Posts

Showing posts from August, 2021

கனவிலும் இன்னாது மன்னோ...

கனவிலும் இன்னாது மன்னோ.... " கனவிலும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு"                               குறள்  : 819 கனவிலும் - கனாவின் கண்ணும் இன்னாது - தீமை தருவது மன்னோ -  ( அசைநிலையாக வந்துள்ளது) வினை - செய்கை வேறு - பிறிது சொல் வேறு - சொல்லும் சொல் பிறிது பட்டார் - அப்படிப்பட்டவர் தொடர்பு - நட்பு பேசும் பேச்சும் செய்யும் செயலும் வேறுவேறாக உள்ளவரோடு கொண்டிருக்கும் நட்பு கனவிலும் துன்பம்  கொடுப்பதாகவே இருக்கும். விளக்கம் : சொல் வேறு ; செயல் வேறு என்று மாறுபட்ட மனநிலையோடு செயல்படும் ஒருவரிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.  அப்படிப்பட்டோர் நட்பு எந்த நேரத்திலும் தீமை தருவதாகவே இருக்கும் சிலர் நம்மிடம் தேனொழுகப் பேசுவர். செயலில் நேர்மை இருக்காது. அவர்கள் செய்யும் செயல்கள் அவர்கள்மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையைக் குலைப்பதாகவே இருக்கும். தமக்குச் சாதகமானதை முடித்துக் கொள்வதற்காக எந்த நிலையிலும் கீழிறங்கி செயல்படத் தயங்க மாட்டார்கள். பிறழ் நாக்கு உடையோர் தொடர்பு கூடவே கூடாது. அவர...

உடன்போக்கு

  இலக்கியத்தில் உடன்போக்கு அன்றொருநாள்.... அதிகாலை வேளை.... கதிரவன் செம்முகம் காட்டித் தன் சிரிப்பலையைச்  சிந்திவிட சோம்பல் முறித்துப் படுக்கையிலிருந்து எழுந்தாள் செவிலித்தாய். கண்கள் அருகில் படுத்திருந்த  அழகு மகளைத் தேட... அதிர்ச்சியுற்றாள்.  படுக்கை அப்படியே விரிந்து கிடக்க...  அறை  பதுமை இல்லாது  வெறுமையாய்க்   கிடந்தது.  அக்கம்பக்கம் தேடினாள். அண்டை அயலாரிடம்  போய் கேட்டுப் பார்த்தாள். எல்லோரும் கையை விரித்தனர். அங்குமிங்கும் ஓடினாள்.... எங்கேயும் மகளைக் காணவில்லை. இப்போது முகத்தில் கூடுதலாக ஒரு கலக்கம் வந்து அப்பிக் கொண்டது. .... என்ன செய்வேன்?  அவள் அன்னைக்கு யாதுரைப்பேன் ? கலங்கிப்போனாள்...கலக்கத்தில் மனம் குழப்பமடையலானாள். குழப்பத்தில் கூடுதலாக என்னென்ன  எண்ணமெல்லாமோ வந்து எட்டிப் பார்த்தது. அவனோடு ஓடி இருப்பாளோ...? ஒருவேளை அப்படி செய்திருந்தால்... என்ற ஐயம் வந்து தொற்றிக் கொள்ள காண்போரிடம் எல்லாம் என் செல்வம் யாருடனும் செல்வதைக்  கண்டீரோ என வெளிப்படையாகவே விசாரிக்க ஆரம்பித்தாள். ஆளாளுக்கு உதட்டைப் பிதுக்கிவி...

