பழியஞ்சிப் பாத்தூண்....
பழியஞ்சிப் பாத்தூண்.... " பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் " ( குறள் : 44 ) எந்தவித பழி பாவமும் இல்லாத வழியில் பொருளைத் தேடி , அப்படி தேடிய பொருளை பக்குவமாக தன் உறவுகளோடு பகிர்ந்து உண்டு வாழ்பவனுடைய பரம்பரை ஒருபோதும் அழிந்து போவதில்லை. பழி _ தீவினை, குற்றம் அஞ்சி _ பயந்து ,நடுங்கி பாத்து _ பிரித்துக் கொடுத்து ஊண் _ உண்ணுதல் உடைத்தாயின் _ உடையதானால் வழி _ நெறி , ஒழுங்கு எஞ்சல் _ மிஞ்சுதல் ,குறைதல் எஞ்ஞான்றும் _ எப்போதும் இல் _ இல்லை விளக்கம் : அற வழியில் மட்டுமே பொருள் தேட வேண்டும். எப்படியாவது பொருள் ஈட்டினால் போதும் என்று பழிபாவங்கள் செய்து பொருள் ஈட்டினால் அது என்றாவது துன்பத்தில் கொண்டு விட்டுவிடும். நல்வழியில் தேடிய பொருளையும் தான் மட்டுமே வைத்து அனுபவிக்காதபடி அனைவரோடும் பகிர்ந்து கொடுத்து உண்ணும் நற்பண்பு வேண்டும். அப்படி வாழ்ந்தால் அவன் பரம்பரை என்றென்றும் இட...