மன்னனும் நீயோ...
மன்னனும் நீயோ மன்னனும் நீயோ? வளநாடும் நின்னதோ? இப்படி ஒரு கேள்வி. என்ன.... நாடாளும் மன்னனைப் பார்த்து இப்படியொரு கேள்வியா? இப்படிக் கேட்டது யார்? யாருக்கு இப்படிக் கேட்கத் துணிச்சல் வந்தது? அறிய வேண்டும் போல இருக்கிறதல்லவா? வாருங்கள் யாரந்த தைரியசாலி என்று பார்த்து விடுவோம். புலவர்கள் தன்மானம் மிக்கவர்கள். தங்கள் தன்மானத்திற்கு இழுக்கு ஏற்படும் இடத்தில் அவர்கள் தங்குவதில்லை. அவர்களைப் புகழ்ந்து பாடுவதுமில்லை. வறுமை இருந்தாலும் தன்நிலையிலிருந்து கீழிறங்கி வந்துப் பொருள் பெற வேண்டும் என்று நினைப்பதில்லை. அப்படியொரு நிலை ஏற்பட்டால் கன்னாபின்னா என்று பேசிவிட்டு அங்கிருந்து வெறுங்கையோடு போய்விடுவார். இதற்கு அந்தப் புலவர் இந்தப் புலவர் என்று எவரும் விதிவிலக்கல்ல. அறம் பாடிவிட்டு சென்ற வரலாற்று நிகழ்வுகளும் உண்டு. கம்பர் மட்டும் விதிவிலக்கா என்ன? புலவர்களுக்குள் எப்போதும் ஒரு போட்டி இருந்துகொண்டே இருக்கும். அந்தப் போட்டி பொறாமையாக மாறி நீயா நானா என்று மோதிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு சொற்போரில் இறங்கிய புலவர்வர்களும் உண்டு. அப்படிப்பட்ட பொறாமை மனநிலை சோ...