Posts

Showing posts from October, 2020

ஆபத்துக் குதவாப் பிள்ளை....

ஆபத்துக் குதவாப் பிள்ளை.... அனுபவ மொழிகள் அடங்கிய அறிவுக் கருவூலம் விவேக சிந்தாமணி என்ற நூல். இது செய்யுள் வடிவில் இயற்றப்பட்டிருந்தாலும் எளிய நடையில் எழுதப்பட்டிருப்பதால் அனைவராலும் எளிதில் பொருள் அறிந்து கொள்ள முடியும். இதன் ஆசிரியர் யார் என்பதற்கான எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை. சிந்தனைக்கு உகந்த கருத்துக் குவியல் என்பது மட்டுமல்லாமல்  நீதிக் கருத்துகளும் கொண்ட ஒரு அரிதான செய்யுள் தொகுப்பு நூல் இது என்பது மட்டும் உண்மை. இந்தப் பகுத்தறிவு பட்டறைக்குள்  மொத்தம் 135 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும்  படிக்கப் படிக்க சிந்திக்கத் தூண்டும். தத்துவத்தை அள்ளித் தரும். கற்பனைகள் மனதைக் கொள்ளை கொள்ளும். உவமை உள்ளத்திற்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தும். நீதிக் கருத்துக்கள் விஞ்சி நிற்கும். அந்தப் பாடல்களிலிருந்து ஒரே ஒரு  பாடல் உங்களுக்காக... பயனில்லாதவை  எவை எவையென தனித்துவப்படுத்தி அடையாளம் காட்டிச் சொல்லிச்  செல்லும்  பாடல்  இதோ: " ஆபத்துக் குதவாப் பிள்ளை அரும்பசிக் குதவா அன்னம் தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர் கோபத்தை அடக்கா வேந்தன்...

வெள்ளத்தால் போகாது ....கல்வி

ஒருவன் தன் வாழ்வில் கிடைத்த மிகப் பெரிய செல்வமாகக் கருதுவது கல்விச் செல்வமாகும். கல்வியை ஒருமுறை பெற்றுவிட்டால் வாழ்நாள் முழுவதும் கூடவே வரும். என்னிடம் நிறைய கல்வி இருக்கு யாராவது  களவாடி சென்று விடுவார்களோ ..என்ற . கவலை இல்லை. ஐயோ பெருமழை வந்துவிட்டதே... வெள்ளம் வந்து அடித்துச் சென்றுவிடுமோ என்று அச்சப்படத் தேவையில்லை. தீயில் எரிந்து சாம்பலாகிவிடுமோ என்று நினைத்து வெதும்பிக் கிடக்க வேண்டாம். எப்போது நான் உங்களுடையவள் ஆகிவிட்டேனோ... இனி எப்போதும் உங்களுடையவள்தான். எந்த ஒரு சக்தியாலும் உங்களிடமிருந்து என்னைப் பிரிக்க முடியாது பிரிக்க முடியாத பந்தம் கல்விக்கும் கல்வியைப்  பெற்றவருக்குமிடையே ஏற்பட்டுவிடும். இதையேத்தான் விவேக சிந்தாமணி ஆசிரியர் வெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாது வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது கள்ளர்க்கோ மிக அரிது காவலோ மிக எளிது கல்வி என்னும் உள்ளத்தே பொருளிருக்க உலகெலாம் பொருள்தேடி உமல்வதேனோ !" என்று கூறுகிறார். கல்விதாங்க செல்வம் என்று விவேக சிந்தாமணி  சொல்ல....இல்லை...இல்லை...இல்லை... செல்வம்மட்டுமல்ல...ஒருவனுக்கு அழகே...

