Posts

Showing posts from April, 2022

மணிநீரும் மண்ணும் மலையும்....

மணிநீரும் மண்ணும் மலையும்.... " மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்"                         குறள் : 742 மணிநீரும்-தெளிந்த நீரும் மண்ணும்  - நிலமும் மலையும்- மலைப் பகுதியும் அணி- அழகு,குளிர்ச்சி நிழற்-நிழல் காடும்- காட்டுப் பகுதியும் உடையது - கொண்டது அரண் - கோட்டை, பாதுகாப்பு தெளிந்த நீரும் வெட்டவெளியான நிலமும் மலையும் குளிர்ச்சியான நிழல் தரு காடும் கொண்டதே அரண் ஆகும். விளக்கம்:  மணி நீர் என்றால் நீல நிறம் கொண்ட நீர். அதிகமான ஆழமுடைய பகுதிகளில் கிடக்கும்  நீர் எப்போதும்  நீல நிறமாகவே காணப்படும். இது கடலாகவும் இருக்கலாம்.  நீர்த்தேக்கங்கள், கிணறு ஆகிய இடங்களில் கிடக்கும் நீராகவும் இருக்கலாம். எது எப்படியோ நீர் நல்ல பாதுகாப்பு அரண். ஆதலால் மணிநீர் என்று சொல்லப்பட்டுள்ளது.  இரண்டாவது மண் . பரந்து விரிந்து கிடக்கும் நிலப்பகுதியும் ஒரு பாதுகாப்பு அரணாகவே கருதப்படும். நிலப்பரப்பு மிகுந்திருக்க வேண்டும். மூன்றாவதாக மலை. மலை  ஒரு நாட்டிற்கு இயற்கையாக அமைந்த பாதுகாப்பு அரண். இயற்கை வளங்...

புறநானூற்றில் அறிவியல் சிந்தனை

புறநானூற்றில் அறிவியல் சிந்தனை புறநானூற்றுப் பாடல் என்றாலே மன்னர்களைப் புகழ்ந்து பாடுவதாகத்தான் இருக்கும். மிகையான புகழ்தல் இருக்கும். காரணம் அப்போதுதான் பரிசில் கிடைக்கும் என்று அவ்வாறு புலவர்கள் பாடுவர். ஒரு சில புலவர்கள் மன்னன் தவறு செய்தால் இடித்துரைப்பதாகவும் பாடல்கள் பாடியுள்ளனர். தூது போன வரலாறும் உண்டு. எனினும் புலவர்கள் என்றால் பரிசிலுக்காகப் பாடுபவர்கள் என்ற எண்ணம் பரவலாக அனைவர் மனதிலும் இருப்பதுதான் உண்மை. பரிசிலுக்காகப் பாடுவதாக இருந்தாலும் அதில் உலகியல் இருக்கும். உணர்வு இருக்கும். நம்மைச் சுற்றி நடக்கும் எதார்த்தத்தை உணர்த்துவதாக இருக்கும். மன்னனுக்கு மட்டுமல்லாது நமக்கும் சில செய்திகள் சொல்லப்பட்டிருக்கும். அதனால்தான் இன்றுவரை புறநானூற்றுப் பாடல்கள் நம்மால் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதோ  கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடலை வாசியுங்கள். சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தன் என்னும் புலவர் புகழ்ந்து பாடுகிறார். பாடல் பரிசிலுக்காகப் பாடப்பட்டதாக இருக்கலாம். பாடலுக்குள் அவர் பொதிந்து தந்திருக்கும் கருத்து என்ன என்று பாருங்கள். உலக நிலைமை ...

பிரட் சீஸ் புட்லா செய்வது எப்படி?

