Posts

Showing posts from July, 2026

நந்தவனத்தில் ஓர் ஆண்டி

நந்தவனத்தில் ஓர் ஆண்டி  சித்தர்கள் எப்போதுமே உடம்பு, ஆன்மா, நிலையாமை என்று சிந்தனைக்குரிய கருத்துக்களையே  கூறுவர். வேடிக்கையாகச் சொல்லிவிட்டுப் போவதுபோல் இருக்கும். வேடிக்கையிலும் ஒரு உள்ளார்ந்த கருத்து இருக்கும். இப்படித்தான்சித்தர் ஒருவர் ஒருநாள் கால்போனபோக்கில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். வழியில் ஒரு சுடுகாடு.அங்கே காணும் காட்சி...அவரை சிந்திக்க வைக்கிறது. இவ்வளவு சிறுவயதில் இப்படிப்பட்ட பரிதாபத்தைத் தேடிக் கொண்டானே என மனம் வருந்துகிறார். என்ன உலகம் இது? நேற்று இருந்தார். இன்று இல்லை. வாழும்வரை ஆடிய ஆட்டம் என்ன ? எனக்கு நிகர் யார் என்று அடித்தக் கொட்டம் என்ன ?  மூச்சுப் போச்சு என்றால் எல்லாம்  அடங்கிப் போச்சு. ஆனால் கிடைத்தற்கரிய பிறவியல்லவா இந்த மானிடப்பிறவி. இந்தப் பிறவியின் அருமையை எத்தனைபேர் உணர்ந்து வாழ்கிறார்கள்.? வரமாக வாங்கி வந்தப் பிறவி. அதன் அருமையை உணராமல் தாறுமாறாக வாழ்ந்து கொடுத்த காலத்திற்கு முன்பாகவே வாழ்க்கையை முடித்துக் கொண்டுவிட்டானே என்று நினைத்து அங்கேயே நின்று பார்த்துக் கொண்டே இருக்கிறார்.  இப்படி பொசுக்கென்று போய்ச் சேருவான்  எ...

பணி நிறைவுப் பாராட்டு

Image

வல்லினம் மிகா இடங்கள்

வல்லினம் மிகா இடங்கள்  இரண்டு சொற்கள் சேரும்போது  வருமொழி முதல் எழுத்து வல்லினமாக   இருந்தால் எந்தெந்த இடங்களில் எல்லாம்   வல்லினம் மிகாது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.  க  ,ச  ,ட  ,த  ,  ப  ,  ற ஆறு எழுத்துகளும்   வல்லினம் எனப்படும்.  இவற்றுள்  ட ,  ற ஆகிய இரண்டு எழுத்துகள்  மொழிமுதல் வராது.  மீதமுள்ள க , ச , த , ப ஆகிய நான்கு எழுத்துகளும்  வருமொழி முதல் எழுத்தாக வரும்போது   எந்தெந்த இடங்களில் எல்லாம் மிகாமல்   இயல்பாக வரும் என்பதைக் காண்போம். 1.   உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது. முதலாவது உம்மைத்தொகை என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.  இரண்டு சொற்களின் இடையில் அல்லது  இறுதியில் வர வேண்டிய  'உம் 'என்னும்  இடைச்சொல் மறைந்து நின்று அதன் பொருளை உணர்த்தி வரும் சொற்கள் உம்மைத்தொகை எனப்படும்.   இத்தகைய உம்மைத்தொகை சொற்களில்  வல்லினம் மிகாது. தாய் +  தந்தை  =  தாய்தந்தை (தாயும் தந்தையும்) இரவு  ...

வல்லினம் மிகும் இடங்கள்

வல்லினம் மிகும் இடங்கள்  வல்லின எழுத்துகள் க,  ச   ட. ,  த.  ப.   ற.  வல்லின எழுத்துகள்  இரண்டு சொற்கள் சேரும்போது வருமொழி முதலில் வல்லின எழுத்து வந்தால் எந்தெந்த இடங்களில் மிகும் எந்தெந்த இடங்களில் மிகாது   என்பதைப்பற்றி பல்வேறு  ஐயங்கள் ஏற்படுவதுண்டு.  இந்த வல்லின எழுத்துகளில் ட , ற ஆகிய இரண்டு எழுத்துகளும் மொழிமுதல் வராது. மீதமுள்ள க்  ,ச் ,த் ,  ப் ஆகிய நான்கு வல்லின எழுத்துகளும் வருமொழி முதல் எழுத்தாக அமையும்போது எந்தெந்த இடங்களில் எல்லாம் ஒற்று மிகுந்து வரும் என்பதைப் பற்றி காண்போம்.  க. ,  ச , த  ,ப என்ற எழுத்துகள் அப்படியேவும் வரலாம். அல்லது தமது வருக்க எழுத்துகளோடும் வரலாம். எடுத்துக்காட்டாக  அந்த  +  பள்ளி  =  அந்தப் பள்ளி   என எழுதுகிறோம். இதில் பள்ளி என்பது வருமொழி இதில் முதல் எழுத்து' ப. ' இந்த 'ப' என்பது      ப் + அ  = ப என உயிர்மெய் ஆகிறது. இப்போது 'ப் 'என்ற வல்லினம் கருத்தில் கொள்ளப்படும்.         ...

