Posts
Showing posts with the label பணி நிறைவுப் பாராட்டு மடல் -கவிதை
பணி நிறைவுப் பாராட்டு மடல்
- Get link
- X
- Other Apps
பணிநிறைவுப் பாராட்டு மடல் மின்னணு மிகைபுகழ் கூடங்குளம் பேருலா முன்னடிநாடார் பஞ்சுப்பழம் அம்மாள் இணையிலா முன்னவர் குலம் விளங்க வந்த பிள்ளைநிலா சின்னவர் செவியோதிய தவமணி பெயர் புகழுலா! கள்ளுலா ரதிலலிதா கண்ணுலா வந்தலா(ல்) காதலா(ள் ) கரம்பிடித்தலா கன்னி மனையாதலா கட்டிலா தொட்டிலா பிள்ளை நால்வராதலா(ல்) மட்டிலா மகிழுலா மனையில் ஆட்சி நடத்தலா! கர்மவீரர் பள்ளியில் தடம் பதித்தலா (ல்) கர்மமே கண்ணெனக் கடுமையாய் உழைத்தலா வன்மம் கொள்ளா வாழ்க்கைத்துணை வழிகாட்டலா(ல்) தர்மமும் தயையும் தவமணியின் கரம்பிடித்தலா! கலைகள் யாவும் உள்ளிலா தலைச் சோற்றிலா மலையாய் உயர்வுலா மாறா நேசரின் அருளிலா அலையிலா மனம் ஆர்ப்பரிப்பிலா ஆனந்தத் துள்ளலா விலையிலா நட்புலா காண்டலா(ல்) மனம் மகிழ்ச்சி கடலிலா! தவம் உன்றன் பெயரிலா செயலிலா அறம் நின் அறப்பணியிலா அர்ப்பணிப்பிலா விஞ்சு மதியுலா மிஞ்சு மொழியிலா பேச்சிலா கஞ்சமாய்ப் புகழ்தலால் பஞ்சம் என் சொல்லிலா! நாலேழு ஆண்டு நற்பணி நடத்தலா(ல்) நல்லோர் ஏத்தலா(ல்) நற்புகழ் வாய்த்தலா தொய்வில்லா தொடர்பணியால் தளர்தலா அயர்தலா அயர்வறியா தமிழுக்கு அணையிட ஓய்வென்று உரை...
பணி நிறைவுப் பாராட்டு மடல்
- Get link
- X
- Other Apps
பணி நிறைவுப் பாராட்டு மடல் மின்னணு மிகைபுகழ் கூடங்குளம் பேருலா முன்னடிநாடார் பஞ்சுப்பழம் அம்மாள் இணையிலா முன்னவர் குலம் விளங்க வந்த பிள்ளைநிலா சின்னவர் செவியோதிய தவமணி பெயர் புகழுலா! கள்ளுலா மனையாள் கண்ணுலா வந்தலா(ல்) காதலா(ள் ) கரம்பிடித்தலா கன்னி மனையாதலா கட்டிலா தொட்டிலா பிள்ளை இருவராதலா(ல்) மட்டிலா மகிழுலா மனையில் ஆட்சி நடத்தலா! கர்மவீரர் பள்ளியில் தடம் பதித்தலா (ல்) கர்மமே கண்ணெனக் கடுமையாய் உழைத்தலா வன்மம் கொள்ளா வாழ்க்கைத்துணை வழிகாட்டலா(ல்) தர்மமும் தயையும் வந்தது அண்ணன் கரம்பிடித்தலா! கலைகள் யாவும் உள்ளிலா தலைச் சோற்றிலா மலையாய் உயர்வுலா மாறா இறையருளிலா அலையிலா மனம் ஆர்ப்பரிப்பிலா ஆனந்தத் துள்ளலா விலையிலா உறவு காண்டலா(ல்) மனம் மகிழ்ச்சி கடலிலா! தவம் உன்றன் பெயரிலா செயலிலா அறம் நின் அறப்பணியிலா அர்ப்பணிப்பிலா விஞ்சு மதியுலா மிஞ்சு மொழியிலா பேச்சிலா கஞ்சமாய்ப் புகழ்தலால் பஞ்சம் என் சொல்லிலா! நாற்பத்தி நான்கு ஆண்டு நற்பணி நடத்தலா(ல்) நல்லோர் ஏத்தலா(ல்) நற்புகழ் வாய்த்தலா தொய்வில்லா தொடர்பணியால் தளர்தலா அயர்தலா அயர்வறியா அண்ணனுக்கு அணையிட ஓ...