ஒன்றே செய் ; நன்றே செய்

ஒன்றே செய்; நன்றே செய் நல்லோர்க்கு இல்லை நாளும் கிழமையும்." தொடக்கம் நல்லதாக இருந்தால்  முடிவும் நன்றாகவே இருக்கும். ஒவ்வொரு நாளையும் நல்ல நாளாக  இருக்கும் என்ற நம்பிக்கையோடு  தொடங்குங்கள். நன்மையானதாகவே இருக்கும். அன்பு,நட்பு ,தொழில், படிப்பு,கடமை போன்றவை எல்லாம் சரியான நேரத்தில் செய்யப்பட வேண்டும். நாளை என்று தள்ளிப்போடுவோமானால் அது நடைபெறாமலேயே போய்விடலாம். அன்றரிவாம் என்னாது அறஞ் செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை" என்றார் வள்ளுவர். நாளை நாளை என்று வேலைகளைத் தள்ளிப் போடும்போது ஏராளமான வேலைகள் கண்முன் குவிந்து கிடக்கும். எதைச் செய்வது என்பதே  மலைப்பாக இருக்கும். இவ்வளவு வேலை செய்ய வேண்டுமா என்ற நினைப்பே நம்மை சோர்வுக்குள்ளாக்கிவிடும். காரணமில்லாத மன அழுத்தத்தைக் கொடுக்கும். தொழில் செய்வதற்கு என்று ஒரு காலம் உண்டு. அதே போன்றுதான் கல்வியும். வயதும் காலமும் செல்லும் முன்பே முந்திக் கொள்ள வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம். கடமை ஆற்றுவது உரிய நேரத்தில் நடைபெற வேண்டும். பிந்தி நமது கடமைகளை ஆற்றலாம் என்று தள்ளிப் போடுவோமானால் சில நேரங்களில் அதனைச் செய்வதற்கான வாய்ப...

நம்பினால் நம்புங்கள்

நம்பினால் நம்புங்கள் மெதுவாக அறையினுள் எட்டிப் பார்த்தாள் பால்தங்கம். கண்ணுக்கு முன்னால் டேப் ரெக்கார்டர் பார்த்ததுமே ஒரு அற்ப ஆசை. பக்கத்தில் சென்றாள். நாற்காலியில் அமர்ந்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள். மேசையின்மீது நான்கைந்து கேசட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றாக கையில் எடுத்து என்னென்ன பாடல்கள் இருக்கிறது என்று வாசித்துப் பார்த்தாள். ஒரு கேசட்டில் அவளுக்குப் பிடித்தமான ஒரு பாடல் இருந்தது. அந்தக் கேசட்டை எடுத்துப் போட்டுப் பார்த்தாள். அருமையான பாடல். தன் கவலைகளுக்கு மருந்தளிக்கும் பாடல். பாடலைக் கேட்டதும் கண்கள் நீரை வரவழைத்தன. தனக்கென்றே எழுதப்பட்டது போன்ற பாடல். ஒரு முறை கேட்டதும் தன்னை மறந்தாள்.... பாடுபவர் தன் மனகஷ்டம் அறிந்து பாடுவதுபோல் இருந்தது. இன்னொரு முறை கேட்க வேண்டும்போல் இருந்தது. மறுபடியும் போட்டு கேட்டாள். கூடவே தானும் படித்தாள். இப்போது இந்தப் பாடல் அவளுக்குள் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்த அதை மனனம் செய்ய வேண்டும் என்ற ஆசை. கையில் ஒரு பேனாவை எடுத்து எழுதினாள். எழுதி வைத்தப் பாடலை பாடிப் பாடி பழகினாள். மனசு லேசானது போல இ...

செய்வன திருந்தச் செய்

        செய்வன திருந்தச் செய் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்று முடிவு பண்ணியாயிற்று என்றால் அதனை  சரியாக செய்து முடித்துவிட வேண்டும். இங்கத்தொட்டேன் அங்க தொட்டேன் என்று  அரைகுறையாகச் செய்யக் கூடாது. அப்படி ஒரு செயலில்  உங்களால்  முழுமையாக ஈடுபட முடியாதா.. பரவாயில்லை. ... தொடங்காமலேயே விட்டுவிடுங்கள். அவசரப்படுவதாலோ பதறுவதாலோ  நமக்கு வெற்றி கிட்டப் போவதில்லை. " எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு "  என்றார் வள்ளுவர்.    தொடங்கும் முன் அதைப் பற்றிய   ஆராய்ச்சி தேவை.   தொடங்கிய பின்னர் அதை எப்படி நல்லமுறையில்  முடிப்பது என்பதில்தான் முழு கவனமும் இருக்க  வேண்டும்.    வாழ்வில் நல்ல வகையில் முன்னேற வேண்டும்  என்ற எண்ணம் உள்ளவர்கள் ஒருபோதும் செயலைத் தொடங்கும்போது இருந்த ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ள மாட்டார்கள். தொடர்ந்து அதே ஆர்வத்தோடு  செயல்படும்போதுதான் நாம் தொடங்கிய செயல் நல்லமுறையில்  முடிவு பெறும். ஒரு ஊரில் அண்ணன் தம்பி இருவர்  மட்பாண்டம் வனையும்...

