எட்டாவது பெண்
எட்டாவது பெண் எட்டாவதும் பொட்டப் பிள்ளை பிறந்திருக்கு....பிள்ளை மூக்கும் முழியும் சரியா அப்பாவைப் போலவே இருக்கு...." வீட்டுக் கதவை மெல்லத் திறந்து கதவிடுக்கு வழியாக தகவல் சொல்லிவிட்டு போனார் மருத்துவச்சி. அதைக் கேட்டதும் வெளியில் நின்றிருந்த அனைவர் முகத்திலும் ஒரு சோகம் அப்படிக் கொண்டது. அப்பா பதிலுக்கு ஒரு வரிகூட பேசாமல் அப்படியே நின்றார். அப்படியே ஒரு மாதம் ஓடி போயிற்று. அடுத்த ஒருமாதம் அப்பா சிடுசிடு என்று நின்றார். எதற்கெடுத்தாலும் கோபம். அம்மா இது எதையும் கண்டு கொள்வதே இல்லை. ஒரு மாதத்திற்குள் தோட்ட வேலைக்குச் சென்று விட்டார். போகும்போது தங்கச்சியைப் பத்திரமாகப் பார்த்துக்கொள் என்று என் கையில் தூக்கித் தந்து விட்டுச் போய்விட்டார். ஒரு டம்ளர் போல பசும்பால் சட்டியில் இருக்கு .கூட கொஞ்சம் தண்ணீர் ஊற்றி காச்சி சூடு ஆறியதும் சங்குல ஊற்றி கொஞ்சம் கொஞ்சமாக கொடு. பத்திரம்....விக்கிறாம மெதுவா கொடுக்கணும் என்று பக்குவம் சொல்லிதந்துவிட்டுப் போய் விட்டார். இப்போ நான்தான் இந்த குழந்தைக்குப் பொறுப்பு.இதற்காவே எட்டாவது படித்துக் கொண்டிருந்த என்னை பிள்ளையைப் பார்க்கணும் என்று சொல்லி பள்ளிக்...