Posts

Showing posts with the label ஆண் குழந்தைகளுக்கு

தாலாட்டு

Image
                  தாலாட்டு ஆராரோ ஆரிரரோ-என் ஆனந்தமே ஆராரோ ஆடிவரும் பூங்காற்றோ _ எம்மை ஆளவந்த மகராசரோ ஆராரோ ஆரிரரோ _ என் ஆனந்தமே ஆராரோ  பாட்டி மடியினிலே பஞ்சு மெத்தை தொட்டினிலே தாத்தா வருமுன்னே  தங்கமே நீ கண்ணுரங்கு! சித்திரமே முத்தமிழே _என் செங்கரும்பே நறுந்தேனே செல்லமே என் சிங்கராசாவே சிணுங்காமல் நீயுரங்கு! அன்னமே என் அழகு ரதமே அம்புலியே அதிசயமே அம்மான் தந்த தொட்டிலிலே செம்மாந்து நீயுரங்கு! ஆராரோ ஆரிரரோ_ என் ஆனந்தமே ஆராரோ! ஆடிவரும் பூங்காற்றோ_ எம்மை  ஆள வந்த மகராசரோ ஆராரோ ஆரிரரோ _என் ஆனந்தமே ஆராரோ அம்மா வரும் வரையில் ஆச்சி துணை இருந்திடுவேன் ஆடிவரும் தூலிகையில் அரசன்போல்  நீயுரங்கு! புட்டிப்பால் தருவாரோ போக்குக் காட்டி வைப்பாரோ பொழுதுமட்டும் கலங்காமல் பொன்மகனே நீ கண்ணுரங்கு! அம்மா குரல் கேட்க அலைபேசி அருகில் வைப்பேன் அன்னமே என் அழகு ரதமே அது கேட்டு நீயுரங்கு! ஆராரோ ஆரிரரோ_என் ஆனந்தமே ஆராரோ! ஆடி வரும் பூங்காற்றோ_ எம்மை  ஆள வந்த மகராசரோ ஆராரோ ஆரிரரோ _ என் ஆனந்தமே ஆராரோ! கலையே என் காவியமே _ உன்னைக் கன்னமிட்ட...