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி....

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி.... " ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற் கெழுமையும் ஏமாப் புடைத்து "        ஒருமைக்கண் _ ஒரு பிறப்பில் தான் கற்ற _ கற்றுத் தேர்ந்த கல்வி _ அறிவு ஒருவற்கு _ ஒருவருக்கு எழுமையும் _ பல காலம் ஏமாப்பு _  பாதுகாப்பு உடைத்து _ உடையது ஒரு பிறப்பில் ஒருவன் கற்றக் கல்வியானது இந்தப் பிறவியில் மட்டும் அல்லாது ஏழேழு தலைமுறை வரையிலும் பாதுகாப்பாக  இருந்து உதவும். விளக்கம் : ஒரு முறை படித்துவிட்டால் போதும். அது என்றென்றும் நம் கூடவே வரும்.  இந்த உலகில் அழிவில்லாத ஒன்று உண்டென்றால் அது கல்வி மட்டுமாகத்தான் இருக்கும். ஒருமனப்பட்டு இந்தப் பிறவியில் கல்வியைப் பெற்றுக் கொண்டால் போதும். அது இன்னும் ஏழேழு பிறவிகளுக்கும் அரணாக இருந்து நம்மை பாதுகாக்கும். ஏழேழு பிறவிகள் என்பது தொடர்ந்து நாம் வாழும் காலம் என்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருமை என்பதை ஒரு பிறப்பு என்று சொன்னவர்கள் எழுமையை ஏழு பிறப்புகள் என்றனர். ஒரு தலைமுறையில் நாம் கல்வி அறிவு பெற்றுவிட்டால் அது ஏழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.ஆதலால் ...

உண்டாலம்ம இவ்வுலகம்....

Image
உண்டாலம்ம இவ்வுலகம்.... உலகம் ரொம்ப கெட்டுப் போய் விட்டது. எங்கு பார்த்தாலும்  கொலை ,கொள்ளை பாலியல் வன்கொடுமை, சண்டைச் சச்சரவு, நாட்டுக்கு நாடு போர்,  வீட்டுக்கு வீடு போட்டி- பொறாமை,  எங்கெங்கு நோக்கினும் அமைதி இல்லாச் சூழல் என்று  சொல்லிச்சொல்லிப் புலம்பாத  ஆளில்லை. ஒரு நிம்மதியற்ற வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாளைய விடியல் நல்லதாக இருக்குமா? இருக்காதா ?என்ற கலக்கம் ஏற்படும் அளவுக்கு புறச்சூழல் காணப்படுகிறது.  உலகமே அவ்வளவு தானா.? இனி உருப்படவே உருப்படாதா.? புலம்பல்கள் ஒரு பக்கம். பட்டப்பகலில் கொலை நடப்பதைத் தொலைக்காட்சியில் பார்த்த அச்சம் மற்றொரு பக்கம். இவற்றை எல்லாம் பார்த்து யாருமே நல்லவர்கள் இல்லையோ என்ற ஐயம் அனைவர் மனதிலும் எழுவது இயல்புதான். அனைவர் மீதும் ஒரு சந்தேகப் பார்வை. நம்பிக்கை ஏற்படுத்தும் படியான மனிதர்கள் இல்லையா? ஏன் இல்லை. ...? அப்படி இல்லாதிருந்தால் உலகம் என்றோ அழிந்து போயிருக்குமே!  இன்று வரை உலகம் நில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறதே! எல்லா நல்ல காரியங்களும் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றனவே! மழை பொழிகிறது. பூமி வி...

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க....

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க.... "தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம் "                                            குறள்  :  305 தன்னைத்தான்_ தன்னை காக்கின்  _  காக்க விரும்பினால் சினங்காக்க  _  கோபம் வராமல் காத்துக் கொள்க காவாக்கால் _  காத்துக் கொள்ளாவிட்டால்  தன்னையே  _ சினம் கொண்டவனையே கொல்லும் _ அழித்துவிடும் சினம்  _   கோபம்  ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும். அப்படிக் காத்துக் கொள்ளாவிட்டால் அந்தச் சினமே அவனை அழித்துவிடும். விளக்கம் :   ஒருவன் தன்னை எல்லா பழி பாவங்களில் இருந்தும்  காத்துக்கொள்ள விரும்பினால் கோபம் வராமல்  பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.   அப்படி தன்னைப் பாதுகாத்துக் கொள்ளாவிட்டால்  அந்தக் கோபம் அவன் வாழ்க்கையை   முற்றிலுமாக அழித்துப் போட்டுவிடும்.  கோபம் தன்ன...

