Posts

Showing posts from January, 2021

பிணியின்மை செல்வம் விளைவின்பம்....

Image
பிணியின்மை செல்வம் விளைவின்பம்... " பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து "                   குறள் : 738 பிணி _ நோய் இன்மை _ இல்லாதிருத்தல் செல்வம் _ பொருள்  விளைவு _ விளைச்சல் இன்பம் _ மகிழ்ச்சி ஏமம் _ பாதுகாப்பு அணி _ அணிகலன் , அழகு என்ப _ என்று சொல்லுவர் நாட்டிற்கு_ நாட்டுக்கு இவ்வைந்து _ இந்த ஐந்தும் நோயில்லாதிருத்தல், செல்வம் ,மிகுதியான விளைச்சல்,  மகிழ்ச்சியான வாழ்வு, நல்ல பாதுகாப்பு ஆகிய இவை ஐந்தும்  ஒரு நாட்டிற்கு அணி எனப்படும். விளக்கம் :  1. நோயின்மை: ஒரு நாட்டின் குடிமக்கள் அனைவரும்  எந்தவித நோய்நொடியும் இன்றி  வாழ்தல் வேண்டும். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் " நோயில்லா வாழ்க்கையே இன்ப வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்கும். 2. செல்வம் .: பணம் புழக்கம் தாராளமாக இருக்க வேண்டும். செல்வம் மிகுதியாக கிடைக்க வேண்டும். அப்போதுதான் நாட்டில் பசிப்பிணியோ  வறுமையோ  இருக்காது. அனைவர்க்கும் கல்வி கிடைக்க வேண்டும். பொருட்செல்வமும்  கல்விச் செல்வமும் இருந்தால்தான் நாடு...

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்...

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்.... " அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு "                                       குறள் : 72 அன்பிலார் _ அன்பு இல்லாதவர் எல்லாம் _  அனைத்தும் தமக்குரியர் _ தனக்கு உரியனவாகக் கொள்வர் அன்புடையார் _ அன்பு நிறைந்தவர் என்பும் _  எலும்பும் பிறர்க்கு _ மற்றவர்க்கு உரியர் _ உரிமையுடையார் அன்பு இல்லாதவர் அனைத்துப் பொருட்களையும் தமக்கு மட்டுமே உரிமை உடையனவாகக் கொள்வர். அன்புடையவர் பொருளால் மட்டுமல்லாமல் தன் உடலாலும் பிறர்க்குப் பயன்படத்தக்கவராக இருப்பார். விளக்கம் :  பிற   உயிர்கள் மீது அன்பு இல்லாதவர் எல்லா பொருளும் தனக்கு மட்டுமே உரியதாக  எண்ணி தான் மட்டுமே துய்த்துக் கொண்டிருப்பார். பிறர்க்குக் கொடுத்து இன்பம் காண வேண்டும் என்ற பண்பு அவரிடம் சிறிதும்  காணப்படாது. தன் உடன்பிறப்புகளுக்குக்கூட கொடுத்து  உதவும் மனம் இருக்காது. ஆனால் உயிர்கள்மீது அன்பு கொண்டவர் பொருளால் பிறர்க்கு உதவி செய்வார். அத்தோடு நிற...

உழைப்பாளர் தின நல்வாழ்த்து

  உழைப்பாளர் தின நல்வாழ்த்து விரல்களை ரணமாக்கி வியர்வையை உரமாக்கி கழனியைத் தெய்வமாக்கி கஞ்சியை அமிர்தமாக்கி தோள்களைச் சுமைதாங்கியாக்கி  தோழர்களை உறவாக்கி        உழைப்பைத் தனமாக்கி உண்மையை நெறியாக்கி உயர்வைப் பொதுவாக்கி உலகை உழைப்பில் தூக்கி நிறுத்தும் உழைப்பாளர் வர்க்கத்திற்கு உழைப்பாளர் தின நல்வாழ்த்து!             

