யார் அறிவாளி?
யார் அறிவாளி? தூக்கணாங்குருவிக்கு இணையான அறிவார்ந்த பறவை வேறொன்றும் இல்லை. பின்னல் போன்ற அதன் கூடு கலையார்வம் கொண்டோரும் வியக்கும் வண்ணம் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டிருக்கும். அது மட்டுமல்ல . தன் கூட்டிற்கு வெளிச்சம் வேண்டும் என்பதற்காக கூட்டின் உள்பக்கம் முழுவதும் சேற்றை அள்ளிப் பூசி வைத்துவிடுமாம். சேறு காய்வதற்கு முன்பாக மின்மினி பூச்சிகளைக் கொண்டுவந்து சேற்றில் ஒட்டி வைத்துவிடுமாம். இதன் மூலம் கூட்டிற்கு நல்ல வெளிச்சம் கிடைக்க வழி செய்து விடுமாம். இந்தச் சின்ன பறவைக்குள் இத்தனை அறிவா! வியப்பாக இருக்கிறதல்லவா! தூக்கணாங்குருவியைப் போன்று அனைவருக்கும் அறிவார்ந்த செயல்களில் ஈடுபட வேண்டும் என்று ஆசைதான். ஆனால் நடக்கிற காரியமா என்ன? அனைவருக்கும் அறிவின் மீது ஒரு தாகம் உண்டு. யாருமே தன்னை அறிவற்றவர் என்று ஒத்துக் கொள்வதில்லை. யாராவது தப்பித்தவறி முட்டாள் என்று சொல்லிவிட்டால் போதும் , கோபம் தலைக்கு ஏறி தையதக்க... என்று குதிக்க ஆரம்பித...