எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்
எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் எதிர்பார்ப்பு இருந்தால் ஏமாற்றம் நிச்சயம் இருக்கும். ஒருவர்மீது அதிதீவிர நம்பிக்கை வைத்து விட்டோம். அதனால் அவரிடமிருந்து எதிர்பார்ப்பும் அதிகமாகிறது. அந்த எதிர்பார்ப்பு நடைபெறாதபோது விரக்தி ஏற்படுகிறது. ஏமாற்றமடைந்து புலம்ப ஆரம்பித்துவிடுவோம். அதிக நம்பிக்கை வைப்பதுகூட பல நேரங்களில் ஆபத்தாக முடிவதுண்டு. குடும்பத்தில் சண்டை வருவதற்கான முதற்காரணமே எதிர்பார்ப்புதான். அதனால் எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது என்பதல்ல. எதிர்பார்ப்பு இல்லாமல் எந்தக் குடும்பமும் நகராது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எந்த செயலும் நடைபெறுவதில்லை. ஊதியம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்தான் வேலை நடைபெறுகிறது. ஊதியம் கிடைக்காது என்று தெரிந்தால் யாருமே எந்த வேலையும் செய்ய முன்வர மாட்டார்கள். அந்தக் காலத்தில் புலவர்கள் மன்னர்களைப் புகழ்ந்து பாடி பரிசில் பெற்றுச் செல்வர். மன்னர் எதுவுமே கொடுக்கமாட்டார் என்றால் யார் பாடுவார்? இப்படித்தான் ஒரு மன்னனிடம் ஏதாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்போடு ஒரு புலவர் அரண்மனைக்குச் சென்றிருக்கிற...