முதுமொழிக்காஞ்சியின் துவ்வாப் பத்து
முதுமொழிக்காஞ்சியின் துவ்வாப் பத்து முதுமொழிக்காஞ்சியின் நான்காம் பத்து துவ்வாப் பத்து எனப்படும். துவ்வா என்பது துய்த்தல் என்ற சொல்லின் எதிர்ச்சொல் ஆகும். துய்த்தல் -பயன்படுத்துதல். 'துவ்வா 'என்பது பயனில்லாதது அல்லது பயன்படுத்த முடியாதது என்று பொருள்படும். துவ்வாப் பத்தின் பாடல்கள் உங்களுக்காக... 1. " ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் பழியோர் செல்வம் வறுமையின் துவ்வாது. கடல் சூழ்ந்த உலகில் உள்ள மக்களுள் பழியுடையவரிடம் இருக்கும் செல்வம் வறுமையை விடவும் பயனில்லாததாக கருதப்படும். 2 . "கழி தறுகண்மை பேடியின் துவ்வாது. அளவுக்கு மிஞ்சிய துணிச்சல் கோழையாக இருப்பதைவிடவும் பயனற்ற செயலாகும். 3. " நாணில் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது. பழிபாவம் செய்ய நாணாத வாழ்க்கை பசியோடு கிடப்பதைக் காட்டிலும் பயனற்றதாகக் கருதப்படும். 4. " பேணில் ஈகை மாற்றலின் துவ்வாது." விருப்பம் இன்றிக் கடமைக்காக ஈவது ஒன்றுமே கொடுக்காத கஞ்சத்தனத்தை விடவும் பயனற்றதாகும். 5. " செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது." செய்யக் கூடாதவற்றை மேற்கொண்டு செய்துகொண்டிருப்பது மடமையினும் மடமையாக க...