பெண் ஒரு போராளி
பெண் ஒரு போராளி பெண் என்பவள் போற்றப்பட வேண்டியவள். பாதுகாக்கப்பட வேண்டியவள். பாராட்டப்படவேண்டியவள். சீராட்டப்பட வேண்டியவள். பெண் என்றால் தெய்வம். பெண் என்பவள் மகாலட்சுமி என்று எப்படி எப்படியெல்லாமோ பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எதார்த்தத்தில் பெண் என்பவள் என்னவாக இருக்கிறாள்? கள நிலவரம் என்ன ? கவிபாட...கற்பனைத் தேர் ஓட்ட பெண்ணை மிகைப்படுத்திப் பேசிப் பேசி பெரும்பாலான பெண்களைப் பேச விடாதபடி பேசா மடந்தைகளாக முடக்கி வைத்திருக்கிறது இந்தச் சமூகம். ஒவ்வொரு நாளும் அவளுடைய வாழ்க்கை ஒரு போராட்டமாகவே கழிந்து கொண்டிருக்கிறது. இதுதான் எதார்த்தம். இதை பெண்கள் யாரும் மறுத்துவிட முடியாது. ஆண்களும் எல்லாச் சுதந்திரமும் கொடுத்திருக்கிறேன் என்று மார்தட்டிக் கொள்ளவும் முடியாது. காலையில் எழும்பியது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும்வரை ஒருபெண் கடந்துவர வேண்டிய போராட்டக் களங்கள் எத்தனை ?எத்தனை ? பிறந்து உலகத்திதைப் பார்த்த மறுநொடியே போராட்டக்காரர்கள் கூச்சலிட்டுக் கொடிபிடித்து முன் வந்து நிற்கிறனர். கள்ளிப்பால் ஊற்றிக் கதையை முடித்த...