பார்கவி

                    பார்கவி வானம் ஆசை தீர நீரை வாரி இறைத்துக் கொண்டிருந்து. தான் சேர்த்து வைத்திருந்த மொத்த நீரையும் ஒரே நாளில் கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்று அடம்பிடித்து அடாவடித்தனம் பண்ணிக் கொண்டிருந்தது வானம். சடசடவென்ற மழையின் இரைச்சலைத் தவிர வேறு எதுவுமே கேட்க முடியவில்லை. அலுவலக சன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தாள் பார்கவி. சாலை எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. ஓரிரு வாகனங்கள் மட்டும் தண்ணீரில் தள்ளாடியபடி ஊர்ந்து கொண்டிருந்தன. பாதசாரிகள் யாரும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படவில்லை. வீட்டுக்கு எப்படிப் போவது? மனசுக்குள் பீதி வந்து ஆட்டம் காட்டியது. ஆனால் வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாதபடி மிடுக்காக உட்கார்ந்திருந்தாள். மேசையின் மீது கிடந்த கோப்புகளை எல்லாம் மூடி வைத்துவிட்டு மழை குறைந்துவிட்டதா என்று மறுபடியும் வெளியே எட்டிப் பாரத்தாள். மழை விட்டேனா பார் என்று மல்லுக்கட்டிக் கொண்டிருந்தது. பியூன் மானே மெதுவாக வந்து" அம்மா... "என்றான். "என்ன..." என்பது போல தலையை உயர்த்திப் பார்த்தாள...

பலவுறு நறுஞ்சாந்தம்.....

பலவுறு நறுஞ்சாந்தம்..... அன்றொருநாள்.... அதிகாலை வேளை.... கதிரவன் செம்முகம் காட்டித் தன் சிரிப்பலையைச்  சிந்திவிட சோம்பல் முறித்துப் படுக்கையிலிருந்து எழுந்தாள் செவிலித்தாய். கண்கள் அருகில் படுத்திருந்த  அழகு மகளைத் தேட... அதிர்ச்சியுற்றாள்.  படுக்கை அப்படியே விரிந்து கிடக்க...  அழகு  பதுமை இல்லாது   அறை வெறுமையாய்க்  கிடந்தது.  அக்கம்பக்கம் தேடினாள். அண்டை அயலாரிடம்  போய் கேட்டுப் பார்த்தாள். எல்லோரும் கையை விரித்தனர். அங்குமிங்கும் ஓடினாள்.... இப்போது முகத்தில் கூடுதலாக ஒரு கலக்கம் வந்து அப்பிக் கொண்டது. அவனோடு ஓடி இருப்பாளோ... என்ற ஐயம் வந்து தொற்றிக் கொள்ள... காண்போரிடம் எல்லாம் என் செல்வம் யாருடனும் செல்வதைக்  கண்டீரோ என வெளிப்படையாகவே விசாரிக்க ஆரம்பித்தாள். எந்த தகவலும் கிடைக்காதவளாய் வியர்க்க விறுவிறுக்க  கால் போன போக்கில் நடந்தாள். அப்போது எதிரே முதியவர் ஒருவர் வருவதைக் கண்டாள். அவரிமிருந்தாவது தனக்குச் சாதகமான பதில் கிடைக்காதா என்ற ஏக்கத்தோடு சற்று நேரம் அவரையே பார்த்தபடி நின்றாள். என்னம்மா எதையாவது தொலைத்துவிட்டாயா? ...

நிறைநீர நீரவர் கேண்மை....

