தாய்
தாய் தாய்...தாய்...புஷ்பத்தாய் அக்கா _ நீ எனக்குத் தாய் ஆட்டுப்பாலூட்டி ஆராரோ பாடி ஆசையாய் தலைவாறி ஆடை அலங்காரம்பண்ணி ஆரம்பப்பள்ளி அனுப்பிய அக்கா_ நீ எனக்குத் தாய்! அன்பாய்ச் சுமந்தாய் அடித்தாய்க் கடிந்தாய் அணைபோட்டு எம்மை அரணாய் காத்து வளர்த்த அக்கா _ நீ எனக்குத் தாய்! வளர்த்தாய் உவந்தாய் வளர்சிறு பிராயத்தில் வந்த அத்தான் கரம்பிடித்து வழிந்தோடும் நீரோடு சென்ற அக்கா _ நீ எனக்குத் தாய்! அக்கா உன் அன்பனைத்தும் அழிக்க வொண்ணா அருஞ்சிலை எழுத்தாக்கி அடிமனதில் பதிந்து நிற்கும் அக்கா _ நீ எனக்குத் தாய் ! அந்நியம் அறியா அன்பான அத்தானோடு ஆண்டாண்டு காலம் அணையாய் இணையாய் ஆண்டவன் அருளால் வாழும் அக்கா _ நீ எனக்குத் தாய்! வானும் நிலனும் போல வாழ்வாங்கு வாழ்வாய் பல்லாண்டு..பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு நலமாய் அக்கா _ நீ எனக்குத் தாய்! தாய்...தாய்...புஷ்பத்தாய் அக்கா _ நீ எனக்குத் தாய் !