காளமேகத்தின் கணக்கு
காளமேகத்தின் கணக்கு இறைவனை தொழுவதற்கு உகந்த நேரம் எது? "என்று பாலன் தன் தன் நண்பர் மதிவண்ணனிடம் கேட்டார். "அதிகாலை நேரம் அதுதான் இறைவனைத் தொழுவதற்கு உகந்த நேரம் "என்று பதிலளித்தார் நண்பர். "அமைதியான அந்தக் காலைப் பொழுதுதான் மனதை ஒருமுகப்படுத்தி பிராத்தனையில் ஈடுபட முடியும் .வெளியுலக குறுக்கீடு எதுவும் இல்லாத அமைதியானச் சூழல் பிராத்தனைக்கு ஏற்ற நேரம்தான். ஆனால் என்னால் அது முடிவதில்லையே" என்றார் பாலன். "நீர் சொல்லுவதும் சரிதான். வேலை வேலை என்று சதா கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடுகிறோம். கடவுளைத் தொழ நேரம் கிடைப்பதே அரிதாக இருக்கிறது" புலம்பினார் மதி வண்ணன். " இப்படி ஆளுக்கொரு சாக்கு போக்குச் சொல்லிக் கொண்டிருந்தால் இறைவனைத் தொழுவதற்கு கால நேரமே கிடையாதா ? ஒரு மனிதன் எப்போதுதான் இறைவனை வணங்குவது? " "இன்று இதற்கு ஒரு தீர்வு கண்டே ஆக வேண்டும்." " யாரிடம் போனால் இதற்குத் தீர்வு கிடைக்கும் ?" "வாரும். காளமேகத்திடம் போவோம். அவர்தான் இதற்குச் சரியான பதில் சொல்லுவார்" நேரே இருவரும் காளமேகத்திடம் வ...