பாதிரிப் பூ
பாதிரிப் பூ கல்வி கற்பவர்க்கு மட்டும் பயன்படுவதல்ல. ஒரு சமுதாயத்தையே மாற்றும். பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும். என்று படித்திருக்கிறோம். பாதிரிப் பூவோடு சேர்ந்தால் பானையும் மணம் பெறும். பானை மணம் பெற்றால் பாதிரிப் பூ வைத்த பானையில் ஊற்றி வைக்கும் தண்ணீர் மணம் பெறாமல் இருக்குமா என்ன? எதற்காக இந்தப் பாதிரிப்பூ ? எதற்காக இந்தப் பானை? பாதிரிப் பூவையும் பார்வையையும் தூக்கி வந்து நம் முன்னர் நிறுத்தியவர் யார்? வேறு யாரும் அல்லர். பாதிரிப் பூவையும் பானையையும் உவமையாக கொண்டு வந்து நிறுத்தியவர் நாலடியார். பாடல் உங்களுக்காக... கல்லாரே ஆயினுங் கற்றாரைச் சேர்ந்தொழுகில் நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின் ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு/ தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு’ நாலடியார் (139) நறுமணப் பூவின் தொடர்பால் பானை நறுமணம் பெற்றதுபோல் கல்வியில் சிறந்தவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் கல்லாதவர்க்கும் அறிவு கிடைக்கும் . நாம் யாரோடு தொடர்பு வைத்துக் கொள்கிறோமோ அவர்களின் குணம் நம்மை வந்து ஒட்டிக்கொள்ளும். இதுதான் உண்மை. இந்தப் பாடலில் புதுமையான செய்தி...