கெடுப்பதுஉம் கெட்டார்க்குச் சார்வாய்...
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்.... கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை " குறள் : 15 கெடுப்பதூஉம் - இடர் உண்டாக்குவதும் கெட்டார்க்கு - துயருற்றவர்க்கு சார்வாய் - துணையாய் மற்று - பின்,ஆனால் ஆங்கே - அதுபோல எடுப்பதூஉம் - கைதூக்கி விடுவதுவும் எல்லாம் - அனைத்தும் மழை - மழையாகும் பெய்யாமல் வாழ்வை கெடுக்க வல்லது மழை . அதுபோல இடர்பட்டு நிற்பவர்க்குத் துணையாக நின்று காத்து நிற்பதும் மழையே ஆகும். விளக்கம் : மழை பெய்யாவிட்டால் ....பசும்புல் தலை காண்பது அரிது. மேகமானது தனது நீரை மழையாகப் பொழிந்திராவிட்டால் ....பெரிய கடலானாலும் தன் நீர்மையை இழக்க நேரிடும். மழை பெய்யாவிட்டால் ...நாட்டில் எந்தவித விழாக்களும் நடைபெறாது. மழை பெய்யாதிருந்தால் இடர்பட நேரிடும். அதிக மழைப்பொழிவும் கூட பல நேரங்களில் தீங்குவிளைவித்து விடுதல் உண்டு. பல நாட்கள் மழை காணா பூமி. திடீரென்று மழை பெய்துவிட்டால்.... புல் பூண்டுகள் துளிர்த்து பூமி பச்சைக் கம்பளம் விரித்து தன் ம...