Posts

Showing posts from September, 2023

பணி நிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவுப் பாராட்டு மடல் முட்டி நிற்கும் மஞ்சு தனை தொட்டு விளையாடும் காற்றாலை எட்டு நிற்போரையும் ஏந்தி முகம்  பார்க்க வைக்கும் ஆவரை குளத்தில் கட்டழகு செல்லத்துரை இணையர் பெற்றெடுத்த தலைமகன் செல்லப்பா ஆசிரியர்  வட்டமிட்டு மணமகள் லதாவைத் தொட்டநாள்  திட்டமிட்டு இறைவன் வகுத்தநாள்! ஆஸ்திக்கும் ஆசைக்குமாய்ப் பிள்ளைகள் அன்புக்குக் கிடைத்தப் பரிசுகள்  வானும் நிலவும் போல வாய்த்த திந்த இனிய இல்வாழ்க்கை தேனினும் இனிய திவ்விய நாமத்தைத் தீர்க்கமாய்ப் பற்றி அருட்பணி செய்தலால் வானாதி வானவராம் வல்ல நல்நாதர் வரமாய்த் தந்தணி செய்த நல்வாழ்க்கை! வாணிக்கு வார்த்தையால் தோரணங்கட்டி மணியாம் மாணவரணிதிரட்டி அறப்பணி செய்தீர் பணிசெய் இடமெங்கும் பேச்சுக்கலை வளர்த்தீர் பேரணி திரட்டி பெரும்பெயர்ச்  சேர்த்தீர் அறப்பணி பொதுப்பணி அருட்பணியென தொடர்ப்பணி தொய்வில்லாச் சிறப்பணி யாற்றினீர் குமுகப் பிணி தீர்க்கும் நற்பணியில் முதல்வனாய் நின்று முழுக்களப்பணி ஏற்றீர்! யாருக்குமே நீ செய்வதில்லை வஞ்சம் பாருக்குத் தெரியும் உன் நெஞ்சம் பேருக்கு உழைப்பரிடம் இருக்கும் வஞ்சம் பெருமை உன்னிடம் வெறுமனே துஞ்சும் உ...

இனியது எது

இனியது எது.. வாழ்க்கை இனிமையாக இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் ? கை நிறைய பணம் வேண்டும். ஆசைப்பட்டப் பொருட்கள் எல்லாம் வாங்கி சாப்பிட வேண்டும். விரும்பிய ஆடைகளை எல்லாம்  அணிந்து அழகு பார்க்க வேண்டும். உலகிலுள்ள எல்லா நாடுகளையும் சுற்றிப் பார்க்க வேண்டும். அழகான வீடு வேண்டும். கால்மேல் கால் போட்டு இருந்து சாப்பிட வேண்டும். அன்பான மனைவி  வேண்டும். பேர் சொல்ல அறிவான குழந்தைகள் வேண்டும்.சுற்றம் சூழ வாழ்க்கை இனிதாய்  ஓடிட  வேண்டும். நாளொரு உடை வேண்டும். பொழுதெல்லாம் உடன் நடக்க... உரையாட...  மகிழ்ச்சியையோடு உறவாட நண்பர்கள் உடனிருக்க வேண்டும். ஏன்? எதற்கு ?எங்கே? என்று கேட்காத பெற்றோர் வேண்டும். துள்ளித் திரிய கால்கள் வேண்டும். தொட்டுத் தழுவ ஓடியாட பட்டாம்பூச்சி சூழ் மலர் வனம் வேண்டும். நோயில்லா உடல் வேண்டும். ஏனென்று கேட்க  விழுந்தால் தூக்கிவிட அருகில் வைத்து ஆதரிக்க பிள்ளைகள்  வேண்டும் . இவைதான் இனிமை. இப்படி இனிமை ஆளுக்கு ஆள் காலத்திற்கு காலம் இடத்திற்கு இடம் மாறுபடும்.  வேறுபடும். இவைதான் இனிமை என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறனர்....