கொன்றை மலர் சொன்ன பொய்

Image
சங்க இலக்கியப்  பாடல்களில்  கொன்றை மலருக்கு என்று  தனி இடம் உண்டு. காட்டில் கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்கும் அழகிய காட்சியைத் தம் கவிதைகளில் கொண்டு வந்து காட்டி நம்மையும் கொன்றை மலர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தப் பெருமை பல புலவர்களுக்கு உண்டு. தத்தமது கற்பனைக்கு ஏற்ப தாம் சொல்ல வந்த கருத்தை தமது கதாப்பாத்திரங்கள் மூலமாக அழகுபடக் கூறி நிற்பர்.  அந்த வகையில் ஓதலாந்தையார் என்ற  புலவர் கொன்றை மலரைப் பற்றிப்  பாடிய பாடல் இப்படியும் பாடமுடியுமா?  என வியக்க வைக்கிறது. கார்காலத்தை வரவேற்பதற்காக  கொன்றை மரங்கள் பூக்களைத் தலையில் சுமந்து நிற்பது கண்கொள்ளாக் காட்சிதான். மறுப்பதற்கில்லை. ஆனால் அந்தப் பூக்களின் புன்சிரிப்புக்குள்  ஒரு பொய்யல்லவா மறைந்து கிடந்திருக்கிறது! கவிதைக்குப் பொய்யழகு என்பார்கள். அந்தப் பொய்யைக் கொன்றை மலருக்குள் பொதிந்து வந்து தந்த பெருமை  ஓதலாந்தையாருக்கு உண்டு. கொன்றை மலர்கள் பூத்துவிட்டாலே கார்காலம் வந்துவிட்டது என்று நினைத்துவிட வேண்டியதுதான். தோழி ஒருத்தி தன் தலைவியோடு  காட்டிற்குச் செல்கிறாள். காடெங...

சரியாக எழுதுவோம் - 3

  சரியாக எழுதுவோம் - 3 சில சொற்களை எழுதும்போது அப்படி இருக்குமோ இப்படியிருக்குமோ  என்ற ஒரு குழப்பம் ஏற்படும். இறுதியில் எப்படியும் இருக்கட்டும் என்று ஏதோ ஒன்றை எழுதுவோம். இப்படி நம்மை குழப்பத்தில் ஆழ்த்திய  சொற்கள் பல உண்டு. அதற்கான காரணம் அந்தக்  குறிப்பிட்ட சொல்லுக்கான சரியான பொருளை நாம் அறியாதிருத்தலே ஆகும். அவை எந்தெந்த இடங்களில் எவ்வாறு கையாளப்பட்டிருக்கின்றன என்பதை சற்று கவனமாக உற்று நோக்கினால் பெரும்பாலான தவறுகளைத் தவிர்க்க முடியும். சரியான சொல்லைச் சரியான இடத்தில் பயன்படுத்தத் தெரிந்தால் பிழைபட எழுதுவதைத் தவிர்க்கலாம். வாருங்கள் தெரிந்து கொள்வோம். தருவாய்,தறுவாய் மரணத் தருவாயில்  என்று எழுதுவது சரியா? மரணத் தறுவாயில் என்று எழுதுவது சரியா ? எத்துணை நேரம் தடுமாறியிருப்போம். தருவாய் என்றால் கொடுப்பாய் என்று பொருள்படும். தறுவாய் என்றால் இடம், காலம் ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிடும்போது  கையாளப்படும் சொல். " புறப்படும் தறுவாயில் போய்ப் பார்க்க வேண்டும்" என்று எழுதினால் புறப்படும் நேரத்தில்  என்று பொருள்படும். ஆதலால் காலத்தைக் குறிப்பிடும்போது தறுவாய்...

கண்ணதாசன் ஒரு காலக்கணிதம்

  கண்ணதாசன் ஒரு காலக்கணிதம் காலத்தை வென்ற கவிதைகளுக்கு என்றென்றும் நம் இதயத்தில் நிரந்தர இடமுண்டு. கண்ணதாசனின் அனைத்து  கவிதைகளுமே காலத்தை வென்றவைதான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சில கவிதைகள் நம்மோடு நடக்கும். சில கவிதைகள் பேசும். சில கவிதைகள் சிந்தனையைத் தூண்டும். எண்ணவோட்டத்தில் இடைவிடாது வந்து இடையூறு செய்யும். எழும்பி ஓட வைக்கும். இதுதான் கவிதைக்கான உண்மையான ஆற்றல். ஈடுபாட்டோடு படிப்போர் அனைவரும் இந்த அனுபவங்களைக் கடந்துதான் வந்திருப்பர். அப்படி எனக்குள் திரும்பத்திரும்ப ஏதோ ஓர் உணர்வைத் தூண்டி வாசிக்க வைத்த கண்ணதாசனின் கவிதைகளுள் ஒன்று " கவிஞன் யானோர் காலக் கணிதம்." என்ற பாடல். இந்தக் கவிதையில் கண்ணதாசன் தன்னை எப்படி  அறிமுகப்படுத்திருக்கிறார் பாருங்கள்.! கவிஞன் யானோர் காலக் கணிதம். இல்லை...இல்லை...அவர் தன்னைக் காலக்கணிதமாகவே உருவகப்படுத்தி இருக்கிறார். காலத்தைக் கணிப்பவர் யார்? கவிஞராகிய யான். எவ்வளவு திடமான நம்பிக்கை. மனதில் பட்டதைப் பட்டென்று சொல்லும் பண்பு கொண்டவர் கண்ணதாசன். உள்ளதை உள்ளவாறு சொல்லுவார். தன்னைப்பற்றிய குறைகளையும் ஒத்துக் ...