பணி நிறைவுப் பாராட்டு மடல்
- Get link
- X
- Other Apps
பணி நிறைவுப் பாராட்டு மடல் கவினணி புனைந்த எழில்மிகு வனத்தாய் கலையணி கொண்ட கரிசலில் பிறந்தாய்ந கலையணி எங்கும் இயற்கை மருந்தாய் எழிலணி ஓரணிதிரள் சின்னமனூரில் அவதரித்தாய்! அறப்பாணியாளர் அப்பா சண்முகவேலோடு அன்பாய் களப்பணி ஆற்றிட விஜயா உன் தாய் இல்லறப்பணி இன்பமாய் பத்மாவதி பிறந்தாய் நல்லறப்பணி சாட்சியாயினர் தம்பதியர் அருமருந்தாய்! முதற்பணிக்காய் உத்தர்பாரதியில் சீரடி பதித்தாய் கலைப்பணிக்கு சோமைய்யாவைத் தேர்வு செய்தாய் பெரும்பணிக்காய் கலினாவில் முதுகலை பயின்றாய் ஆசிரியப்பட்டயப் படிப்பிலிலும் முதல்நிலையில் நின்றாய் நற்பணி ஆற்றிட பிரைட் பள்ளிக்குள் நுழைந்தாய் உலகணி ஆங்கிலத்தை உவப்போடு கற்றிட வைத்தாய். கவியணி புனைந்து கற்பிக்கும் பாங்கினை வகுத்தாய் என்பணி தனிப்பாணி எனத் தனித்துவம் படைத்தாய்! ஊரணி உவந்திட ஓயாது உழைத்தாய் தேரணி மகிழ்வாய் பணி உயர்வு அடைந்தாய் தாரணியாய்த் தக்கதோர் ஆசிரிய கூட்டணி அமைத்தாய் முற்போக்குக் கூட்டணியாய்ப் பள்ளி் பெயர் துலங்க வைத்தாய்! வேற்றணி இவரென எவரையும் வெறுக்காய் குன்றிமணியளவும் குறையா குணமே உனதாய் நவமணியாம் நல்மணியாய்த் திகழ்ந்தாய் தவமணி...
பணி நிறைவுப் பாராட்டு மடல்
- Get link
- X
- Other Apps
பணி நிறைவுப் பாராட்டு மடல் நாள் :28.01.2026 எங்கும் புகழ் மணக்கும் பங்களாச்சுரண்டை ஊரு வஞ்சமில் ராஜையா தங்கமணி இணையர் சேர்வலாறு கொஞ்சி மகிழப் பிறந்த இச்சிற்றாறு நெஞ்சம் மகிழ ஓதினர் ஞானசௌந்தர்யா எனும் நற்பேரு! அச்சங்குன்றம் பாலோடு கலந்த இச்சிற்றாறு இன்பமாய்ப் பிள்ளை மூவர் தந்த கூட்டுத் தேனாறு புன்னகையாள் தமிழாசிரியை உள்ளம் என்றும் பதினாறு விழியுயர்த்திப் பார்க்க வைத்தது இவரின் ஒழுகலாறு! மேரிசார்ஜென்ற் பள்ளியில் பாய்ந்த தமிழ்ப்பொய்கையாறு மாணவர் உள்ளங்களை அள்ளுவதில் மணிமுத்தாறு கற்பித்தலில் இவருக்கு உண்டு தனிப்பேரு கற்றோர் கொண்டாடும் பெரும்பேறு வாய்த்த தாமிரபரணியாறு மூவேழு ஆண்டு ஆசிரியப் பணி என்பது சிறியவரலாறு மூவாத் தமிழ்க் கற்பித்தலில் ஓடும் தீஞ்சுவைப் பாலாறு ஓராறு பொழுது போதாது இவரொரு அன்புப்பேராறு சீராறு நற்சுவையாறு இவருக்கு நிகர்யாரு? கள்ளமில்லாப் பேச்சு என்றும் குளிரிளநீராறு உள்ள வோட்டமோ தெளிந்த தெண்ணீராறு அள்ளும்மடையெனப் பேச்சில் இருக்கும் சுவையாறு அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரை இவர் பேரு பருவம் வந...