அவமானம் தந்த வெகுமானம்

Image
அவமானம் தந்த வெகுமானம் கிண்டலும் கேலியும் நக்கலும் நையாண்டியும் செய்து பிறர் மனதைக் காயப்படுத்துவதற்கு என்றே ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது.  அது அவர்கள் குணமா அல்லது அவர்கள் செயலே அதுதானா என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். எது எப்படியோ நாம் செய்யும் கிண்டலால் யாரோ ஒருவர் காயப்படுகிறார்...இல்லை..இல்லை அவமானப்படுத்தப்படுகிறார் என்பதுதான் உண்மை. ஒரு சொல் வெல்லும் ஒருசொல் கொல்லும் கொல்லும் சொல்லைக் கையில் எடுத்து பேசுவதால் எத்தனை எத்தனை தற்கொலைகள் நாளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. வாழ வழி இல்லையே எனத்  தற்கொலை செய்து கொள்ளுபவர்களைவிட என்னை அவமானப் படுத்திவிட்டார்களே என்று தற்கொலை  செய்பவர்கள்தான் அதிகம். நான் என்ன அப்படி பெரிசாக சொல்லி விட்டேன்...என்பது சொல்லியவர்கள் தரப்பு வாதமாக இருக்கலாம். அவமானப்பட்டவர்களுக்கு அல்லவா தெரியும் அதன் வலியும் வேதனையும். அப்படியே நெஞ்சைப் பிடுங்கி வெளியே  வீசுவதுபோல் இருக்கும்.  . நாலு காசு சம்பாதித்துவிட்டால் யாரையும் அவமானப்படுத்திவிடலாம் என்பது சில  அரைகுறை அறிவாளிகளின் நினைப்பு.  உயர் பதவிக் கிட...

கலங்காது கண்ட வினைக்கண்....

Image
கலங்காது கண்ட வினைக்கண்.... " கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கம் கடிந்து செயல் "                                            குறள்   : 668 கலங்காது _ கலக்கமடையாது கண்ட வினைக்கண் _செய்யத்துணிந்த செயலில் துளங்காது _ சோம்பலின்றி தூக்கம் _ உறக்கம், காலம் தாழ்த்தாமல் கடிந்து _ மறந்து, ஒழிந்து செயல் _ செய்க ஒரு செயலைச் செய்யத் துணிந்துவிட்டால் மனம் கலக்கம் அடையாமல் பின்னோக்கிப் பார்த்து சோர்வடையாமல் உறக்கத்தை  மறந்து செயல்பட வேண்டும். விளக்கம் : செய்ய வேண்டும் என்று எடுத்துக் கொண்ட செயலின்கண் தளர்ச்சியின்றி காலம் தாழ்த்தாமல் உடனே செய்து முடிக்க வேண்டும். சோர்வின்றி ஊண் உறக்கமின்றி செயலில் ஈடுபட்டால் மட்டுமே வெற்றி காண முடியும். இடையில் எந்த கலக்கமும் வந்து மனம் குழப்பமடைய இடம் கொடுத்துவிடக் கூடாது. ஒரு செயலைத் தேர்ந்தெடுப்பதிலும் தெளிவு வேண்டும். தேர்ந்தெடுத்த பின்னர் பின்னோக்கித் திரும்பிப் பார்த்துவிடக் கூடாது. முன் வைத்த காலை பின் வைத்துவிடக் கூடாது...

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்....

