துள்ளாத மனமும் துள்ளும்
துள்ளாத மனமும் துள்ளும்...(ராகம்) துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும் இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்பத் தேனையும் வெல்லும் - மனம் இன்பத் தேனையும் வெல்லும் (துள்ளாத)....2 மலரும் நினைவு மனதில் வந்து மகிழ்ச்சி பொங்கும் உள்ளம் அன்பு கொண்ட கண்கள் இங்கே ஆயிரம் கதைகள் சொல்லும் நட்பைக் கண்கள் காணும் போது அணைக்க கரங்கள் நீளும் அன்புக் குரலில் இனிமை கலந்தே-மனம் அழகுத் தமிழில் கொஞ்சும் (துள்ளாத)....1 எங்கோ இருந்த நம்மை ஒன்றாய் கூட வைத்தது பாசம் என்றன் நினைவில் உந்தன் நினைவை இணைத்து நின்றதும் நேசம் எங்கும் இருக்கும் இதயங்களையும் இணைத்து வைப்பதும் தெய்வம் இணைந்தே பாடுவோம் நாமும்- இனி கவலை மறப்போம் நாளும் (துள்ளாத)...1 பிரிந்த உறவை அருகில் கண்டால் பிள்ளையாய் மனம் துள்ளும் சோர்ந்த நாளும் மாயம் ஆகும் ஓடி அணைத்தே மகிழும் நல்ல இதயம் நட்பைத் தேடி நாடி நாளும் ஓடும் உண்மை அன்பால் இணையும் -உள்ளம் உறவாய் என்றும் நிலைக்கும் (துள்ளாத).....2 .