பணி நிறைவுப் பாராட்டு மடல்
- Get link
- X
- Other Apps
பணி நிறைவுப் பாராட்டு மடல் திருமதி. மலர் ,தலைமை ஆசிரியை வீச்சும் பேச்சுமென எங்கும் கோலோச்சும் வாஞ்சிபுகழ் கோநகர் நெல்லை அகத்தாய் வஞ்சமில் நெஞ்சம்கொள் குலம் பிறந்தாய் கொஞ்சுதமிழ் மங்கைமலர் விழிதிறந்தாய்! இல்லறத்தில் அன்பரோடு இன்பம் தந்தாய் நல்லற சாட்சியாய் நன்மக்கள் மூவர் கண்டாய் நல்லதோர் வீணையை நாளும் மீட்டி தலைமைக்கு உகந்த தகைமையாய் உயர்ந்தாய்! ஆறேழு பள்ளிகளில் அழகுதமிழ் நடைபயின்றாய் ஆழ்ந்த புலமைமிகு ஆசானெனப் பெயரெடுத்தாய் அலையாடு மும்பைமொழி சொந்த மொழிபோல உரையாடும் பெரும்பேறு வாய்க்கப் பல பெற்றாய் ! மலரன்ன மென்மை மனதில் கொண்டாய் இதழன்ன புன்முறுவல் இதழில் வைத்தாய் இன்னாரென்று பாராது எல்லோரையும் தொட்டாய் ஒன்னாரில்லை எனும்பேரோடு எம்மை வென்றாய்! பருவம் வந்துவிட கனிந்திடும் கனிபோல பருவகால நிகழ்வு வந்தின்று ஓய்வுரைக்க நற்பருவம் வாய்ப்பாக வந்ததென்று எப்பருவமும் வாழ்த்துரைக்க பணிநிறைவு பெற்றாய்! தொய்வில்லா அறப்பணி குமுகப்பணி தேர்ந்தாய் தொடர்பணி ஏற்று தொண்டாய்த் தொடர்ந்திட விழைந்...
பணி நிறைவுப் பாராட்டு மடல்
- Get link
- X
- Other Apps
பணி நிறைவுப் பாராட்டு மடல் வீரம் விளை நெல்லை சீமையில் வீசு பொருநைத் தென்றல் நடக்கும் வீதியெங்கும் சில்வண்டு வீவீயென மெட்டிசைக்கும் எழில் நகர் இலவங்குளத்தில் வீச்சறுவாள் மீசை மிடுக்கு நாயகன் ஐயா சவரிமுத்து நாடார் பாக்கியம் அம்மாள் இணையர் மெத்தை மடியில் முத்தமிழ்ப் பயில முகம் பார்த்துத் தாலசைத்தார் நாயகன் மார்கண்டேய தாசன் ! அமைதியான நதியின் ஓடமாய் உமாவோடு நடந்தது நல்வாழ்க்கை பிள்ளை இருவர் கிடைத்த நல்வரம் கோநகர் மும்பையின் அடையாளம் கொள்கை பிடிப்பில் தனியாழம் தாய்த் தமிழின் சுவையாழம் தரணியெங்கும் தமிழ்தான் ஆளும் தணியாக் காதல் தமிழோடு நாளும் தமிழ் வளர்க்க வேண்டுமென்ற தாகம் தமிழ்ச் சங்கமாய்ப் பாண்டூப்பில் உதயம்! அறப்பணி பொதுப்பணி நலப்பணி ஆசிரியப்பணி எப்பணி ஆற்றிடினும் களப்பணியாளன் என்பெயர் கணினியின் பதிவாய் கற்றவர் கற்பவர் நினைவாய் கல்மேல் எழுத்தாய்க் காண்பவர் உச்சரிப்பாய் கவனம்கொள் நிலைக் களனாய் கருத்தியல் உருவாகிட வேண்டும் என்ற கனலும் அனலாம் மந்திரம் கனன்றிட கடினஉழைப்பின் அடையாளமாயினார் தாசன்! உழைப்புக...
