முதுமொழிக்காஞ்சியின் பழியாப் பத்து
முதுமொழிக்காஞ்சியின் பழியாப் பத்து முதுமொழிக் காஞ்சியின் மூன்றாம் பத்து பழியாப் பத்து ஆகும். இதில் யார் யார் யார் யாரை எந்தெந்த தருணத்தில் பழித்துரைக்க மாட்டார் என்பது சொல்லப்பட்டுள்ளது. பாடலும் விளக்கமும் உங்களுக்காக... 1. " ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் யாப்பி லோரை இயல்புகுணம் பழியார்." கடல் சூழ்ந்த உலகத்து மக்கள் எல்லாருள்ளும் தமக்கு உறவில்லாதவரிடம் இயற்கையாகவே அமைந்திருக்கும் குணநலனை அறிவுடைய எவரும் பழித்துரைப்பதில்லை. 2. " மீப்பி லோரை மீக்குணம் பழியார்." மேன்மைக் குணமும் செய்கையும் சிறிதும் இல்லாத கீழ்மக்களின் இயல்பினை மேன்மக்கள் எவரும் பழித்துரைக்கமாட்டார். 3. " பெருமை யுடையதன் அருமை பழியார்." பெருமைக்குரிய செயலை செய்து முடித்தலின் அருமையை அறிந்தோர் அதனை செய்ய நினைப்பவரை ஒருபோதும் பழித்துரைக்கமாட்டார். 4. " அருமை யுடையதன் பெருமை பழியார்." ஒருவர் அருமையான ஒரு செயலைச் செய்ய முனையும்போது இது செய்வதற்கு அரிதான செயல் என்று அவருடைய நல்முயற்சியை அறிவுடையோர் பழித்துரைக்க மாட்டார். 5. " நிறையச் செய்யாக் குறைவினை பழியார்." ஒரு செயல...