பிரட் சீஸ் புட்லா செய்வது எப்படி? பிரட் சீஸ் புட்லா என்ற பெயரைக் கேட்டதும் இது ஒரு வட இந்திய உணவு வகையாகத்தான் இருக்கும் என்பது புரிந்திருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பிரட் மேல் ஜாம் தடவி அப்படியே டப்பாவில் அடைத்துக்  கொடுத்து அனுப்புவோம். வீட்டில் இருக்கும் நேரத்தில் பிரட் ஆம்லெட் அல்லது பிரட் புரூஜி இதுதான் பெரும்பாலான நேரங்களில் நமது தயாரிப்பாக இருக்கும். ஆனால் பிரட் வைத்து வகைவகையான பண்டங்கள் தயாரிக்கலாம். அவற்றுள் எனக்கு பிடித்த ஒன்று உண்டென்றால் அது பிரட் சீஸ் புட்லா. மும்பை ரோட்டோர கடைகளில் கிடைக்கும் இந்தப் பிரட் பீஸ் புட்லா மணமே அட்டகாசமாக இருக்கும். ஜவேரி பஜார் போன்ற பெரிய மார்க்கெட் பக்கம் போனால் முதலாவது நம்மைச் சுண்டி இழுப்பது பிரட் புட்லா வாசனை தாங்க. அந்தக் கடையைத் தாண்டி செல்லவே கால் தடுமாறும். அப்படி ஒரு ஈர்ப்பு பிரட் சீஸ் புட்லாவுக்கு உண்டு. ஒருமுறை சாப்பிட்டு ருசி கண்டுவிட்டால் மறுபடியும் மறுபடியும் அந்தப்பக்கம் போய் பிரட் சீஸ் புட்லா சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்துவிடும். பட்டரும் மல்லித்தழையும் கலந்த ஒருவித மணமும்  மொறுமொறுவென்ற அதன் சுவையும் நம்...

அறிவின்மை இன்மையுள் இன்மை....

அறிவின்மை இன்மையுள் இன்மை.... " அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை  இன்மையா வையா துலகு "                         குறள்.   :841 அறிவின்மை- அறிவு இல்லாமை இன்மையுள்-.    இல்லாமைகளுள் இன்மை-இல்லாத தன்மை பிறிதின்மை-.  பிற இல்லாமைகள்  இன்மையா-இல்லாமையாக வையாது -கொள்ளாது உலகு-உலகத்து மக்கள் இன்மைகளுள் கொடிய இன்மை அறிவின்மையே  ஆகும். வேறு இல்லாமைகளை எல்லாம்  மக்கள் ஒரு இல்லாமையாகவே கருதமாட்டார். விளக்கம் : பொருள் இல்லை. உணவு இல்லை. உடை இல்லை. உறையுள்  இல்லை. வீரம் இல்லை. துணிவு இல்லை. நட்பு இல்லை.புகழ் இல்லை. இப்படி எத்தனையோ இல்லைகளைக் கண்டிருப்போம். கேட்டிருப்போம். அது ஒன்றும் பெரிய பிரச்சினையே இல்லை. அவற்றையெல்லாம் அறிவிருந்தால் ஈட்டிக் கொள்ளலாம்  ஆனால் ஒரே ஒரு இல்லை மட்டும் இல்லாமல் இருத்தல் கூடாது. அதுதான் அறிவின்மை. அறிவின்மை மட்டுமே இல்லாமையாக கருதப்படும். அறிவில்லாதிருந்தால் என்ன இருந்தாலும் அது இல்லாமலாகிவிடும். அறிவை ஆளத்தெரிய வேண்டும். அது இல்லை என்றால் வறுமை தான் வந்து...

பெரியோர் எல்லாம் பெரியோரும் அல்லர்...

பெரியோர் எல்லாம் பெரியோரும் அல்லர்... "பெரியோர் எல்லாம் பெரியோரும் அல்லர் சிறியோர் எல்லாம் சிறியோரும் அல்லர்" எவ்வளவு அருமையான சிந்தனைக்குரிய வரிகள்! படித்து முடித்ததும் எனக்குள் ஆயிரம் கேள்விகள். அப்படியானால்  யார் பெரியவர்? யார் சிறியவர்? என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? யாரிடம் கேட்டு என் கேள்விக்கான  விடையைப் பெறுவது? என்ற தேடலோடு எனது பயணம் தொடர்ந்தது. அப்போது கண்ணில் பட்டது அதிவீரராம பாண்டியன் எழுதிய வெற்றி வேற்கை . நறுந்தொகை என்றும் அழைக்கப்படும் இந்த வெற்றி வேற்கை வரிகள் என்னை ஒரு தேடலுக்குள் தள்ளியது. ஆள் வாட்டசாட்டமாக இருந்தால் அதற்கு ஒரு மரியாதை. நல்ல நேர்த்தியாக உடை அணிந்திருந்தால் முதல் வரிசையில் இடம். நிறைய பணம் வைத்திருந்தால் பெரியவர் என்ற அங்கீகாரம். முதல் மரியாதை. இப்படி தோரணைக்கு என்றே ஒரு மரியாதை உண்டு. இதனை நாம் பல இடங்களில்  கண்டிருக்கிறோம். அதுதான் பெரியவருக்கான அடையாளம் என்று நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த ஆடை அலங்காரத்தாலும் உருவ அமைப்பாலும் பணத்தாலும் ஒருவரை இன்னார் என்று  கணித்து விடலாமா? ஆடையும் உருவமும் பணமும் ஒருவருக்குப் பெ...

