Posts

Showing posts with the label நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை -அதிவீரராம பாண்டியர்

நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை

நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை" ஆமாங்க...  நாளும் கிழமையும் பார்த்துக் கொண்டிருந்தால் எளியவர்கள் வயிற்றுப் பாட்டுக்கு வெளியில் போய் வேலை செய்வதற்கு எந்த நாளைத் தேர்ந்தெடுப்பது? வறுமை எல்லாவற்றையும் கடந்தது. சகுனம் பார்த்தலோ நல்ல நாளோ கெட்ட நாளோ எதுவும் கிடையாது. அவர்களுக்கு எல்லா நாளும் நல்ல நாள் தான். ஒருவர் சிந்தனையில் ஓடுவதெல்லாம் இன்றைய பொழுது நல்லதாய் இருக்க வேண்டும் நல்லதையே நடக்க வேண்டும் என்பதாக இருக்க வேண்டும். ஒரு வேளை சோற்றுக்கு வழி பிறக்க ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் வயிறு நிறைந்து விட்டால்.... வேண்டாத  சிந்தனைகள் எல்லாம் வந்து தலையை நீட்டி  எட்டிப் பார்க்கும். அவள் குறுக்கே வந்து விட்டாள். போன காரியம் விளங்குன மாதிரிதான்  என்று பக்கத்து வீட்டுக்காரர்களையும் அக்கம் பக்கத்தினரையும் பார்த்து முணுமுணுக்க வைக்கும்.  ஆக்கம் கெட்டவள்.....ஆக்கம் கெட்டவள் என்று புலம்ப வைக்கும். சிலர் மூஞ்சியில் விழித்தாலே விளங்காது  என்று சொல்ல வைக்கும்.  பாம்புக் கண்ணு....பாண்புக்கண்ணு என்று பாம்பை விட அதிக விஷம் கொண்ட வைக்கும...