தொண்ணூறும் தொள்ளாயிரமும்

தொண்ணூறும் தொள்ளாயிரமும் ராகவன் கையைப்  பிடித்துக் கொண்டு துள்ளல் போட்டு நடந்து வந்தாள் தாரணி. தாரணி தமிழாசிரியர் ராகவனின் பேத்தி. நேற்றுதான் நகரத்திலிருந்து ஊரிலிருக்கும் தாத்தா வீட்டிற்கு  வந்திருந்தாள். வந்த நேரத்திலிருந்து தாத்தா ஆற்றைப் பார்க்கப் போகவேண்டும்  என்று கேட்டுக் கொண்டே இருந்தாள். இன்று காலையிலேயே இருவரும் ஆற்றை நோக்கி நடந்து வந்தனர். வரும் வழியில் ஆற்றோரமாக நிற்கும் பனை மரங்களை எல்லாம்  எண்ணிக் கொண்டே வந்தாள் தாரணி. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என்று சொல்லிக் கொண்டு வந்தவள் ஒன்பது என்பதைச் சொன்னதும் தாத்தாவின் முகத்தைப் பார்த்தாள். "என்ன ?"என்றார் தாத்தா. "தாத்தா இந்த எண்களுக்கு எல்லாம் யார் பெயர் கொடுத்தது தாத்தா?" "நம் முன்னோர்கள் எண்களை  அடையாளப்படுத்துவதற்காக ஒவ்வொரு  பெயரிட்டு வேறுபடுத்தி சொல்லி இருக்கிறார்கள்." "அப்படியானால் இவை இடுகுறிப்  பெயர்கள் இல்லையா தாத்தா?" "ஆம்...எந்த ஒரு காரணமும் கருதாது நம் முன்னோர்கள் இட்டு வழங்கியப் பெயர்கள் இடுகுறிப் பெயர்கள் " "அப்படியானால் எல்லா எண்களு...

கல்வி அழகு

Image
                கல்வி அழகு ஒருவன் தன் வாழ்வில் கிடைத்த மிகப் பெரிய செல்வமாகக் கருதுவது கல்விச் செல்வமாகும். கல்வியை ஒருமுறை பெற்றுவிட்டால் வாழ்நாள் முழுவதும் கூடவே வரும். என்னிடம் நிறைய கல்வி இருக்கிறது.  யாராவது களவாடி சென்று விடுவார்களோ ?  அச்சமே வேண்டாம்.  விலைமதிப்பற்ற பொருளைக் கூடவே  வைத்துக் கொண்டு கவலை இல்லாமல்  நிம்மதியாகத் தூங்கலாம்.    ஐயோ பெருமழை வந்துவிட்டதே.... வெள்ளம் வந்து அடித்துச் சென்றுவிடுமோ ? அஞ்ச வேண்டாம். அக்கம்பக்கத்தில் தீவிபத்து ஏற்பட்டு விட்டதே . என் கல்வி எரிந்து சாம்பலாகிவிடுமோ? நினைத்து நினைத்து வெதும்பிக்  கிடக்க வேண்டாம். எப்போது நான் உங்களுடையவள் ஆகிவிட்டேனோ இனி எப்போதும் உங்களுடையவள்தான். எந்த ஒரு சக்தியாலும் உங்களிடமிருந்து என்னைப் பிரிக்க முடியாது . பிரிக்க முடியாத பந்தம் உங்களுக்கும் எனக்கும் உண்டு என்கிறது கல்வி. இதையேத்தான் விவேக சிந்தாமணி ஆசிரியர் "வெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாது வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது கள்ளர்க்...