கதம்பப் பருப்புத் துவையல்

பெண்களுக்கு இருக்கும் பிரச்சினைகளிலேயே  பெரிய பிரச்சினை என்ன என்றால் சமையல்தான். விடிந்ததும் இன்று என்ன  என்ன குழம்பு வைப்பது? என்ன பொரியல் வைப்பது? என்று மண்டையே குழம்பிப் போய்விடும். குழம்பு வைத்தாலும் தொட்டுக் கொள்ள கூட்டு வைக்க வேண்டும். கூட்டுக்குக் காய்கறி வெட்ட வேண்டும். அதெற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது? அதனால் புளியோதரையோ தக்காளிசாதமோ லெமன் சாதமோ தயிர்சாதமோ எதுவாக இருந்தாலும் எடுத்துக் கொண்டு வேலைக்குப் போகிற பெண்கள் ஓடுவர். பெரும்பாலான நாட்களில்  ஊறுகாயை தான் தொட்டுக் கொள்வதற்கு  வைத்திருப்போம்.  ஊறுகாய்  கொண்டு செல்வதற்குப் பதிலாக பத்து வகையான துவையல் பொடி செய்து வைத்துக் கொண்டால் போதும். நாளும் வெவ்வேறு வகையான சுவையில் சாப்பிடலாம். வாருங்கள். முதலாவது கதம்பப் பருப்புப் பொடி எப்படிச் செய்வது என்று பார்ப்போம். கதம்பப் பருப்புப் பொடி செய்ய தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு   =  2கையளவு துவரம்பருப்பு   = 2  கையளவு கடலைப்பருப்பு  = 1 கையளவு உளுத்தம் பருப்பு   = 1 கை அளவு கொள்ளுப் பயிறு - ஒரு கையளவு நிலக்...

திருமண வாழ்த்து

திருமண வாழ்த்து இமைபோல் இணைந்து இமயம்போல் உயர்ந்து உடலும் உயிரும்போல் ஒரு கூட்டில் குடியிருந்து ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில்போல் சுற்றம் சூழப் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறோம் நிறைவாக! வாழும் நாட்கள் வரமாக வாழ்வாங்கு வாழ்வீர்  என்றென்றும் இணையாக!                 -   செல்வபாய் ஜெயராஜ்

பணிநிறைவுப் பாராட்டு மடல்

      பணிநிறைவுப் பாராட்டு மடல்                      திருமிகு. அ.    செல்வகணேசன்  B.Sc ,B.Ed,                            பொறுப்பாசிரியர்,                            திலக் நகர் மாநகராட்சித் தமிழ்ப்பள்ளி,                            மும்பை. பணி நாள் : 04. 12.1989.                                          ஓய்வு :....

இன்மையுள் இன்மை விருந்தொரால்....

இன்மையுள் இன்மை விருந்தொரால்... " இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை"                                                 குறள் : 153 இன்மையுள்-இல்லாமைகளுள் இன்மை - இல்லாமையாவது விருந்து- விருந்தினர் ஒரால்- ஒருவுதல்,விலகுதல் வன்மையுள்-வலிமைகளுள் வலிமை-வலிமையாவது மடவார்-அறிவில்லாதவர் பொறை- பொறுத்துக்கொள்ளல் வறுமையுள் கொடிய வறுமை வந்த விருந்தினரை வரவேற்க முடியாமையாகும். அதுபோல வலிமையுள் வலிமை என்பது அறிவில்லாதவர்களின் செயலைப் பொறுத்துக்கொள்வதேயாகும். விளக்கம்:  விருந்து எதிர்கொள்ளல் தமிழர்களின் தலையாயக் பண்புகளும் ஒன்று. அதனை ஒருவன் தவிர்க்கும்படியான சூழல் ஒருவனுக்கு ஏற்பட்டிருந்தால் அது மிகவும் கொடுமையானது.  தனது இயலாமை அதாவது இல்லாமையால் தான் விருந்தினர் வருகையை ஒருவன் புறக்கணிப்பான்.  வீட்டில் போதிய வசதிகள் இல்லாதபோது தான் விருந்தினரைத்  தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதற்காக மனம் நொந்து நூலாகிப்போகும். இப்படிப்பட்ட ...

ஒளியார் முன் ஒள்ளிய ராதல்....

