Posts

Showing posts with the label பேனாவின் முனை வாளின் முனையைவிடக் கூர்மையானது

பேனாவின் முனை....

Image
பேனாவின் முனை.... "பேனாவின் முனை வாளின் முனையைவிட கூர்மையானது " சொல் வீச்சுக்கு வாள் வீச்சைவிட வலிமை அதிகம். எழுத்தாளர் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் வாசகரின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். எந்த ஒரு வார்த்தையும் வெறுமனே திரும்பி வராது. காயங்களை ஏற்படுத்தவும் தெரியும். காயங்களுக்கு மருந்து போடும்  மருத்துவராக செயல்படும் சக்தியும் எழுத்துக்கு உண்டு. உணர்ச்சியைத் தூண்டும். உத்வேகத்தைக் கொடுக்கும். மூடநம்பிக்கைக்குத் துணை நிற்கும். மூடநம்பிக்கைக்கு எதிராகக் குரல் கொடுக்கும். அந்தப்பக்கம் என்று காற்று  எல்லாப் பக்கமும் சுழன்று சுழன்று வீசுவதுபோல் இருக்கும். தென்றல் காற்றாய் மனதை வருடும். திடீரென்று எதிர்க்காற்றாய் மாறி சூறாவளியாய்ச் சுழற்றி அடிக்கும். நேர்மறை ...எதிர்மறை ...என்று  முன்னூற்று அறுபது பாகையிலும் திரும்பி நின்று பேசும். "வாளின் வலிமையைவிட  எனது பேனா முனை கூர்மையான பலம் வாய்ந்தது. எனது எழுதுகோல்  ஒரு கொடுங்கோல் சாம்ராஜ்யத்தையும் அழிக்கும்.  ஒரு செங்கோல் ஆட்சியையும் உருவாக்கும் ""  என்றார் புரட்சி எழுத்தாளர்  வால்டேர். இவரது ப...