ரவரி 10 கரடி பொம்மைக்கான தினம். காதலர் தினத்தைத் கொண்டாடிய உலகம் கரடியையும் விட்டுவைக்கவில்லை. இந்தநாளில் காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்துவதற்காக மென்மையான, குட்டி கரடிகளைப் பரிசாக வழங்குவது மேலை நாடுகளில் வழக்கமாக இருந்து வருகிறது .இந்தக் கரடி பொம்மை அன்பு மற்றும் அரவணைப்பின் சின்னமாக உலகெங்கும் உள்ள காதலர்களால் பார்க்கப்படுகிறது. இந்தக் கரடி பொம்மைக்கு வாழ்வு வந்த வரலாறு சுவாரசியமானது. அதற்காக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டி இருக்கிறது. ஒருமுறை ரூஸ்வெல்ட் அவர்கள் வேட்டையாடுவதற்காக மிசிசிப்பி காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார். வெகுநேரமாக வேட்டைக்காகக் காத்திருந்தும் எந்த விலங்கும் சிக்கவில்லை. சோர்வாக வந்து அமர்ந்தார். கடைசியாக கரடி ஒன்று பணியாளர்கள் கண்களில் சிக்கிக்...