ஒளியார்முன் ஒள்ளிய ராதல்.... ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல்"                  குறள் :.  714 ஒளியார்-நல்ல அறிவுடையார் முன் - முன்னால் ஒள்ளியர் - அறிஞர் ஆதல் - ஆகுக வெளியார்- பேதையர்  முன் - முன்னால் வான் - வெண்மையான சுதை- சுண்ணாம்பு வண்ணம்- நிறம் கொளல்- கொள்க அறிவுடையார் முன்னால் நாம் அறிவுடையவராகப் பேச வேண்டும். அறிவில்லாத பேதையர் முன்னால் நாம் ஒன்றும் தெரியாதவர்போல் இருந்து கொள்ள வேண்டும். விளக்கம் : அறிவுடையவர் முன்னால் அறிவார்ந்த செயல்களில் ஈடுபட வேண்டும். அறிவோடு பேச வேண்டும் நாமும் அறிவுடையவராக நடந்துகொள்ள வேண்டும். அறிவிலிகள் முன்னால் நாமும் அவர்களைப் போலவே ஒன்றும் தெரியாதவர் போல  நடந்து கொள்ள வேண்டும்.   ஏன்?  அப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா? அறிவுடையவர்கள் முன்னால் நம் அறிவை மெய்ப்பிப்பது நல்லது. அவர்களால் நம்மைப் புரிந்துகொள்ள முடியும். நமது கருத்துக்கான  அங்கீகாரம் கிடைக்கும்.பெருமையும் புகழும் வந்து சேரும். ஆனால் அறிவற்றவர்கள் முன்னால் நம் அறிவைக் காண்ப...

விடுதலைக்கவி பாரதி

  விடுதலைக்கவி பாரதி முன்னுரை: பாரதி என்ற மூன்றெழுத்து நாமத்தை உச்சரிக்கும்போதே நம்முள்  உணர்ச்சிப் பொங்கும். உத்வேகம் எடுக்கும். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் கனல்  தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக  மக்களிடையே விடுதலை உணர்வை ஊட்டியவர்  பாரதி.தனது சிந்தனைகள் மூலமாக மக்களைத்   தட்டி எழுப்பியவர்.தூங்கிக் கிடந்த சமுதாயத்தைத்   துயிலெழ வைத்தவர்.   இந்திய விடுதலைப்   போராட்டக் களத்தில் தவிர்க்க முடியாத சக்தி   பாரதி.    விடுதலை வீரர்: தென் தமிழகத்தின் எட்டையபுரம் என்ற ஊரை உலகமெங்கும் எட்டிப் பார்க்க வைத்த பெருமை பாரதிக்கு  உண்டு. பாரதி வெறும் இலக்கியப் படைப்பாளி மட்டும் அல்லர். விடுதலையை வேள்வியாகச் செய்து கொண்டிருந்த விடுதலைப்போர் வீரர் என்றுதான் அவரை அடையாளம் காண முடியும். விடுதலை வேட்கை: விடுதலை வேட்கை வெறிகொண்ட ஒப்பற்ற கவிஞர் பாரதி.அவருக்கு தாய்மொழி மீதும் தாய் நாட்டின் மீதும் தணியாக் காதல் உண்டு. இதனை பாரதியின் கீழ்க்கண்ட பாடல் வரிகள் பறைசாற்றிக் கொண்டேயிருக்கும்.    " என்று தணியும் இந்த சுதந்திர த...

இணைப்பு மொழி என்றால் என்ன?

இணைப்பு மொழி என்றால் என்ன? இணைப்பு மொழி என்றால் என்ன? என்ற கேள்வியைத் கேட்டுப் பாருங்கள். பலருக்குப் புரியவில்லை. இணைப்பு என்றால் ஒரு பாலம். மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்திற்காக இருவருக்கு  இடையே ஒரு பாலமாக இருந்து செயல்பட வேண்டும். நாம் பேசும் மொழி கேட்பவர்களுக்கும் புரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவரால் எதிர்வினையாற்ற முடியும். நம்மாலும் நாம் சொல்ல வந்த கருத்தை எதிராளிக்குப்  புரிய வைக்க முடியும். அப்படி இருவருக்கும் புரிந்த ஒரு மொழி ஒன்று உண்டென்றால் அதுதான் இணைப்புமொழியாகும். அதுதான்  இணைப்பு மொழியாக இருக்க வேண்டும்.இருக்க முடியும். நடைமுறைக்கும் ஒத்துவருவதாகவும் இருக்கும். அப்படி இல்லாமல் இருவருக்குமே  புரியாதமொழி எப்படி இணைப்புமொழியாக  இருக்க முடியும்? அவர் பேசும் மொழி நமக்குத் தெரியாது. நாம் பேசும் மொழி அவருக்குத் தெரியாது. அப்படி இருக்கும்போது  இணைப்பு மொழியாக எந்த மொழி இருக்கும்? சற்று சிந்தித்துப் பாருங்கள். சைகைமொழியாகத்தான் இருக்கும். கைகளை ஆட்டி ...மண்டையை ஆட்டி... கண்களை உருட்டி ...பேச வேண்டியதுதான். வேறு வழியே கிடையாது. நான் சொல்வது உண...

