எல்லைக்கோடு
எல்லைக்கோடு பெட்டைக்கோழி ஒன்று தன் ஆறு குஞ்சுகளோடு ஆனந்தமாக வாழ்ந்து வந்தது. ஒவ்வொரு நாளும் இரை தேட செல்வதற்கு முன்பு தன் குஞ்சுகளைப் பத்திரமாக இருக்கும்படி அறிவுறுத்திவிட்டுச் செல்லும். இப்படியே நாட்கள் கடந்தன. குஞ்சுகளும் பறக்க பழகிக் கொண்டன. தாய் கொண்டு வரும் தானிய மணிகள் ஆறு குஞ்சுகளும் வயிறார உண்பதற்கு போதுமானதாக இருப்பதில்லை. குஞ்சுகளையும் தன்னோடு அழைத்துச் செல்ல தாய்க் கோழி நினைத்தது. "பிள்ளைகளே! இன்று முதல் நீங்களும் என்னோடு இரை தேட வாருங்கள். நாம் அனைவரும் சேர்த்து இரை தேடினால் நமக்குப் போதுமான உணவு கிடைக்கும்.வாருங்கள் நாம் போவோம் "என்றது. எல்லா குஞ்சுகளுக்கும் ஒரே மகிழ்ச்சி. "ஊரு சுற்றிப் பார்க்கப் போறோம் " என்று உற்சாகத்தில் துள்ளிக் குதித்தன . ஆனால் குட்டி தங்கையான ராசுக் குட்டிக்கு மட்ட...