இரட்டையர்களின் தமிழ் விளையாட்டு
இரட்ட்டையர்களின் தமிழ் விளையாட்டு ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்தவர்கள் முதுசூரியன், இளஞ்சூரியன் என்ற இரட்டைப் புலவர்கள் ஆவர். இந்த இரட்டையர்கள் எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தேதான் செல்வர். இவர்களுள் ஒருவருக்கு கண் பார்வை கிடையாது. மற்றொருவரால் நடக்கமுடியாது. கண் தெரியாதவர் காலில்லாதவரைத் தோளில் சுமந்து கொண்டே செல்வார். காலிலில்லாதவர் வழி காட்ட கண்ணில்லாதவர் சுமக்க என்று இவர்கள் பயணம் இருக்கும். இருவருமே நல்ல புலமை மிக்கவர்கள் இவர்கள் பாடல்களில் தமிழ் கொஞ்சி விளையாடும். சொற்களை வைத்து விளையாட்டுக் காட்டும் வித்தை இவர்கள் பாடல்களில் மிகுதியாக இருக்கும். கலம்பகம் பாடுவதில் வல்லவர்கள் என்பதால் " கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்" என்று இவர்கள் புகழ்ப்பட்டனர். இவர்களுடைய பாடல்கள் அனைத்தும் முன் பாதியை ஒருவர் பாட பின்பாதியை இன்னொருவர் பாடி முடிப்பதாகவே இருக்கும். அப்படி இவர்கள் பாடிய பாடல்களுள் ஒன்று உங்களுக்காக.... " அக்காலைப் பொழுதினிலே முக்காலை ஊன்றி மூவிரண்டு போகும்போது ஐந்து தலை நாகமொன்று ஆழ்ந்து கடித...