வள்ளுவரும் வாசுகியும்
வள்ளுவரும் வாசுகியும் திருமண வீடுகளில் தவறாமல் உச்சரிக்கப்படும் பெயர் வாசுகி. வானும் நிலவும் போல... வள்ளுவரும் வாசுகியும் போல... உடலும் உயிரும் போல... என்று வாழ்த்து இல்லாமல் இருக்காது. வள்ளுவரும் வாசுகியும் போல என்பதால் வள்ளுவரின் மனைவி வாசுகி என்பது நமக்குத் தெரியும். அவர்களுக்குள் இருந்த உறவு எப்படிப்பட்டது என்பது பள்ளிப்பருவத்தில் தமிழாசிரியர்கள் வாயிலாக கேட்டிருப்போம். ஒரு சிலவற்றை மறந்து போயிருப்போம். நினைவூட்டலுக்காக சில செய்திகள். அந்த வாசுகி எப்படிப்பட்டவர் ? ஏன் இந்த வாசுகிக்கு இத்தனை மதிப்பு? வள்ளுவரின் மனைவி என்பதினாலா.? இல்லை நாம் கொண்டாடும் அளவுக்கு வேறு ஏதேனும் சிறப்பு குணநலன்கள் கொண்டவரா ? இப்படி எண்ணற்ற கேள்விகள நம் மனதில் எழலாம். நம் கேள்விகள் அத்தனைக்கும் விடையளிப்பதுபோல தொன்மக் கதைகள் பல வாசுகியைப்பற்றி உலா வந்து கொண்டிருக்கின்றன . கொங்கணச் சித்தர் என்று ஒரு சித்தர் உண்டு. அவர் தனது கடுந்தவத்தால் எல்லா வரமும் வாங்கி வைத்திருந்தார். ஆக்கும் வரமும் அழிக்கும் வரமும் கையில் இருப்பதால் மனிதனுக்கு ...