Image
நிறைநீர நீரவர் கேண்மை...... "நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்நீர பேதையார் நட்பு                                  குறள் :  782 நீரவர் _ அறிவுடையவர் கேண்மை _ நட்பு பிறை     -   வளர்பிறை நிறைநீர _ நாளும்                         வளருவது போல பேதையார் _ அறிவில்லாதவர் நட்பு _           நட்பானது மதி  _    நிலவு பின்நீர _ பின் நாளில்                     தேய்ந்து போவது போல அறிவுடையவர்களோடு கொள்ளும் நட்பு வளர்பிறை போல நாளும் வளர்ந்து கொண்டே இருக்கும். அறிவில்லாதவரோடு கொள்ளும் நட்பு தேய்பிறை போல நாளும் தேய்ந்து ஒருநாள் காணாமல் போய்விடும். விளக்கம் : வளர்பிறையானது ஆரம்பத்தில் சிறிதாகவே இருக்கும். நாளாக ஆக வளர்ந்து கொண்டே இருக்கும். அதுபோல அறிவுடையவர்களோடு கொள்ளும் நட்பும் ஆரம்பத்தில் சிறிதாக இருந்தாலும் ...

அன்னக்கிளி அக்கா

Image
                  அன்னக்கிளி அக்கா விசயத்தைக் கேள்விப்பட்ட நேரத்தில் இருந்து அழுது கொண்டே இருந்தாள் அன்னக்கிளி அக்கா. "நிஜமாத்தான் சொல்லுறீயளா... யாரு சொன்னா...மாப்பிள்ளை  சொன்னாவளா அவுங்க ஆத்தாகாரி சொன்னாவளா..." அப்பா வந்து சொன்ன நேரத்தில் இருந்து அப்பாவை கேள்வி கேட்டுக் கேட்டு  குடைந்து எடுத்து விட்டார் அம்மா. " என்ன ....யாதுன்னு சொல்லிபுட்டேன்ல்ல... இனி ஆக வேண்டியதைப் பாரக்க வேண்டியதுதான்" சொல்லிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுவிட்டு வாசலை நோக்கி நடந்தார் அப்பா. "என்ன சொல்றிய...சட்டியா?  பானையா? உடனே மாப்பிள்ளை சொல்ற மாதிரி மாத்துகிறதுக்கு...." வார்த்தைகளைக்  குறுக்கே போட்டு அப்பாவைப் போக விடாமல் தடுத்தார் அம்மா. "பின்ன என்னை என்ன  செய்யச் சொல்லுற..." அப்பாவின் குரலில் ஒரு இயலாமை தெரிந்தது. என்ன செய்ய முடியும்? வேறு எப்படித்தான்  சொல்ல முடியும் ? அன்னக்கிளி அவரு பெத்த புள்ளதானே... வருத்தம் இல்லாமலா இருக்கும்... "ஐயோ...நல்ல நல்ல சம்பந்தம் எல்லாம் வந்துதே....நீங்க தானே... நல்ல தோட்டமும் தொரவும் இருக்...

கணைகொடிது யாழ்கோடு செவ்விது....

கணைகொடிது யாழ்கோடு செவ்விது... "கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கன்ன வினைபடு பாலால் கொளல் "                        குறள் :  279 கணை _ அம்பு கொடிது _ தீயது யாழ் _ வீணை போன்ற ஒருவகை நரம்பு               இசைக்கருவி கோடு _ வளைவு செவ்விது _ நேரானது ஆங்கு _ அவ்வகையே அன்ன _ அது போன்ற வினைபடு பாலால் _ செய்கைத் திறத்தால் கொளல் _ அறிந்து கொள்க நேராகத் தோன்றினாலும் அம்பு கொடியது. வளைந்திருந்தாலும் யாழ் இன்னிசை தரக்கூடியது. அதுபோல மக்களின் பண்புகளை அவர் செய்யும் செயலால் அறிந்து கொள்க. விளக்கம் :   அம்பு நேராக இருந்தாலும் அது செய்யும்  செயல் தீயதாகவே இருக்கும்.  யாழ் வளைந்து காணப்பட்டாலும்  அதிலிருந்து இன்னிசை மட்டுமே வரும்.  அதுபோல யாரையும் இருக்கும் தோற்றத்தை  வைத்து இவர் கொடியவர். இவர் நல்லவர் என்று முடிவு செய்யக் கூடாது. நல்லவர் , தீயவர் என்பதை வடிவால் முடிவு செய்யாமல் அவரவர் செயல் வகையால் அறிந்து கொள்ளல்  வேண்டும் என்கிறார் வள்ளுவர். English couplet : "Cruel...