Image
சொல்லுதல் யார்க்கும் எளிய..... சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் "                                    குறள்.  :       664 சொல்லுதல் _சொல்ல முற்படுதல் யார்க்கும் _  எவர்க்கும் எளிய      _எளிமையான செயல் அரியவாம் _மிகக் குறைவு, அரிதான செயல் சொல்லிய வண்ணம் _ சொன்னபடி செயல் _செய்து முடித்தல் ஒரு செயலைப் பற்றிப் பெருமையாகப் பேசுவது எளியது. ஆனால் சொல்லியபடி  செய்து முடிப்பது அரிது. விளக்கம்: இப்படிச் செய்யலாம் அப்படிச்செய்யலாம் என்று எளிதாகப் பேசிவிடலாம்.ஆனால் தான் சொல்லியபடி எல்லோராலும் செய்து முடிக்க முடியுமா என்றால்...பெரும்பாலும் கேள்விக்குறியாகவே இருக்கும். அழகாகப் பேசலாம்.பேசிய வண்ணம் செயல் இருக்குமா...இருப்பது எல்லா இடங்களிலும் சாத்தியமா...கடினம்தான். செயலில் உறுதி உடையவர் மட்டுமே செயல்பாட்டில் வெற்றி காண முடியும். உறுதியும் செய்து முடிக்க வேண்டும் என்ற மனோதிடமும் உள்ளவர் மட்டுமே தான் சொன்னபடி செய்து முடிப்பார். மற்...

மனிதநேய மாமணி ஸ்டீபன் எடிசன்

Image
மனிதநேய மாமணி ஸ்டீபன் எடிசன் பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன் " என்றார் வள்ளுவர். மனிதநேயத்தால்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.எல்லா நற்பண்புகளுக்கும் உயிர் நீரோட்டமாக இருந்து இயக்குவது  மனிதநேயம். மனிதநேயம்தான் ஒரு  மனிதனைப் பற்றிய உண்மையான மதிப்பீடு.  மனிதநேயம் மிக்க பெருமகனாக வாழும்  மனிதர்களைத்தான் சமூகம்கொண்டாடும்.  அந்த வகையில் ஆசிரியர் சமூகம் கொண்டாடும்  மனிதநேய மாண்பு மிக்க நல்லாசிரியர் ஸ்டீபன் எடிசன் ஆசிரியர் என்றால் மிகையாகாது . இளமைப் பருவம் : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இடையன்குடி ஆசிரியரின் சொந்த ஊர் .   ஆனால் அவர் தன் சொந்த ஊரில் வாழ்ந்ததைவிட  மற்ற ஊர்களில் வாழ்ந்த நாட்கள்தான் அதிகம். அப்பா ஞானமாணிக்கம்  டேவிட் மற்றும் அம்மா ராஜரெத்தினம் இருவருமே ஆசிரியர்கள். அதனால் ஊர் ஊராக இடமாறுதல் பெற்றுச் செல்லும் சூழ்நிலை இருந்தது . அதன் காரணமாக எட்டுக்கும் மேற்பட்ட ஊர்  மக்களோடு பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. சிறுவயதிலேயே "யாதும் ஊரே யாவரும்  கேளிர் "என்ற பொதுமைக் கருத்தில் அசையா...

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம்....

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம்.... " கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும் "                                             குறள்  :  166 கொடுப்பது _ பிறருக்குக் கொடுப்பது அழுக்கறுப்பான் _  பொறாமைப்படுகிறவன் சுற்றம்.  _  குடும்பத்தார், கிளைஞர் உடுப்பதூஉம் _ உடுக்க உடை உண்பதூஉம்  _ உண்ண உணவு இன்றி  _  இல்லாமல் கெடும் _ துன்பப்படும்,அழியும் பிறருக்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகிறவனுடைய சுற்றம் உடையும் உணவும் இல்லாமல் கெடும். விளக்கம் : இல்லாதவன் இருப்பவனுக்குக் கொடுக்கிறான். அதைப் பார்த்துஉனக்கேன் பொறாமை? அடுத்தவன் கொடுத்து இவன் வாழ்ந்துவிடக் கூடாதே என்ற காழ்ப்புணர்ச்சி. இது பொறாமையிலும் கொடும் பொறாமை. நீ உதவவில்லையா? சும்மா இரு. அடுத்தவன் கொடுப்பதையும் தடுக்காதே. அப்படி தடுக்க நினைத்தால்... உனக்கு கேட்டினும் பெரும் கேடு வந்து சேரும். அதென்ன கேட்டினும் பெரும் கேடு? வாழ்வின் அடிப்படைத் த...