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க...

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க... ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை "                                 குறள் : 656 ஈன்றாள்-பெற்றெடுத்தத் தாய் பசி-  பசி காண்பான்- காண்பவனாக ஆயினும்- இருந்தாலும் செய்யற்க- செய்யாதிருப்பீராக சான்றோர் - உயர்ந்தோர்,மேலானவர் பழிக்கும்- தூற்றுதற்குரிய வினை -    செயல் பெற்ற தாய் பசியால் துடிப்பதைக் கண்டாலும் அத்துன்பத்தைப் போக்குவதற்காக சான்றோர்களால் தீயது என பழித்து ஒதுக்கப்பட்ட செயல்களை ஒருபோதும் செய்தல் கூடாது. விளக்கம்: பசி மிகவும் கொடியது. ஒருசாண் வயிற்றுக்காகத்தான் இந்த ஓட்டமும் ஓயா உழைப்பும். பசி என்று ஒன்று இல்லை என்றால் பல தீயச்செயல்கள் நாட்டில் நடைபெறாது. மனைவி மக்களின்  பசியைப் போக்க களவு செய்தேன் என்று சிலர் ஒப்புதல் வாக்குமூலம் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். என் மனைவிக்காக  என் பிள்ளைக்காக  என் உடன்பிறப்புக்காக இப்படி தன் குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வைப்பதற்காகத்தான் தீய வழிகளில் பணம் ஈட்ட முனைகின்றனர். இது தீது....

பாரதிதாசன் தமிழ்மீது கொண்ட காதல்

பாரதிதாசன் தமிழ்மீது கொண்ட காதல் எங்கள் வாழ்வும் எங்கள்  வளமும்  மங்காத தமிழென்று சங்கே   முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள  தமிழர்கள் ஒன்றாதல் கண்டே..... சங்கே முழங்கு...சங்கே முழங்கு" என்று வீர முழக்கமிட்டவர் பாவேந்தர் பாரதிதாசன். தமக்கு அன்பானவர்களைக் மானே... தேனே ...கண்ணே ...கற்கண்டே ... கனியமுதே.....என்று வாயார அழைத்து மகிழ்வோம். இது மனிதன்மீது கொண்ட காதலால் சொல்லப்படும் வார்த்தைகள். கேட்பவரை மகிழ்விக்கப் பயன்படுத்தும் சொற்கள். பாரதிதாசனுக்கோ மொழிமீது தீராத காதல். மொழிக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர். தமிழ்மீது கொண்ட காதலால் ...பற்றால்  தமிழை எப்படி எப்படி எல்லாமோ அழைத்து மகிழ்கிறார். " செந்தமிழே !உயிரே! நறுந்தேனே செயலினை மூச்சினை உனக்களித்தேனே நைந்தாய் எனில் நைந்துபோகும் என் வாழ்வு நன்னிலை உனக்கெனில் எனக்கும் தானே !" என்று தமிழை வாயார அழைத்து மனமார வாழ்த்துப் பாடி  கொண்டாடுகிறார். தமிழ் என்றால் பாரதிதாசனுக்கு உயிர். தமிழ் இனிமை: நன்று என்று சொல்ல உலகில் எத்தனை எத்தனையோ பொருட்கள்  கண்முன் அணிவகுத்து நிற்கின்றன. மழைந...

கண்ணின்று கண்ணறச் சொல்லினும்

கண்ணின்று கண்ணறச் சொல்லினும்.... கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல் "                            குறள் : 184 கண்ணின்று - கண்ணெதிரே நின்று கண்ணற- இரக்கமில்லாது சொல்லினும் - சொன்னாலும் சொல்லற்க - சொல்லாதிருப்பீராக முன்- முன்னால்  இன்று - இல்லாதிருக்கும்போது பின்னோக்கா - பின் விளைவுகளை எதிர்கொள்ள முடியாத சொல் - சொல்லுதல், சொற்கள்   நேராக நின்று கடுமையான சொற்களைச் சொன்னாலும் சொல்லலாம்; ஆனால் ஒருவர் இல்லாதபோது   பின்விளைவை எதிர் கொள்ள முடியாத  தவறான சொற்களைப் பேசுதல் கூடாது . விளக்கம் :  ஒருவன் கண் எதிரே இருக்கும்போது கடுமையான வார்த்தைகளைப் பேசிவிடலாம். அது ஏதோ ஒரு காரணத்திற்காகப் பேசிய பேச்சாக இருக்கும். அதனால் பெரிய குற்றம் ஒன்றும் ஏற்பட்டுவிடாது. ஆனால்  ஒருவர் இல்லாத வேளையில் அவரைப்பற்றிப் பேசுதல் புறங்கூறுதலைவிடக் கொடிய குற்றமுடையதாக கருதப்படும். ஒருவரைப்பற்றி அவர் இல்லாத  நேரத்தில் தவறாக பேசி விட்டோமானால்  பிறகு எப்போதும் அவர் எதிரில் நின்று ...

பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து தேனுலா தமிழுலா தேடலா (ல்) பால்நிலா வானுலா வந்து வாழ்த்துச் செய்தி வாசித்தலா! கவியுலா கொண்டு தென்றல் காதோடு கவி பாடலா! கைபேசி கிண்கணியென  கிண்ணரம் இசைத்து தத்தை மொழிபேசி வாழ்த்தலா(ல்) உள்ளம் மகிழ்ச்சி கடலிலா! இறையருள் இல்லம் நிறைத்ததா(ல்) நலமும் வளமும்  நல்லாட்சி நடத்தலா! இன்பம் நிரந்தர  குடியுரிமை கொண்டலா(ல்) நெடிய புகழ் காண்டலா! வானும் நிலனும் போல வாழ்க என்னும் எழுத்துலா கட்செவி அஞ்சலேறி வந்தது இன்பச் சிற்றுலா! வாழ்க....பல்லாண்டு பல்லாண்டு...பல்லாயிரம் ஆண்டு இன்றுபோல் என்றும் உவந்து!               - செல்வபாய் ஜெயராஜ் " .

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை....

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை.... " பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது"                           குறள் : 811 பருகுவார் - குடிப்பவர்,அருந்துபவர் போலினும் -போன்று இருந்தாலும் பண்பிலார்- நற்குணமில்லாதார் கேண்மை -நட்பு பெருகலிற்- வளர்வதைவிட குன்றல் - தேர்தல்,குறைந்து போதல் இனிது- நன்று,இனிமையானது மிகுந்த அன்பால் தம் கண்களால் பருகுவதுபோல்  நெருக்கமாகப் காணப்பட்டாலும் நற்பண்பு இல்லாதவரோடு கொண்டிருக்கும் நட்பு வளர்வதை விட குறைந்து போதலே இனிமை தருவதாகும். விளக்கம்: மிகுந்த அன்பு உள்ளதுபோல காட்டிக் கொள்வதற்காக சிலர் நம்மிடம் மிகவும் நெருங்கிப் பழகுவர். ஆனால் அவரிடம் உண்மையான  அன்பு இருக்காது. நற்பண்பு உள்ளவர்களிடம் போலியான எந்த செயலும் இருக்காது. நற்பண்பு இல்லாத ஒருவர் எவ்வளவுதான் நெருக்கம் காட்டினாலும் அந்த நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தல் கூடாது. அது வளர்வதிலும் தேய்ந்து போதலே  இனிமை தருவதாக இருக்கும். நம்மையே தூக்கிச் சாப்பிட்டுவிடுவதுபோல உருகி உருகி அன்பைப் பொழியும் ...

உரைப்பார் உ ரைப்பவை எல்லாம்....

உரைப்பார் உரைப்பவை எல்லாம்.... " உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ் "                                                                           குறள்.  : 232  உரைப்பார் -சொல்லுபவர் உரைப்பவை -சொல்லுபவை எல்லாம்-அனைத்தும் இரப்பார்க்கு-  ஏற்பவர்க்கு ஒன்று- ஒன்று ஈவார்மேல் -கொடுப்பவர் மேல் நிற்கும்-நிலைத்திருக்கும்  புகழ்-- புகழ் உலகத்தில் புகழ்ந்து சொல்பவர் சொல் எல்லாம் இரப்பவர்க்குக் கொடுப்பதால் கிடைக்கும் புகழாக நிலைத்து  நிற்கும். விளக்கம்:  இவ்வுலகத்தில் புகழ்ந்து பேசப்படுவது எது?  ஈகை மட்டுமே பலராலும்  பல இடங்களில் புகழ்ந்து பேசப்படும். இரப்பவர்க்கு இல்லை என்று சொல்லாது வழங்கும் பெருந்தன்மையாளர்களையே இவ்வுலகம் கொண்டாடி மகிழும். இந்தப் பாடலில் வள்ளுவர் உரைப்பார் உரை என்ற ஒரு சொற்றொடரைக் கையாண்டுள்ளார். உரைப்பார் உரை என்றால் என்ன? ஒர...