கோபத்தோடு கொள்ளுங்கள் பிணக்கு

கோபத்தோடு கொள்ளுங்கள் பிணக்கு  சாக்ரட்டீஷ் உலகின் தலை சிறந்த தத்தவ ஞானி.கோடிக்கண மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தாலும் மனைவியிடம்  அவரால் நல்ல பெயர் எடுக்க முடியவில்லை. அவர் தன் எழுத்துக்குக் கொடுத்த  முக்கியத்துவத்தை வீட்டிற்கு கொடுப்பதில்லை என்பது மனைவியின் குற்றச்சாட்டு. வீட்டில் என்ன இல்லை ...என்ன இருக்கிறது..  எதையுமே அவர் கண்டு கொள்ளவே மாட்டார். ஒருமுறை இப்படித்தான் வெகுநேரமாக தன்  நண்பரோடு பேசிக் கொண்டிருந்தார்.  பலமுறை மனைவி அழைத்துப் பார்த்தார். அவர் பேச்சை நிறுத்துவதாக தெரியவில்லை. வீட்டில் உள்ள பொருட்களை அங்கும் இங்கும்  வீசி தன் கோபத்தை வெளிப்படுத்திப் பார்த்தார். அப்போதும் அவர் கண்டு கொள்ளவே இல்லை. மாடிக்குச் சென்றார். ஆத்திரத்தில் ஒரு  வாளி தண்ணீரை மொண்டு வந்து  அப்படியே சாக்ரட்டீஷ் தலை மீது ஊற்றினார். நண்பர் அப்படியே வாயடைத்துப் போனார். சாக்ரட்டீஷ் முகத்தைப் பார்த்தார். அவரோ ஒன்றுமே நடக்காதது போல இதுவரை இடி இடித்தது. இப்போது மழை  கொட்டுகிறது "என்று வேடிக்கையாகப் பதிலளித்தார். இப்படித்தான் கோபம் வந்தால் பலருக்கு  தாங்...

கால் நொந்தேன் நொந்தேன்

கால் நொந்தேன் நொந்தேன்  " யாரை எங்கே வைப்பது என்று  யாருக்கும் தெரியலே அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும்  பேதம் புரியலே பேதம் புரியலே...." கண்ணதாசனின் இந்தப் பாடல் காதோடு வந்து மோத ஏதேதோ நினைவுகள் வந்து இதயத்தைத் தட்ட மெல்லச் சிரித்துக் கொண்டேன். அன்றொருநாள்.... சோழமன்னன் ​சோலைவளம் கண்டுவர காவிரிக் கரையோரம் நடந்து வந்துகொண்டிருந்தான்.காவிரிக் கரையோரத்தில் ஒரு சங்கு ஒன்று வாயைத் திறந்தபடியே வானத்தை நோக்கி அண்ணாந்து கிடந்தது. அப்போது ஆற்றங்கரையில் உள்ள ஒரு மரத்தில் பூத்திருந்த பூவிலிருந்து ஒரு துளி தேன் திறந்திருந்த அந்த சங்கின் வாயில் விழ... ஆஹா...என்னவொரு அருமையான காட்சி! அந்தக் காட்சியில் தன்னைத் தொலைத்து சிறிது நேரம்  அப்படியே நின்றிருந்தான் மன்னன். அந்த காட்சியை அசை போட்டபடி  அரண்மனைக்குத் திரும்பினான் மன்னன். இயற்கைக்குத்தான்  எத்துணை கருணை!அந்தக் காட்சியும் அதன் நேர்த்தியும் மன்னன் நினைவைத் தட்டித் தட்டிச் செல்ல இரவு முழுவதும் தூக்கம் வராமல் அந்தகாட்சியின் நினைவியில் தூக்கம் தொலைத்துப் புரண்டு கொண்டிருந்தான் . அறிவற்ற சங்கினையும் அங்கு வந்து அண்ணாந்தி...

Hunger knows no rules

Hunger knows no rules  When hunger comes, everything else loses its importance. When you are hungry, even ten will fly away. We have heard that "Hunger does not know taste".  What is this, when you are hungry, even ten will fly away?  What is that ten?  Aren't you eager to know! Wait a minute. I am coming after knowing hunger. I mean, I am coming after reading the song of the Auvaiyar and satisfying my hunger for knowledge. What is this? Let me think Auvaiyar is saying something else! What I thought was When you are hungry, the pot will be empty We will also roll the rice and throw it inside, right? That is what the sage would have said when you are hungry I thought that the sage would have said that when you are hungry, even ten will fly away She gives a different answer. Here is the song for you... " Honor, family, education, truth, intelligence Charity, penance, elevation, humility _ of honey Lust for those who have been told about the flow of blood All ten will f...

பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்

பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்   " பசி ருசி அறியாது "என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.       "பசித்தபின் புசி "என்று சொல்லக் கேட்டிருக்கிறோம்.  இது என்ன பசி வந்தால் பத்தும் பறந்து போகும்?  அது என்ன பத்து ? தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதல்லவா!  கொஞ்சம் பொறுங்கள். பசியாறிவிட்டு வருகிறேன்.       அதாவது ஔவையின் பாடலைப் படித்து அறிவுப் பசி ஆற்றிவிட்டு வருகிறேன் என்று சொன்னேன். அப்பாடா... என்ன இது? நானொன்று நினைக்க இந்த ஔவை வேறொன்று சொல்கிறாரே! நான் என்ன நினைத்தேன் என்றால்  பசி வந்தால் சட்டி பத்த இருக்கும் பருக்கையையும் வழித்து உருட்டி  உள்ளே தள்ளி விடுவோம் இல்லையா? அதைத்தான் பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று ஔவை சொல்லியிருப்பார் என்று நினைத்தேன். ஔவை என்னடா வென்றால் வேறு ஒரு பதிலைச் சொல்கிறார். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பதற்காக  ஔவை சொல்லும் விளக்கம்  இதோ உங்களுக்காக... "   மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை  தானம் தவம் உயர்ச்சி தாழாண்மை _ தேனின்  கசி வந்த...

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்  "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்று படித்திருக்கிறோம். அதனால்தான் வேளாண்மை உயிர்நாடி என்கிறோம். விவசாயி வேளாண் தொழில் செய்யாவிட்டால்...எந்தத் தொழில் வளர்ச்சியடைந்தும் பயனில்லை. ஒரு வயிற்றுச் சாப்பாட்டுக்குத்தான் இத்தனை ஓட்டமும் ...ஓயா உழைப்பும்.. தூங்கா விழிகளும்... ஓய்வறியா உடம்பும்....ஓட்டமும் நடையும். ஆனால் வயிற்றுக்குச் சாப்பாடு கிடைத்துவிட்டால் மட்டும் போதுமா?  அதனால் திருப்திபட்டுக்கொள்கிறோமா  என்றால் இல்லை என்பதுதான் உண்மை. ஒன்று கிடைத்தால் இன்னொன்றின்மீது நாட்டம். அதுவும் கிடைத்துவிட்டால்.... இன்னும் கொஞ்சம் வசதி வாய்ப்பைப் பெருக்கிக் கொள்ளலாமோ என்று ஆசை வந்து பிடறியைப் பிடித்து முன்னே தள்ள உட்கார நேரமில்லாமல் சாப்பிட நேரம் எடுத்துக் கொள்ளாமல் பணத்தின் பின்னால்  பதவியின் பின்னால் பேரும் புகழும் பெற்றுவிட வேண்டும் என்ற ஒரு போதையில்  வெறி கொண்டு ஓடத்தொடங்கிவிடுவோம். இப்படியாக நமது ஓட்டம் ஒருநாளும் நின்றபாடில்லை. சரி.எல்லாம் கிடைத்துவிட்டது. இனி நிம்மதியாக வாழலாம் என்றால் வருமான வரித்துறை அதிகாரிகள் எந்த நேரத்தில் வந்து...

இன்னாது அம்ம இவ்வுலகம்

இந்த உலகம் எப்படிப் பட்டது?  பணக்காரர்களுக்கான உலகமா? ஏழைகளுக்கானதா? ஒருபக்கம் வறுமை . மற்றொரு பக்கம் ஆடம்பரமும் கொண்டாட்டமும். அன்றாட வாழ்வாதாரத்திற்கே  அல்லாடும் மக்கள்  ஒருபுறம் இருக்க கோடி கோடியாக பணம் புரளும் மனிதர்கள்  மற்றொருபுறம் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஒன்றுமே புரியவில்லை. ஏனிந்த முரண்பாடு? ஏனிந்த ஏற்றத்தாழ்வு? கண்ணீர் ஒரு புறம். களியாட்டம் மறுபுறம். என்ன இது? இப்படி மாறுபட்ட வேறுபட்ட உலகம். இதைப் படைத்தவர்  ஒருவரா?அல்லது வெவ்வேறு ஆட்களா? மனதிற்குள் எத்தனை எத்தனையோ கேள்விகள். யாரைக் கேட்பது? படைத்தவனிடம்தான் தான் கேள்வி கேட்க முடியும். வேறு யாரைக் கேட்க முடியும்? இதற்கெல்லாம் காரணம் இறைவன் என்றால்  எப்படி இப்படி  ஏற்றத் தாழ்வான உலகை அவரால் படைக்க முடிந்தது.? படைப்பின் மீதும் படைத்தவன்மீதும் ஒரு  தார்மீகக் கோபம் எழுகிறதல்லவா? இப்படி படைத்தவன் மீது கேள்வி கேட்க வைத்து,அதற்கான விடையையும் சொல்லிச் செல்லும் பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது.  ஒரு வீட்டில் சாவிற்கான பறை ஒலிக்கிறது. அழுகையும் கூப்பாடும் நெஞ்சைப் பிழிந்தெடுக்கிறது. மற்றொ...