பூரணி

              பூரணி எது வரைக்கும் இந்த நாடகம் ?  ஒன்றுமே  புரியவில்லை . இன்று முடிவுக்கு வரும் நாளை முடிவுக்கு வரும் என்று ஓரளவு நானும் சமாளித்துத்தான் பார்த்தேன். ஆனால் முடிவதாகத் தெரியவில்லை. போதும் போதும் என்றாகி விட்டது.  இதற்கு மேலும் இப்படியே போய்க் கொண்டிருந்தால்  .... இதற்கு என்னதான் வழி ?  வீட்டிற்கு வந்தால் நிம்மதி இல்லாமல் தவிப்பது போன்ற உணர்வு. அலுவலகத்தில் இருக்கும்வரை  வீட்டு நினைப்பே வராது. வீட்டிற்குப் புறப்படும்போது கூடவே பரபரப்பும் தேவை இல்லாத கவலைகளும் வந்து தொற்றிக் கொள்ளும். தேவை இல்லாத கவலையா... நான்தான் அதிகப்படியாக அதைப் பற்றிய சிந்தனைகளை மனதில் போட்டுக் கொண்டு என்னையே வருத்திக் கொண்டிருக்கிறேனா ? எனக்குள்ளேயே எப்போதும் ஒரு போராட்டம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். தீர்வுதான் கிடைத்தபாடில்லை. இன்றும் அப்படித்தான் காலையில் அலுவலகம் புறப்படும் முன்னர் வெளியில் வந்து பைக்கைத் துடைத்துக் கொண்டிருந்தேன். எதிர் வீட்டு அண்ணி அலுவலகத்திற்குச்  செல்ல வீட்டைவிட்டு வெளியே   வந்தவர்கள் என்னைப் பார்த்...

அறம் வைத்துப் பாடுதல்

அறம் வைத்துப் பாடுதல் நாம் வாழ்கிற வாழ்வு அறம் சார்ந்ததாக  இருக்க வேண்டும்.   இந்த ஆசை எல்லோருக்கும் உண்டு. ஆனால் அனைவரும் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? அறம் சார்ந்த வாழ்வு என்பது எல்லோராலும் சாத்தியப்படக் கூடியதா? எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் எல்லோராலும் பின்பற்ற முடிகிறதா? இப்படி ஏகப்பட்ட கேள்விகள். முதலாவது அறம் என்றால் என்ன  என்று பார்ப்போம்.  மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும்  என்று தனக்கென வகுத்துக்கொண்ட  ஒழுக்கநெறியே அறம் எனப்படும். " மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற" என்பார் வள்ளுவர். மனத்தில் எந்தவிதமான குற்றமும் இல்லாமல் இருத்தலே அறம். உள்ளத்தில் அன்பில்லாது செய்யப்படும் எந்த தர்மமும் அறம்  எனப்பட மாட்டாது. எண்ணம், சொல், செயல் மூன்றும் தூய்மையாக இருந்து செய்யப்படும் செயல்தான்  அறமாகக் கொள்ளப்படும். இந்த அறத்தைத் தவிர இன்னொரு அறமும் நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். ஊரில் சிலரை அறம்பாடியே  கொன்னுருவாப்பா என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அறம் பாடி கொல்வதா? அறம் நம்மைக் காப்பாற்றும் ...

மனத்துக்கண் மாசிலன் ஆதல்.....