சென்னா மசாலா செய்வது எப்படி ?

சென்னா மசாலா செய்வது எப்படி? பூரி சப்பாத்தி என்றால் கூடவே சென்னா மசாலா வேண்டும். அப்போதுதான் முழு திருப்தியோடு சாப்பிட்டது போல இருக்கும். மற்ற எந்த கூட்டுகளையும்விட சென்னா மசாலாவுக்கு அப்படி ஒரு மவுசு. பஞ்சாபிக்காரர்கள் சென்னா மசாலா செய்வதில் கைதேர்ந்தவர்கள். அவர்களிடம் கேட்டுக் கேட்டு நானும் கற்றுக்கொண்டேன். சென்னா மசாலா செய்வதற்கு கற்றுக்கொள்ளணுமா? சென்னா மசாலா கடைகளில்  கிடைக்கிறது வாங்கிப் போட்டுச் செய்தால் கமகமக்கும் சென்னா மசாலா ரெடி என்பீர்கள். எதுவும்  பக்குவமாகச் செய்ய வேண்டும். இல்லை என்றால் உன்னை எல்லாம் யார் சென்னா மசாலா வைக்கச் சொன்னது? என்று கிண்டலடிப்பார்கள். வாருங்கள் யாரும் குறை சொல்லாதபடி சுவையான சென்னா மசாலா செய்வது எப்படி என்று பார்ப்போம். சென்னா மசாலா கிரேவி  செய்வதற்குத் தேவையான பொருட்கள்: கொண்டைக்கடலை: மூன்று கப்(வெள்ளை) வெங்காயம் : இரண்டு ( பெரியது) (பொடியாக நறுக்கியது) தக்காளி  - மூன்று (அரைத்து வைத்துக் கொள்ளவும்) இஞ்சிப்பூண்டு விழுது: இரண்டு தேக்கரண்டி கொத்தமல்லித்தழை : இரண்டு கையளவு( நறுக்கியது ) கரம் மசால தூள் - ஒரு தேக்கரண்டி சென்னா மசால...

அறத்தான் வருவதே இன்பம்.....

  அறத்தான் வருவதே இன்பம்.... அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம் புறத்த புகழும் இல"                  குறள் : 39 அறத்தான் - அற வழியில் வருவதே -கிடைப்பதே இன்பம்- மகிழ்ச்சி மற்றெல்லாம்- மற்றவை எல்லாம் புறத்த- அறத்திற்குப் புறம்பான புகழும் -புகழ் இல் - இல்லை ஒருவன் செய்யும் அறத்தால் கிடைக்கும்  இன்பமே பெருமைக்குரிய இன்பமாகும். பிற செயல்களால் கிடைக்கும் புகழ் இன்பம் தருவதாக இருந்தாலும் அது சிறந்த புகழாகாது. விளக்கம்:  இன்பமும் புகழும் பல வழிகளில்  வந்து சேரும்.  சிலருக்கு ஈட்டிய பொருளால்  இன்பம் வரலாம்.  இன்னும் சிலருக்குச்  செய்யும் செயலால்  இன்பமும்  புகழும் வந்து சேரலாம்.  ஆனால் இவை யாவும் அறவழியில்  வந்து சேர்ந்தவையாக இருக்க   வேண்டும்.  அதுதான் உண்மையான இன்பம்.  அறவழி நின்று ஈட்டப்படாத  புகழும் இன்பமும் பெருமை தருவதாக  இருக்காது. ஒருவன் சிறப்பான  புகழைப் பெற வேண்டும் என்று விரும்பினால்  நல்வழி பொருளீட்ட வேண்டும்.  அதனை நல்வழியில் பயன்படுத்த...

