கோபத்தோடு பிணக்கு
கோபம் பாவம் " மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய பிறத்தல் அதனான் வரும் " என்கிறார் வள்ளுவர். "கோபம் தீய விளைவுகளை ஏற்படுத்துவதால் கோபத்தை மறந்துவிடுக" என்கிறது குறள். மறக்கக்கூடியதா கோபம்? கோபம் என் பிறவிக்குணம் ஆயிற்றே... என்று புலம்புகிறவர்களும் உண்டு. அதனால்தானே சிடுமூஞ்சி என்ற பட்டத்தை வாங்கி வைத்திருக்கிறோம். "தீராக் கோபம் போராய் முடியும் " என்பார் ஔவை. கோபம் மழையாகக் கொட்டிய நிகழ்ச்சி சாக்ரடீஸ் சாக்ரடீஷ் உலகின் தலை சிறந்த தத்துவஞானி. உலகமே கொண்டாடும் அவர்மீதும் கோபம் கொண்டவர்கள் உண்டு. சாக்ரடீஸ் கோடிக்கணக்கான மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தாலும் மனைவியிடம் நல்ல பெயர் எடுக்க முடியவில்லை. அவர் தன் எழுத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை வீட்டிற்கு கொடுப்பதில்லை என்பது மனைவியின் குற்றச்சாட்டு. வீட்டில் என்ன இல்லை ...என்ன இருக்கிறது.. எதையுமே அவர் கண்டு கொள்ளவே மாட்டார். ஒருமுறை இப்படித்தான் வெகு...