தவறவிட்ட தருணங்கள்
தவறவிட்ட தருணங்கள் மழை பெய்ததும் கலப்பையை எடுத்துச் செல்லாத உழவர்கள் , படிக்கும் காலத்தில் புத்தகத்தை மூடி வைத்துக் கொண்டு தூங்கும் மாணவர்கள் , வேலையின்போது சிரத்தை எடுத்துக் கொள்ளாத ஊழியக்காரர்கள், இளமையில் சின்னச்சின்ன சேட்டைகள் செய்யத் தவறிய இளைஞர்கள் , உடலும் உள்ளமும் உறுதியாக இருக்கும்போது உழைக்கத் தவறிய மனிதர்கள், பணம் புரளும் போது சேமிக்கத் தவறியவர்கள் இவர்கள் எல்லாம் கிடைத்த நல்ல தருணத்தைத் தவற விட்டவர்கள். இவர்கள் மட்டுமல்ல... நம் ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதோ ஒன்றைத் தவறவிட்ட தருணம் கண்டிப்பாக நிகழ்ந்திருக்கும். அதை நினைத்து நினைத்து மறுகி இருப்போம். எல்லாவற்றையும் இழந்தது போன்ற விரக்தியில் இருந்திருப்போம். இனி எனக்கு நல்லதே நடக்காதா என எண்ணி எண்ணி வெதும்பியிருப்போம். இளமையில் காதலைச் சொல்ல முடியாமல் தவறவிட்டுவிட்டு இன்றுவரை தவித்துக் கொண்டிருப்பவர்கள் நிறையபேர் இருப்பர். அதற்கான தருணம் வாய்த்திருக்கும். இருப்பினும் ஏதோ ஒரு பயம்....ஒரு தயக்கம் உங்கள் காதலைச் சொல்ல விடாமல் தடுத்திருக்கும். அதனால் உங்கள் காதல் நிறைவேறாமலே...