கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே......
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே.... உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாக விளங்குகின்ற மொழி தமிழ் மொழி. ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி’ என்று புறப்பொருள் வெண்பா மாலை என்ற இலக்கண நூல் சொல்லியிருக்கிறது. அதனால் என்று தோன்றியது என்றே சொல்லமுடியாத அளவுக்குப் பழைமையான மொழி தமிழ் மொழி என்று அறிய முடிகிறது. தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதிய பனம்பாரனார் என்பவர் "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்தமிழ்கூறும் நல்லுலகம்" என்று தமிழ்நாட்டின் எல்லை எது என்பது பற்றி அழகாக கூறி வைத்துள்ளார். அதன்படி ,வடக்கே வேங்கடமலை முதல் தெற்கே குமரிமுனை வரை தமிழ் பேசப்பட்ட நிலம் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. . வரலாற்றிற்கு முந்தைய காலத்துத் தமிழக வரலாற்றை நாகரிகத்தின் வளர்ச்சியால் ஏற்பட்ட மாறுதல்களையும், பயன்படுத்திய கருவிகளையும் அடிப்படையாகக் கொண்டு , 1. பழங்கற்காலம், 2. இடைக் கற்காலம் 3. புதிய கற்காலம் 4. இரும்புக் காலம் என்று நான்கு காலங்களாக வகைப்படுத்தலாம். இவற்றை வரையறை செய்யத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகழ்வாராய்ச்சிகள் மூலம் கிடைத்துள்ள புதைபொருட்...