அன்னை இட்டதீ அடிவயிற்றிலே

  அன்னை இட்டதீ அடிவயிற்றிலே.... பட்டினத்தார் தமிழ்த் துறவியருள் முதன்மை வரிசையில் வைத்து  பெருமைப்படுத்தப்படத் தக்கவர். இவருடைய பாடல்களும் தத்துவங்களும் அன்றும் இன்றும் என்றென்றும் படித்து  இன்புறத் தக்கவை. இவர் தன்அன்னை இறந்தபோது பாடிய பாடல்கள் கல் நெஞ்சையும் கண்ணீர் வடிக்க வைக்கும். தாயைப் பற்றி பேசும் தமிழ்ப் பேச்சாளர்கள் பட்டினத்தாரில் பாடலைக் கூறாமல் தமது பேச்சை முடித்திட முடியாது. தாயைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களும் படித்து கண்ணீர் விடும்  பாடல் இவருடையது.  மிகுந்த செல்வமும் இறை நம்பிக்கையும் கொண்ட இனிமையான குடும்பம்  பட்டினத்தாருடையது.இடையில் ஏற்பட்ட சில  நெருக்கடியான சூழல்களால் அவருடைய மனம் சஞ்சலம் அடைந்தது. கைப்பொருளா ? மெய்ப்பொருளா? என்ற தேடல் மனதிற்குள் எழுந்தது. இறுதியில் மெய்ப்பொருள் ஒன்றே போதும் என்று  துறவறத்தைத் தேர்ந்தெடுத்தவர் பட்டினத்தடிகள். அவர் துறவறம் பூண்பதற்கு முன்பாக  அன்னையிடம் ஆசிபெறச் சென்றார். அம்மா தன் நினைவு எப்போதும் மகனோடு இருக்க வேண்டும் என்பதற்காக  ஒரு துணிப்பையை எடுத்து பட்டினத்தாரின்  இடுப்பில்...

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும்....

Image
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும்.... தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து "                                       குறள் :  828 தொழுத -       கும்பிட்ட கையுள்ளும் _ கையினுள்ளும் படை _  கொலைக்கருவி , ஆயுதம் ஒடுங்கும் _மறைந்திருக்கும் ஒன்னார் _  பகைவர் அழுத _  புலம்பிய , கண்ணீரும்  _ கண்களினின்று உகுக்கும் நீரும் அனைத்து _ அவ்வளவினதே , அது போன்றதே கைகூப்பித் தொழும்போதும் பகைவர் கைக்குள் ஆயுதம் மறைந்திருக்கலாம். அதுபோல பகைவர் அழுது  கண்ணீர் சிந்தினாலும் அவர்கள் மனதில் கெடு சிந்தையே நிறைந்திருக்கும். விளக்கம் : பகைவர் எப்போதும் பகைவர்தான். ஒருபோதும் நமக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் பகைவர் உள்ளத்தில் இருக்காது. பகைவர் கும்பிடு போட்டால்கூட கைக்குள் கொலைக்கருவியை மறைத்து  வைத்திருக்கலாம். ஆதலால் பகைவரிடம் எப்போதும் கவனமாக இருக்கவேண்டும். நமக்காக கண்ணீர் சிந்துகிறார்களே என்று நம்பிவிடக்கூடாது. அது முதலைக் ...

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்

Image
ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் "ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்" என்ற சொற்றொடர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் தூது இலக்கியம் பற்றியும் சற்று தெரிந்து கொள்ள வேண்டும். நாரைவிடு தூது படிக்காமல் பள்ளிப் பருவத்தை யாரும் கடந்து வந்திருக்க முடியாது. ஆரம்பகாலத்தில்  காதலுக்காகவும் அரசர்கள் பிற நாட்டு மன்னர்களோடு தொடர்பில் இருப்பதற்காகவும் தூது அனுப்பப்பட்டு வந்ததாக அறிகிறோம்.  காதலுக்குத் தூது செல்வதற்கு என்றே  தலைவனும் தலைவியும் பாங்கனையும்  பாங்கியரையும் தங்கள் கூடவே வைத்திருப்பராம்.  சங்க இலக்கிய அகப்பாடல்களின் மூலம் காதல் தூதுவர்கள் பற்றி நாம் நிறைய  அறிந்து கொள்ளலாம். இருவரிடையே பேச்சு நிகழ்வதற்குத் துணையாக இருப்பவரைத் தூதுவர்  என்கிறோம். எல்லா நாட்டிற்கும் தூதரகங்கள் இருப்பதும் அங்கு அந்தந்த நாட்டு தூதர்கள்  அமர்ந்து மற்ற நாடுகளோடு பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதும் அரசியல் நிகழ்வாக நாளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு செயல் என்பதைப் பற்றி அனைவருக்குமே தெரிந்திருக்கும். தூது இலக்கியம் தமிழ் இலக்கிய வரலாற்றில்...