உலக இட்லி தினம்

உலக இட்லி தினம் மார்ச் 30 உலக இட்லி தினம். இட்லிக்கும் ஒரு தினமா? மீந்து போன இட்லி மாவில் சுடும் தோசைக்கே ஒரு தினம் இருக்கும்போது இட்லிக்கு ஒரு தினம் இருக்கக்கூடாதா என்ன? இட்லி என்றாலே தமிழர் உணவுதான். இட்லி சாம்பாருக்குப் பேர் பெற்றவர்கள் நாம் தான் . இதில் பெருமை உண்டு. எவ்வளவுதான் பெருமைமையாகப் பேசினாலும் இட்லியின் பிறப்பிடம் தமிழகம் இல்லையாம். என்னது இட்லி நம்ம ஊர்  உணவு இல்லையா? இவ்வளவு நாளும் எங்க ஊர் இட்லிக்கு இணையாகுமா உங்க ஊர் உணவு வகைகள் ?என்று எத்தனை இடங்களில் எத்தனை மொழி பேசுபவர்களின் சொல்லிச் சொல்லிப் பெருமைப் பட்டிருக்கிறேன். இப்படி பொசுக்கென்று இப்படி சொல்லிலிபுட்டீங்களே....என்கிறீர்களா? இட்லி பெருமை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டதா? விடுங்கள். இந்தோனேசியாகாரர்கள் வேண்டுமென்றால் இட்லியின் தாயகம் இந்தோனேசியா தான் என்று  பெருமைப்பட்டுக் கொள்ளட்டும். ஆனால் இட்லியைத் தரமேம்பாட்டுக்கு உட்படுத்திய பெருமை நம்மைத்தான் சேரும்.இதை யாரும் தட்டிப்பறித்துச் சென்றுவிட முடியாது. எத்தனை விதமான இட்லி வகைகளை அவித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். எந்தத் தானியத்திலும் இட...

எடுத்துக்காட்டு உவமை அணி

    எடுத்துக்காட்டு உவமை அணி உவமையும் உவமேயமும் தனித்தனித் தொடர்களாக வந்து அவ்விரண்டையும் இணைக்கின்ற உவம உருபு வெளிப்படாமல் மறைந்து நின்று பொருள் தருமானால் அது எடுத்துக்காட்டு உவமை அணி எனப்படும். தெரிந்த ஒரு பொருளைக் கொண்டு தெரியாத ஒரு பொருள் விளக்கப்படுகிறது. ஆனால் உவம உருபு  காணப்படவில்லை. " பண்ணெண்ணாம் பாடற் கியைபின்றேல் கண்ணென்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்" இந்தக் குறளில், பாடலோடு பொருந்தவில்லை என்றால் இசையால் என்ன பயன்? அதுபோல இரக்கம் இல்லை என்றால்  கண்களால் என்ன பயன்? என்று கேட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கே 'போல 'என்ற உவம உருபு மறைந்து நின்று பாடலோடு பொருந்தவில்லை என்றால்  இசையால் என்ன பயன்? இரக்கம் இல்லை என்றால் கண்களால் என்ன பயன் ? என்று மட்டும் சொல்லப்பட்டுள்ளது. 'போல' என்ற உவம உருபு  மறைந்து நின்று அதற்கான பொருளை விளக்குகிறது. இங்கே, உவமை -  பாடலோடு பொருந்தாத இசை உவமேயம்-  இரக்கம் இல்லாத கண்கள் உவம உருபு-   போல (மறைந்து வந்துள்ளது) உவமைக்கும் உவமேயத்திற்கும் இடையே உள்ள உவம உருபு மறைந்து நின்று பாடலின் பொருளை விளக்குகிறது.  இவ...

செயற்கரிய யாவுள நட்பின்...

" செயற்கரிய யாவுள நட்பின்...   செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு"                   குறள் :781                    செயற்கு - செய்து கொள்வதற்கு அரிய- அருமையான, யாவுள - எதேனும் உளதோ? நட்பின் - நட்பைப்போல வினைக்கு - செயலுக்கு அரிய- சிறப்பு தரக்கூடியவை யாவுள -ஏதேனும் உளதோ? காப்பு - பாதுகாப்பு நட்பைப்போல் செய்து கொள்வதற்கு  அருமையானவை ஏதேனும் உளதா? அதுபோல நாம் செய்யும் செயலுக்குச் சிறப்பான பாதுகாவலனாக இருக்கக் கூடியது ஏதேனும் இருக்கின்றதா? விளக்கம் : இரண்டு கேள்விகளை நம் முன் வைத்து நம்மையே முடிவு செய்துகொள்ளச் சொல்வதாகத்தான் இந்தக்குறள் அமைந்துள்ளது. நட்பைப் போல தேடிச் செய்துகொள்ள அரிய செயல்கள் ஏதேனும் உள்ளனவா? நட்பு என்பது அருமையான செயல். செய்க பொருளை என்ற வள்ளுவர் இங்கே செய்க நட்பை என்கிறார். தேடித் தேடிச் சேர்த்து வைத்துப் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டியது நட்பு. நட்பை ஏற்படுத்திக் கொள்ளுதல் எளிதன்று. அதுபோல ஒருவர் செய்யும் செயலுக்கு நட்பு போல்  அரிய காவல் ...