மனத்துக்கண் மாசிலன் ஆதல்... " மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற "                          குறள்  :34 மனத்துக்கண் _ உள்ளத்தில் மாசிலன் _  குற்றம் இல்லாதவன் ஆதல்  _  ஆக இருத்தல் அனைத்து _ எல்லாம்,  அவ்வளவுடையதே அறன் _ அறம் ஆகுல _ ஆரவாரம், பகட்டு நீர _ தன்மை உடையவை பிற _  மற்றவை எல்லாம் ஒருவன் தன் மனதில் குற்றம் இல்லாதவனாக இருத்தல் மட்டுமே அறமாகும். மனத்தூய்மை இல்லாத மற்றவை எல்லாம் வெளிப்பகட்டுத் தன்மை கொண்ட அறமாகவே கொள்ளப்படும். விளக்கம் : மனத்தின்கண் குற்றம் இல்லாதவனாக இருத்தல் அறமாகும். உள்ளத்தில் குற்றம் நிறைந்தவனாய் இருந்து ஒருவன் செய்கிற நற்செயலும் நற் செய்கைகளும் அறம் என்று  கருதப்பட மாட்டாது.  உலகம்  மெச்சட்டும் என்பதற்காக  பலபேர் அறிய  செய்யப்படும்  நற்செயல்கள் போலியானவை. பிறர் அறிய வேண்டும் என்பதற்காக பல உதவிகளைச் செய்பவர்கள் உண்டு ஆனால் அவர்கள் உள்ளத்தில் ஒருபோதும்  நற்சிந்தனை இருந்திருக்காது. அதனையும் நாங்கள் அறச் செயல்கள்  செய்கி...

பத்து பவுனு

                பத்து பவுனு  நேற்றிலிருந்தே பாட்டிக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. இன்றைக்கோ நாளைக்கோ உசுரு போயிரும் என்று ஊரு சனம் எல்லாம் வந்து பார்த்து அழுதுட்டுப் போனாவ... வெளி இடங்களில் இருக்கும்  உறவினர்கள்கூட வந்துட்டாவ... ஆனால் உள்ளுரில் இருக்கும் அன்னத்தாயி சித்தி மட்டும் வரல... "அன்னத்தாயி இன்னும் வரலியா.... அன்னத்தாயி இன்னும் வரலியா..." என்று ஆளாளுக்கு அன்னத்தாயி சித்தியை பற்றியே கேட்டுக் கொண்டிருந்தாவ... " பெத்த தாய்க்கு சேத்துமா கட்டி இழுக்குது... இன்னுமா அன்னத்தாயிக்கு இந்தத் தாயை வந்து பார்க்கணும் என்று நினைப்பு வரல..." "கடைக்குட்டி என்று மடியிலேயே போட்டு வளர்த்தப் புள்ள... இப்படியா கல்லு மனசாட்டும் கிடப்பா..?.." "பாரு...அந்தத் தாய் மனசு கடைக்குட்டியை மட்டும் காணாம எப்படி கிடந்து தவிக்குது...யாராவது போய் ஒரு வார்த்தை கூப்பிட்டுப் பார்த்தியளா" என்றார்  ஒரு தாத்தா. "பெத்த தாயைப் பார்க்கிறதுக்குப் போய் கூப்பிடணுமாக்கும்.தானா பதறி கிட்டு ஓடி வரமாட்டா... என்ன பிள்ளைகளோப...

பல, சில என்பவற்றின் புணர்ச்சி விதி

  பல ,சில என்பவற்றின் புணர்ச்சி விதி பல நேரங்களில்  சில  இடங்களில்  பல மற்றும் சில ஆகிய சொற்களை எழுதும்போது வல்லினம் மிகுமா ?மிகாதா...? என்ற ஒரு குழப்பம் ஏற்படலாம். அதற்கான தீர்வாக நன்னூலார், " பலசில எனுமிவை தம்முன் தாம்வரின் இயல்பும் மிகலும் அகரம் ஏக லகரம் றகர மாகலும் பிறவரின் அகரம் விகற்ப மாகலும் உளபிற "  என்று எழுதியுள்ளார். பல,  சில என்னும் சொற்களுக்கு முன்  அதே சொற்கள் வந்து புணரும்போது இயல்பாக அப்படியே வருதல் உண்டு. எடுத்துக்காட்டு: பல + பல  = பலபல சில  + சில = சிலசில வல்லினம் மிகுந்து வருதலும் உண்டு. எடுத்துக்காட்டு :  பல  + பல  = பலப்பல  சில  + சில  = சிலச்சில லகரம் றகரம் ஆதலும் என்ற விதிப்படி நிலைமொழி ஈற்றில் உள்ள அகரம் கெட லகரம் றகரமாகி வருதலும் உண்டு. எடுத்துக்காட்டு : பல  + பல  = பற்பல சில  + சில  = சிற்சில இப்போது மூன்று வழிகளில் அவை  எழுதப்படலாம் என்பது பற்றிய தெளிவு கிடைத்திருக்கும்.  பல மற்றும் சில ஆகிய  சொற்களின் பின் வேறு சொற்கள்  வந்தால் இயல்பாகவும் புணரு...