பணி நிறைவுப் பாராட்டு மடல்
- Get link
- X
- Other Apps
பணி நிறைவுப் பாராட்டு மடல் திருமதி.ரோஸ்லின் ராபின்சன் ஆசிரியை, திலக் நகர் மாநகராட்சி தமிழ்ப் பள்ளி. மும்பை. நாள்: 29.03.2024 வீரம்விளை நெல்லை எல்லை அகமிருப்பு தீரம்நிறை சான்றோர் உறை துரைகுடியிருப்பு திருமிகு சுவாமிநாதன் அனஸ்தா இணை மடியிருப்பு சீரமை செவ்விதழ்விரிய பூத்ததிந்த ரோசாப்பூ! அத்தான் ராபின்சனோடு இல்லற பிணைப்பு கெத்தாய் ஆராரோ பாடவைத்தது பேருவப்பு முத்தாய்ப் பிள்ளை இருவர் பெற்ற பூரிப்பு நற்றாயென நல்லோர் பாராட்டுவதால் வந்ததிந்த சிறப்பு! முதலடி ஜோகேஸ்வரி பள்ளியில் கிடைத்த வரவேற்பு குறளடி திலக்நகர் பள்ளியில் தடம் பதிப்பு சிந்தடி தாகூர்நகர் பள்ளியில் முத்திரை பதிப்பு அளவடி திலக்நகர் பள்ளியில் முடித்தது பணிக்கோர் முத்தாய்ப்பு! கற்பித்தலில் கொண்டீர் தணியா விருப்பு -அதனால் கற்றவர் அனைவர்க்கும் தித்திக்கும் செங்கரும்பு பெற்றவர் யாவர்க்கும் ஆசிரியை நல்அருமருந்து - மாணவர் எறும்பாய்ச் சுற்றிவர படைத்தீர் கல்விவிருந்து! வான்மதியோ பூம்பொழிலோ உன்றன் வனப்பு அன்பலையோ தமிழ்ப் பண்பலையோ உன்றன் உதடசைப்பு மலையிடைப் பிறந்த குறிஞ்சியோநீ என்பதென் குறும்பு நா...
பணி நிறைவுப் பாராட்டு மடல்
- Get link
- X
- Other Apps
பணி நிறைவுப் பாராட்டு மடல் திருமிகு :செ.செல்லப்பா ஆசிரியர், சீத்தா கேம்ப், மும்பை. முட்டி நிற்கும் மஞ்சு தனை தொட்டு விளையாடும் காற்றாலை எட்டு நிற்போரையும் ஏந்தி முகம் பார்க்க வைக்கும் ஆவரை குளத்தில் கட்டழகு செல்லத்துரை இணையர் பெற்றெடுத்த தலைமகன் செல்லப்பா ஆசிரியர் வட்டமிட்டு மணமகள் லதாவைத் தொட்டநாள் திட்டமிட்டு இறைவன் வகுத்தநாள்! ஆஸ்திக்கும் ஆசைக்குமாய்ப் பிள்ளைகள் அன்புக்குக் கிடைத்தப் பரிசுகள் வானும் நிலவும் போல வாய்த்த திந்த இனிய இல்வாழ்க்கை தேனினும் இனிய திவ்விய நாமத்தைத் தீர்க்கமாய்ப் பற்றி அருட்பணி செய்தலால் வானாதி வானவராம் வல்ல நல்நாதர் வரமாய்த் தந்தணி செய்த நல்வாழ்க்கை! வாணிக்கு வார்த்தையால் தோரணங்கட்டி மணியாம் மாணவரணிகூட்டி அறப்பணி செய்தீர் பணிசெய் இடமெங்கும் பேச்சுக்கலை வளர்த்தீர் பேரணி திரட்டி பெரும்பெயர்ச் சேர்த்தீர் அறப்பணி பொதுப்ப...
பணி நிறைவுப் பாராட்டு மடல்
- Get link
- X
- Other Apps
பாராட்டு மடல் திருமதி : ஹெலன் மீராபாய் , ஆசிரியை நாவில் தேனூறும் நல்லமணம் தூதாகும் ஆம்பூர்நகர் இணையர் ஜேசுதாஸ் ரெபேக்கா ஆசைமலர்க் கொடியாள் ஹெலன் மீராபாய் உக்கிரன்கோட்டை ஐயா லயனலின் வயலினானார்! ஐயா லயனலுக்குக் கட்டித்தேன் அமுதத்தேன் மகளிரிருவர் வாய்த்த நல் வசந்தத்தேன் பெய்தேன் குழைஇல்லறம் இசைத்தேன் கண்டேன் மெய்த்தேன் இதுவென உவந்தேன்! நார்த்விக் மேனிலைப் பள்ளி துளிர்த்தேன் செயினட்மேரி நேசனல் கல்லூரி அருந்தேன் மும்பைத் தமிழ்ப்பள்ளி தனித்தேன் தளிர்த்தேன் இன்பத்தேன் மாணவர் விருப்பும் கூட்டுத்தேன்! சொற்தேன் தோய்த்த கல்வி சுவைத்தேன் மதித்தேன் மத...