Posts

Showing posts with the label வேண்டாம் வேண்டாம் -உலகநாதர்

வேண்டாம் வேண்டாம்

வேண்டும்... வேண்டும் நல்ல எண்ணம் இருக்க வேண்டும். செயலில் நேர்மை இருக்க வேண்டும். பேச்சில் இனிமை இருக்க வேண்டும். பழகுவதில் உண்மை இருக்க வேண்டும். இப்படி எல்லாவற்றிலும் வேண்டும்..வேண்டும் என்று நேர்மறையான சொல்லே இருக்க வேண்டும். அப்போதுதான் நம்மைச் சுற்றி நடப்பவை யாவும் நன்மையானதாக நடக்கும் என்று சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டிருக்கிறோம். ஒரு எதிர்மறைச் சொல் வாயிலிருந்து   வந்துவிடக் கூடாது என்று பார்த்துப் பார்த்துப் பேசுவோம். ஆனால் இலங்கியங்கள் இவை எல்லாவற்றிற்கும் நேர்மாறானவை. இனியவை நாற்பது உண்டு என்றால் ஒரு இன்னா நாற்பதும் உண்டு. இனியவை நாற்பதைவிட எந்தவிதத்திலும் குறைபடாத சொல்லாட்சித்திறன் கருத்தாளுமை, இனிமை ஆகியவற்றை இன்னா நாற்பதிலும் காணலாம். தீ என்று சொல்வதால் நாக்கு வெந்துவிடப்போவதில்லை. சர்க்கரை என்று சொல்வதால்  நாக்கு இனித்துவிடப் போதில்லை. எது எப்படியோ சொல்லப்படும் கருத்து உயர்வானதாக இருந்தால் நாம் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் அவை வேண்டும் வேண்டும் என்று நம்மோடு என்றும் நடைபயின்று கொண்டிருக்கும்.  வேண்டாம் என்ற சொல்லை வைத்தே நம்மை இன்னும் வேண்டும்......