இதனை இதனால் இவன்முடிக்கும்....

இதனை இதனால் இவன்முடிக்கும்...... " இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் "                              குறள்  _ 517 இதனை _ இச்செயலை இதனால் _ இந்த முறையால் இவன் முடிக்கும் _ இவன் செய்து முடிப்பான் என்றாய்ந்து _ என்பதை ஆராய்ந்து அதனை _ அந்தச் செயலை அவன்கண் _ அவனிடத்தில் விடல் _ விட்டு விடுக இந்தச் செயலை இத்தகைய முறைகளால் இவன் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்த பிறகு அச்செயலைச் செய்யும்படி அவனிடம் ஒப்படைக்க வேண்டும். விளக்கம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை  இருக்கும்.  இந்தச் செயலை இவனைத் தவிர வேறு  யாராலும் சரியாக செய்து முடிக்க முடியாது  என்ற ஒரு திறமை ஒரு சிலரிடம்  மட்டுமே இருக்கும்.  எல்லோரிடமும் எல்லாவிதமான திறமைகளும்  ஒருங்கே கொட்டிக் கிடக்க முடியாது.  அந்தந்தத்  துறை சார்ந்த அறிவு,  தனித்தன்மை , ஆர்வம்   இப்படி எல்லா கோணத்திலும்  முழுமையாக ஒருவனைப் பற்றி  ஆராய்ந்த பின்னரே  அவனிடம்   ஒரு பணியை  ஒப...

இக்கரைக்கு அக்கரை பச்சை

Image
இக்கரைக்கு அக்கரை பச்சை இக்கரைக்கு அக்கரை பச்சை.  அருமையான வாழ்வியல் உண்மையைச்  சொல்லித் தரும் அனுபவமொழி. எப்போதுமே நம் கண்கள் அருகில் இருக்கும் பொருட்களைக் காணத் தவறிவிடும். தூரத்தில் இருக்கும் பொருட்களை நாடி ஓடும். இது கண்களின் குற்றம் அல்ல. இயல்பாகவே கண்களின் தன்மை அதுதாங்க. அழகான வீடு கட்டி இருப்போம். ஆனால்  அடுத்த வீட்டுக் காரனுடைய வீடுதான் அழகாக இருப்பதுபோல் தோன்றும். தன் வீட்டில் எவ்வளவுதான் ருசியாக சாப்பிட்டிருந்தாலும் ஒருநாள் நண்பன் வீட்டில் தின்ற  கடலை உருண்டை சுவையாகத் தெரியும். எந்தச் சேலை கட்டினாலும் பக்கத்து வீட்டுக்காரிக்கு  நன்றாக இருக்கிறது... எனக்குதான் ஒரு சேலைகூட சரியாக   வாய்க்க மாட்டேங்குது.... சொல்லி ...சொல்லி புலம்புவோம். பாவாடை சட்டை போட்ட காலத்தில் தாவணி போட்டுப் பார்க்க ஆசை வரும். தாவணிப் போட்டபிறகு  எப்போது சேலை கட்டுவோம் என்று ஏக்கமாக இருக்கும். திருமணம் ஆகி வந்து விட்டால்  எங்க அம்மா வீட்டுல...எங்க அம்மா வீட்டுல.... என்று ஆயிரம் முறை அம்மா வீட்டை நோக்கியே மனம் நாடி ஓடும். சிலருக்கு அடுத்த வீட்டுப் பெண...