வள்ளல் ஆய் அண்டிரன்
வள்ளல் ஆய் அண்டிரன் கடையேழு வள்ளல்களில் ஒருவன் ஆய் அண்டிரன் பொதிகை மலையை ஆண்ட மன்னன். பாரியையும் ஓரியையும் காரியையும் தெரிந்த நம்மில் பலருக்கு ஆய் அண்டிரனைத் தெரியவில்லை. ஆய் அண்டிரன் அப்படி என்ன செய்து விட்டான்.? ஏதோ கடையேழு வள்ளல்கள் வரிசையில் இருப்பதால் அந்தப் பெயரை உச்சரிக்கிறோம். முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி. மயிலுக்குப் போர்வை கொடுத்தான் பேகன். இந்த ஆய் அண்டிரன் என்ன கொடுத்தான் என்று கடையேழு வள்ளல்களுள் ஒருவராக எண்ணப்படுகிறார் என்ற கேள்வி நம்மில் பலருக்கு உண்டு. எதுவுமே செய்யாத ஒருவரை வரலாறு எப்படி வள்ளலாக ஏற்றுக் கொள்ளும்.? நிச்சயமாக ஆய் அண்டிரன் பெரிய பெரிய செயல்கள் செய்திருக்க வேண்டும் . எதிர்பாராது வழங்கும் வள்ளலாக இருந்திருக்க வேண்டும். அவரைப் பற்றி நாம் அறிந்து வர வேண்டும் என்பதற்காக பொதிகை மலையை நோக்கிப் பயணப்பட்டேன். ஏன் பொதிகை மலையை நோக்கிய பயணம்? பொதிகை மலைப் பகுதியை ஆண்ட மன்னன் அல்லவா ஆய் அண்டிரன்! அவனைப் பொதிகை மலையில் போய் பார்க்காமல் வேறு எங்கு போய் கண்டிட முடியும்? என்னைப் போலவே புலவர் ஒருவருக்கும் ஆய் அண்டிரனைக் கண்டு வர ஆசை என்று...